ஹோண்டா சிபி350 பைக்கில் ஒரு சூப்பர் பயணம்... அருணாச்சலப் பிரதேசத்தில் துவங்கியது!

இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் ஏழு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசம் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாக பார்ப்போரை வசீகரித்து வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள அழகிய பிரதேசங்களை வெளியுலகுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் அருணாச்சலப் பிரதேச சுற்றுலாக் கழகமும், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனமும் கைகோர்த்துள்ளன.

ஹோண்டா சிபி350 பைக் பயணம் துவங்கியது

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அழகிய பிரதேசங்களின் அறிந்து கொள்ளும் விதமாக ஒரு சிறப்பு பைக் பயணத்தை அருணாச்சலப் பிரதேச சுற்றுலாக் கழகமும், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. Honda SunChasers2021 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த பைக் பயணத்தின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஹோண்டா சிபி350 பைக்கில் பயணம்

இந்த பைக் பயணத்தில் ஹோண்டா நிறுவனத்தின் புத்தம் புதிய ஹைனெஸ் சிபி350 பைக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் பிரபலமான ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர்கள் 11 பேர் ஹோண்டா சிபி350 பைக்குகளில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள ருக்ஸின் என்ற இடத்தில் இருந்து இந்த சாகசப் பயணம் துவங்கியது. இந்த பைக் பயணத்தில் 11 ரைடர்களில் ஒருவராக டிரைவ்ஸ்பார்க் தளத்தின் மேனேஜிங் எடிட்டர் ஜோபோ குருவில்லாவும் பங்கு கொண்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஹோண்டா பைக்

இந்த சாகசப் பயண துவக்க நிகழ்ச்சியில் அருணாச்சலப் பிரதேச சட்டசபை சபாநாயகர் பசாங் டோர்ஜி சோனா மற்றும் அரசு உயர் அதிகாரிகளும், ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் யத்வீந்தர் சிங் குலேரியாவும் கலந்து கொண்டு கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

இந்த சாகசப் பைக் பயணம் 7 நாட்கள் பயணத் திட்டத்துடன் சுமார் 800 கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் அழகிய பிரதேசங்களை சவாலான சாலைகளில் ஹோண்டா சிபி350 பைக்கில் ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர்கள் பயணித்து வருகின்றனர். ஹிமாலயன் மோட்டார்ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு தலைவர் விஜய் பார்மர் தலைமையில் இந்த பயணம் துவங்கி உள்ளது. போம்ஜிர், ஹயுலியாங், வலோங் மற்றும் நம்சாய் ஆகிய இடங்கள் வழியாக இந்த பயணம் செல்கிறது.

புதிய அனுபவம்

இந்த சாகசப் பயணம் குறித்து அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டு கூறுகையில்,"இந்த சாகசப் பயணத்தில் பங்கு கொண்டுள்ள ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களை வரவேற்கிறோம்.

அருணாச்சலப் பிரதேசத்தின் வெளியுலகம் அறிந்திராத அழகிய பிரதேசங்கள், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தெரிந்துகொள்வதற்கு ஹோண்டா சிபி350 பைக்கில் பயணித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ரைடர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும். பாதுகாப்பான பயணத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்," என்று கூறி இருக்கிறார்.

ஹோண்டா சிபி350 பைக் பயணம் துவக்க நிகழ்ச்சி

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரி குலேரியா கூறுகையில்,"இந்த அழகிய அருணாச்சலப் பிரதேசத்தின் அறிந்திராத பல அழகிய பிரதேசங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள பைக் பயணம் மேற்கொள்ளும் எமது பத்திரிக்கை நண்பர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும். பாதுகாப்பான பயணத்திற்கு எனது வாழ்த்துகள்.

நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடும் வேளையில் இந்த ஹோண்டா சன்சேஸர்ஸ் 2021 பைக் பயணமும் மிக முக்கியமானதாக அமையும்," என்று தெரிவித்தார்.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் சிறப்பம்சங்கள்

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட மாடலாக இந்த பைக் வந்துள்ளது.

இந்த பைக்கில் 348சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.8 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

இந்த பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர், க்ரோம் பூச்சுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்த பைக்கில் ஸ்மார்ட்ஃபோன் வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டமும் மிக முக்கிய வசதியாக இருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல சக்கரமும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும்,பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி350 பைக் சிறப்பம்சங்கள்

இந்த பைக் கருப்பு, சிவப்பு, சில்வர், நீலம், சாம்பல் மற்றும் பச்சை ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஹோண்டா நிறுவனத்தின் பிக்விங் ஷோரூம்கள் வாயிலாக இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் டிஎல்எக்ஸ் வேரியண்ட் ரூ.1.85 லட்சத்திலும், டிஎல்எக்ஸ் புரோ வேரியண்ட் ரூ.1.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கின்றன. ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கும், பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளுக்கும் இது நேரடி போட்டியாக இருந்து வருகிறது. விலை, தொழில்நுட்ப அம்சங்கள், டிசைன் என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பைக் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. நாடுமுழுவதும் உள்ள பிக்விங் டீலர்கள் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda Motorcycles & Scooters India (HMSI) has flagged off its first edition of their 'Honda SunChasers 2021 — H'ness Quest for the Land of the Rising Sun'. The ride event is in association with Arunachal Pradesh Tourism.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X