ஹோண்டாவின் புதிய சிபி பைக், சிபி350ஆர்எஸ்-இன் டெலிவிரிகள் துவங்கியது!!

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி350ஆர்எஸ் பைக்கின் டெலிவிரி பணிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டாவின் புதிய சிபி பைக், சிபி350ஆர்எஸ்-இன் டெலிவிரிகள் துவங்கியது!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலகளவில் விற்பனை செய்யப்படும் முதல் சிபி வரிசை பைக் மாடலாக சிபி350, ராயல் என்பீல்டின் மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹோண்டாவின் புதிய சிபி பைக், சிபி350ஆர்எஸ்-இன் டெலிவிரிகள் துவங்கியது!!

ரூ.1,85,000 என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த பைக்கை தொடர்ந்து நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு மற்ற நாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது ஹோண்டா சிபி மாடலாக சிபி350ஆர்எஸ் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹோண்டாவின் புதிய சிபி பைக், சிபி350ஆர்எஸ்-இன் டெலிவிரிகள் துவங்கியது!!

பிரகாசமான சிவப்பு மெட்டாலிக் மற்றும் கருப்பு& பேர்ல் ஸ்போர்ட்ஸ் மஞ்சள் என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் சிபி350ஆர்எஸ் பைக்கின் விலைகள் சிபி350 பைக்கை காட்டிலும் சற்று அதிகமாக ரூ.1.96 லட்சம் மற்றும் ரூ.1.98 லட்சம் ஆக உள்ளன.

ஹோண்டாவின் புதிய சிபி பைக், சிபி350ஆர்எஸ்-இன் டெலிவிரிகள் துவங்கியது!!

ஹோண்டா சிபி பிராண்டின் பைக்கிற்கான அனைத்து பண்பையும் பெற்று வந்துள்ள இந்த பைக் நகர்புறத்திற்கு ஏற்றதான ஸ்டைல் மற்றும் சாலையில் செல்லும்போது எவர் ஒருவரையும் திரும்பி பார்க்க வைக்கும் தோற்றத்திற்காக தயாரிப்பு நிறுவனம் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளது. அப்படிப்பட்ட பைக் இப்போது டெலிவிரி செய்யப்பட துவங்கியுள்ளது.

ஹோண்டாவின் புதிய சிபி பைக், சிபி350ஆர்எஸ்-இன் டெலிவிரிகள் துவங்கியது!!

முதல் டெலிவிரியை துவக்கி வைத்தபின் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா பேசுகையில், "இளைஞர்களிடம் இருந்து சிபி350ஆர்எஸ் பைக்கிற்கு கிடைத்துவரும் பெரும் வரவேற்பை கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

ஹோண்டாவின் புதிய சிபி பைக், சிபி350ஆர்எஸ்-இன் டெலிவிரிகள் துவங்கியது!!

சாலையின் பாய்மரம் (ஆர்எஸ்) கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த பைக் இயக்கத்தின் போது மிகவும் மென்மையான பயணத்தை வழங்கக்கூடியது. மேம்படுத்தப்பட்ட நகர்புற ஸ்டைல் மற்றும் ஆற்றல்மிக்க என்ஜின் மூலமாக சிபி350ஆர்எஸ் பைக் உங்களது பாணியில் நீங்கள் வாழ மிகவும் ஏற்றதாக இருக்கும்" என தெரிவித்தார்.

ஹோண்டாவின் புதிய சிபி பைக், சிபி350ஆர்எஸ்-இன் டெலிவிரிகள் துவங்கியது!!

இதன் காரணமாகவே தைரியமாக இந்த பைக்கிற்கு 6-வருட உத்தரவாதத்தை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் 3 வருடத்தை பைக்கின் விலையிலும், கூடுதல் 3 வருடத்தை கூடுதல் பணம் செலுத்தியும் பெற்று கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Honda starts customer deliveries of all new CB350RS. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X