ஹைனெஸ் சிபி350 அடிப்படையில் புதிய பைக்கை இந்தியாவில் களமிறக்கும் ஹோண்டா!

ஹைனெஸ் சிபி350 பைக்கின் அடிப்படையில் ஒரு புதிய வகை பைக் மாடலை வரும் 16ந் தேதி ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹைனெஸ் சிபி350 அடிப்படையில் புதிய பைக்: பரபரக்கும் ஹோண்டா!

கடந்த சில மாதங்களுக்கு முன் ஹைனெஸ் சிபி350 என்ற பெயரில் புதிய பைக் மாடலை ஹோண்டா இந்தியாவில் களமிறக்கியது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மாடல்களுக்கு மிக நேரடி போட்டியாக இந்த பைக் நிலைநிறுத்தப்பட்டது. இந்த பைக்கிற்கு ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், அண்மையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஒரு புதிய பைக்கின் டீசரை வெளியிட்டதுடன், வரும் 16ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டு பத்திரிக்கைகளுக்கு குறிப்பு அனுப்பி இருந்தது.

இது என்ன பைக் மாடலாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கை துறையினர் தலையை பிசைந்து செய்திகளை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில், அந்த புதிய மாடலானது ஹைனெஸ் சிபி350 அடிப்படையிலான புதிய 350சிசி பைக் மாடலாக வர இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய மாடலுக்காக ஹோண்டா நிறுவனம் ஒரு பிரத்யேக இணையப் பக்கத்தை உருவாக்கி இருக்கிறது. அந்தப் பக்கத்தின் கணிப்பொறி நிரல்களில், சிபி350 ஆர்எஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் குறிப்பிடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே, இந்தியாவின் 350சிசி பைக் மார்க்கெட்டில் தனது சந்தையை வலுப்படுத்தும் விதமாக அடுத்து ஒரு பைக் மாடலை ஹோண்டா களமிறக்க இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பைக்கில் ஆர்எஸ் என்பது ராலி ஸ்போர்ட் வகை மாடலாக இருக்கும் என்பது தெரிகிறது.

ஹோண்டா ஹைனெஸ் பைக்கில் இருக்கும் அதே 348சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.5 எச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

மொத்தத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களின் சந்தையை குறிவைத்து மிக தீவிரமாக ஹோண்டா நிறுவனம் செயலாற்றி வருவது தெரிய வந்துள்ளது. வரும் 16ந் தேதி இந்த பைக் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 10, 2021, 12:05 [IST]
English summary
According to report, Honda is planning to launch new 350 bike in India on 16th Feb, 2021.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+