பிப்.16ல் புதிய பிரிமீயம் பைக்கை அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா... டீசர் வெளியீடு!

வரும் பிப்ரவரி 16ந் தேதி புதிய பிரிமீயம் ரக பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதற்காக, டீசர் ஒன்றையும் இன்று வெளியிட்டு இருக்கிறது.

பிப்.16ல் புதிய பிரிமீயம் பைக்கை அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா

இந்தியாவில் ஆரம்ப மற்றும் நடுத்தர ரக பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம். அண்மையில் ராயல் என்ஃபீல்டு 350 மாடல்களுக்கு போட்டியாக ஹைனெஸ் சிபி350 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அருமையான டிசைன், சிறந்த எஞ்சின் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் வந்த இந்த பைக் மாடலுக்கு நல்ல வரவற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், அடுத்து ஒரு பிரிமீயம் பைக் மாடலை வரும் பிப்ரவரி 16ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ஹோண்டா.

இந்த புதிய மாடல் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், 500சிசி திறன் கொண்ட புதிய ஸ்க்ராம்ப்ளர் வகை பைக் மாடலை ஹோண்டா அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய பைக் மாடல் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன், நவீன தொழில்நுட்ப சிறப்புகளுடன் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 500சிசி மற்றும் 650சிசி மாடல்களை குறிவைத்து களமிறக்கப்படும் வாய்ப்புள்ளது.

மேலும், ஹோண்டா நிறுவனத்தின் பிக்விங் என்ற பிரிமீயம் டீலர்கள் வாயிலாகவே இந்த புதிய பிரிமீயம் பைக் மாடலும் விற்பனை செய்யப்படும். இது நிச்சயம் இந்த ரகத்தில் புதிய மாடலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda Motorcycle company has released a teaser for new premium bike and it will be unveiled on February 16.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X