விரைவில் இந்தியா வருகிறது ஹோண்டா கோல்டுவிங்... இதோட விலை தெரிஞ்சதுனா பைக் பக்கம் தல வச்சிகூட படுக்க மாட்டீங்க!

இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா மிக விரைவில் கோல்டு விங் இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

விரைவில் இந்தியா வருகிறது ஹோண்டா கோல்டுவிங்... இதோட விலைய கேட்ட அப்பைக் பக்கம் தலைய வச்சிகூட படுக்க மாட்டீங்க!

ஹோண்டா நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றான கோல்டுவிங் வாகனத்தை மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகள் சிலவற்றில் இந்த இருசக்கர வாகனத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

விரைவில் இந்தியா வருகிறது ஹோண்டா கோல்டுவிங்... இதோட விலைய கேட்ட அப்பைக் பக்கம் தலைய வச்சிகூட படுக்க மாட்டீங்க!

இந்த நிலையிலேயே ஹோண்டா கோல்டு விங் பைக்கை நாட்டில் விற்பனைக்கு களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ. 28.2 லட்சம் என்ற உச்சபட்ச விலையிலேயே இந்த வாகனம் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

விரைவில் இந்தியா வருகிறது ஹோண்டா கோல்டுவிங்... இதோட விலைய கேட்ட அப்பைக் பக்கம் தலைய வச்சிகூட படுக்க மாட்டீங்க!

உலக நாடுகளில் இந்த இருசக்கர வாகனம் பல விதமான பேக்கேஜ்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் பிரீமியம் ரக பைக்காகும். ஆடி மற்றும் ஸ்பீக்கர் சிஸ்டம், 7 இன்ச் அளவு கொண்ட டிஎஃப்டி திரை, கைரோகாம்பஸ் நவிகேஷன், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, எலெக்ட்ரானிக்கல்லி அட்ஜெஸ்டபிள் ஸ்கிரீன், ஸ்மார்ட் கீ ஆபரேஷன், நான்கு விதமான ரைடிங் மோட்கள் என பல சிறப்பு அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

விரைவில் இந்தியா வருகிறது ஹோண்டா கோல்டுவிங்... இதோட விலைய கேட்ட அப்பைக் பக்கம் தலைய வச்சிகூட படுக்க மாட்டீங்க!

டூர், ஸ்போர்ட், ஈகோன் மற்றும் மழை ஆகிய நான்கு விதமான ரைடிங் மோட்களே ஹோண்டா கோல்டு விங் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஏபிஎஸ், இரட்டை கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம், ஐடிலிங் ஸ்டாப் வசதி உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் அதில் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

விரைவில் இந்தியா வருகிறது ஹோண்டா கோல்டுவிங்... இதோட விலைய கேட்ட அப்பைக் பக்கம் தலைய வச்சிகூட படுக்க மாட்டீங்க!

கோல்டு விங் பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக இரட்டை விஷ்போன் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த 1,833 சிசி திறன் கொண்ட 6 சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 124.7 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

விரைவில் இந்தியா வருகிறது ஹோண்டா கோல்டுவிங்... இதோட விலைய கேட்ட அப்பைக் பக்கம் தலைய வச்சிகூட படுக்க மாட்டீங்க!

ஆறு ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆகிய இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வில் இந்த பைக் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இதில், மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட கோல்டு விங் பைக்கில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

விரைவில் இந்தியா வருகிறது ஹோண்டா கோல்டுவிங்... இதோட விலைய கேட்ட அப்பைக் பக்கம் தலைய வச்சிகூட படுக்க மாட்டீங்க!

இப்பைக்கில் பெட்ரோல் டேங்க் 21.1 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். பார்க்கவே ஓர் முரடனைப் போன்று காட்சியளிக்கும் இப்பைக்கில் சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக 320 மிமீ அளவுள்ள டிஸ்க், ஆறு பிஸ்டன் காலிபர்களுடன் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது முன் பக்க வீலில் இடம்பெற்றிருக்கின்றது.

விரைவில் இந்தியா வருகிறது ஹோண்டா கோல்டுவிங்... இதோட விலைய கேட்ட அப்பைக் பக்கம் தலைய வச்சிகூட படுக்க மாட்டீங்க!

பின் பக்க வீலில் 316 மிமீ அளவுள்ள ரோடார், மூன்று பிஸ்டன் காலிபருடன் பொருத்தப்பட்டுள்ளது. இது மித மிஞ்சிய வேகத்தைக்கூட நொடிப்பொழுதில் கட்டுப்படுத்திவிடும். இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட கோல்டு விங் பிஎஸ்6 பைக்கையே ஹோண்டா நிறுவனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விரைவில் இந்தியா வருகிறது ஹோண்டா கோல்டுவிங்... இதோட விலைய கேட்ட அப்பைக் பக்கம் தலைய வச்சிகூட படுக்க மாட்டீங்க!

ஆனால் எப்போது விற்பனைக்கு வரும் என்ற துள்ளிய தேதிகுறித்த விபரம் வெளியாகவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் மிக விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Honda Planning To Launch Goldwing BS6 Soon In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X