ரொம்ப நாள் எதிர்பார்ப்பு... விரைவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு வசதி...

விரைவில் ஹோண்டா நிறுவனத்தின் குறைந்த சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களிலும் ப்ளூடூத் இணைப்பு வசதி இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு... விரைவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு வசதி...

ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ், சுசுகி உள்ளிட்ட நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளில் ப்ளூடூத் இணைப்பு வசதியை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் அவற்றின் பட்ஜெட் விலைக் கொண்ட வாகனங்களில்கூட இந்த வசதியை வழங்கி ஆரம்பித்திருகின்றன.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு... விரைவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு வசதி...

ஆனால், ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் நிறுவனமோ அதன் உயர்நிலை இருசக்கர வாகனங்களில் மட்டுமே இந்த வசதியை வழங்கி வருகின்றது. ஹைனெஸ் சிபி350, ஃபோர்ஷா 350, ஃபோர்ஷா 750, எக்ஸ்-ஏடிவி மற்றும் சிபி1000ஆர் ஆகிய இருசக்கர வாகனங்களில் மட்டுமே ப்ளூடூத் இணைப்பு வசதியை ஹோண்டா வழங்கி வருகின்றது.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு... விரைவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு வசதி...

இன்னும் பட்ஜெட் விலைக் கொண்ட, அதாவது, குறைந்த சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் இந்த வசதியை ஹோண்டா அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், இந்த நிலை வெகு நாட்களுக்கு நீடிக்காது என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆமாங்க, ஹோண்டாவின் பட்ஜெட் விலை ஸ்கூட்டர்களிலும் இனி ப்ளூடூத் இணைப்பு வசதி இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு... விரைவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு வசதி...

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, ஹோண்டா நிறுவனம் அதன் இருசக்கர வாகனங்களில் புதிதாக கருவிகளைச் சேர்ப்பதற்கான அனுமதியை இந்தியாவில் பெற்றிருக்கின்றது. இதன் வாயிலாகவே நிறுவனம் அதன் குறைந்த சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் ப்ளூடூத் இணைப்பு வசதியை வழங்க இருப்பதாக தகவகல்கள் வெளியாகியிருக்கின்றன.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு... விரைவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு வசதி...

எனவே, எதிர்காலத்தில் தற்போது ப்ளூடூத் இணைப்பு வசதி இல்லாமல் விற்பனைக்கு வரும் ஆக்டிவா 125, கிரேசியா, எக்ஸ்-பிளட் மற்றும் ஹார்னெட் 2.0 ஆகிய டூ-வீலர்களிலும் ப்ளூடூத் வசதி இடம்பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ப்ளூடூத் இணைப்பு வசதியை நிறுவனம் விருப்ப தேர்வாகவே வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு... விரைவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு வசதி...

அதாவது, வழக்கமான அம்சமாக இல்லாமல் கூடுதல் கட்டணத்தில் விருப்ப தேர்வு மாடலில் மட்டுமே இவ்வசதியை ஹோண்டா வழங்கும் என கூறப்படுகின்றது. அதாவது, பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களில் கூடுதல் கட்டணத்துடன் ப்ளூடூத் இணைப்பு வசதியை நிறுவனம் வழங்க இருக்கின்றது.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு... விரைவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு வசதி...

எனவே, ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனம் ரூ. 5 ஆயிரம் விலையுயர்வுடன் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக நாடுகள் சிலவற்றில் ரோட்சிங்க்-ஹோண்டா கூட்டணி, ஸ்மார்ட் போன் வாயிலாக ஸ்கூட்டர்களுக்கு குரல் கட்டளை அளிக்கும் வசதியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு... விரைவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு வசதி...

இந்த நிலையிலேயே இந்த கூட்டணி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களில் ப்ளூடூத் வசதியை அறிமுகம் செய்ய பணியில் களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Honda’s Trademark Application For RoadSync Has Been Approved In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X