புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பிரபல பைக் தயாரிப்பு நிறுவனம் அதன் புதுமுக மோட்டார்சைக்கிள் ஒன்றின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தின் புதுமுக தயாரிப்புகளில் சிபி350 மோட்டார்சைக்கிள் மாடலும் ஒன்று. இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஹோண்டா இந்தியாவில் களமிறக்கியது. இதற்கேற்ப, லேசான போட்டியை ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு இப்பைக்கின் வாயிலாக ஹோண்டா வழங்கி வருகின்றது.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

அதாவது, இந்தியர்கள் மத்தியில் இப்பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதனை மேலும் அதிகரிக்கச் செய்கின்ற வகையில் விளம்பரம் மற்றும் சிறப்பு சலுகைகள் உள்ளிட்டவற்றை நிறுவனம் வழங்க தொடங்கியிருக்கின்றது. இதனால், சிபி350 ஹைனெஸ் பைக்கின் விற்பனை லேசாக உயரத் தொடங்கியிருக்கின்றது.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

இந்நிலையில், வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கின்ற வகையில் ஹோண்டா நிறுவனம் சிபி350 ஹைனெஸ் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இதன் விலை உயர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

தற்போது ரூ. 1,86,500 என்ற விலையில் இப்பைக் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விலையில் ரூ. 5,500 வரை உயர்த்த ஹோண்டா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய தகவலை ஹோண்டா இருசக்கர வாகன விற்பனையாளர்கள் வாயிலாக வெளி வந்திருக்கின்றது.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

ஆகையால், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இப்பைக் புதிய விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை. இதுகுறித்த தகவலை விரைவில் நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

சமீப காலமாகவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றன. ஆகையால், இந்த விலையுயர்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்றாலும் லேசான கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

ஹோண்டா சிபி350 ஹைனெஸ் மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்தே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதத்தில் இருந்த இந்த இருசக்கர வாகனத்தை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணியில் நிறுவனம் களமிறங்கியது.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

இந்த நிலையில், அடுத்த தரமான நடவடிக்கையாக பைக்கின் விலையை உயர்த்தும் முயற்சியில் ஹோண்டா களமிறங்கியிருக்கின்றது. ஹோண்டா சிபி350 ஹைனெஸ் பைக் இரு வெவ்வேறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

டிஎல்எஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ ஆகிய இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், டிஎல்எக்ஸ் எனப்படும் வழக்கமான வேரியண்டின் விலையே ரூ. 1,86,500 ஆகும். இதைவிட சற்று கூடுதல் விலைக் கொண்ட வேரியண்டாக டிஎல்எக்ஸ் ப்ரோ இருக்கின்றது. இதன் விலை ரூ. 1,92,500 ஆகும்.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

இரு விலைகளும் எக்ஸ்-ஷோரும் மதிப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. கிளாசிக் 350 மட்டுமின்றி ஜாவா மோட்டார்சைக்கிளுக்கும் இப்பைக் போட்டியளித்து வருகின்றது. இப்பைக் ஸ்போர்ட் மற்றும் ரெட்ரோ ஸ்டைலைக் கொண்டிருக்கின்றது.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

இருப்பினும், மாடர்ன் அம்சங்களுக்கு சற்றும் குறைச்சலில்லாத பைக்காக இது இருக்கின்றது. அந்தவகையில், எல்இடி மின் விளக்குகள், நடுத்தர டிஜிட்டல் கன்டோல், ப்ளூடூத் இணைப்பு, டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகிய நவீன கால தொழில்நுட்ப வசதிகள் இப்பைக்கில் இடம்பிடித்திருக்கின்றன.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

ஹோண்டா சிபி350 ஹைனெஸ் பைக்கில் 348.6சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினையே நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.78 பிஎச்பி மற்றும் 30 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

இப்பைக்கின் ஒட்டுமொத்த எடை 181கிலோ ஆகும். ஆகையால், பிற க்ளாசிக் ரக பைக்குகளைக் காட்டிலும் இதைக் கையாள்வது சற்று எளிமையானதாகும். பைக்கின் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் பைக்கின் முன்பக்கத்திலும், ஷாக் அப்சார்பர் பைக்கின் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புது பைக் வாங்கும் பிளான் இருந்தா இப்போவே வாங்கிடுங்க... 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்!

இத்துடன், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் (ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம்) வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், வழுவழுப்பான சாலையில்கூட மிக பாதுகாப்பான பிரேக்கை நம்மால் பெற முடியும். தொடர்ந்து, சிறந்த சாலை இயக்கத்திற்காக 19-18 இன்சிலான அலாய் மற்றும் அதிக கிரிப் வசதிக் கொண்ட டயர்களயும் இப்பைக்கில் நிறுவனம் வழங்கி வருகின்றது.

Most Read Articles

English summary
Honda Planning To Hike CB350 H'ness Prices From 1 April In India. Read In Tamil.
Story first published: Friday, March 26, 2021, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X