விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டாவின் புதிய சாகச பயண வகை பைக்!

ஹோண்டா நிறுவனம் விரைவில் தனது புதிய 500சிசி அட்வென்ச்சர் ரக பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பைக் குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டாவின் புதிய சாகச ரக பைக்!

இந்தியாவில் சாகசப் பயணங்களுக்கு ஏற்ற பைக் மாடல்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு கடந்த சில ஆண்டுளாக ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த சந்தையை குறிவைத்து பல புதிய மாடல்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டாவின் புதிய சாகச ரக பைக்!

அந்த வரிசையில், ஹோண்டா நிறுவனமும் புதிய அட்வென்ச்சர் ரக பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஆயத்தமாகி வருகிறது. அதாவது, தனது சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் பைக் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டாவின் புதிய சாகச ரக பைக்!

வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த புதிய சிபி500எக்ஸ் பைக் மாடலை இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்பு இருப்பதாக ஸிக் வீல்ஸ் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. இந்த பைக் நடுத்தர வகை பிரிமீயம் அட்வென்ச்சர் டூரர் வகை மாடலாக இருக்கும்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டாவின் புதிய சாகச ரக பைக்!

இந்த புதிய பைக் மாடலில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 500சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎஸ் பவரையும், 43 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டாவின் புதிய சாகச ரக பைக்!

புதிய ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் முழுமையான விண்ட்ஸ்கிரீன், எல்இடி ஹெட்லைட், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எல்சிடி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ட்ரிப் மீட்டர்கள், எரிபொருள் அளவு காட்டும் வசதி, கியர் பொசிஷன் இண்டிகேட்டர் ஆகிய வசதிகளை பெற்றிருக்கும்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டாவின் புதிய சாகச ரக பைக்!

இந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 5 ஸ்டெப் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதி கொண்ட மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற டயர்கள், அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் ஆகியவையும் முக்கிய அம்ங்களாக இருக்கும்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டாவின் புதிய சாகச ரக பைக்!

கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் கவாஸாகி வெர்சிஸ் 650 மாடல்களுக்கு இடையிலான ரகத்தில் இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்பட உள்ளது. ரூ.6 லட்சத்தில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
According to report, Honda is planning to launch CB500X adventure tourer bike in India very soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X