தென் இந்தியாவில் இத்தனை இரு சக்கர வாகனங்கள் விற்பனையா? புதிய மைல்கல்லை கடந்த ஹோண்டா...

தென் இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் ஹோண்டா நிறுவனம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தென் இந்தியாவில் இத்தனை இரு சக்கர வாகனங்கள் விற்பனையா? புதிய மைல்கல்லை கடந்த ஹோண்டா...

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்திருப்பது குறித்த அறிவிப்பை, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 2001ம் ஆண்டில் இருந்து தென் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1.50 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

தென் இந்தியாவில் இத்தனை இரு சக்கர வாகனங்கள் விற்பனையா? புதிய மைல்கல்லை கடந்த ஹோண்டா...

தென் இந்தியாவில் மட்டும் 1.50 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனை என்பது உண்மையிலேயே பெரிய மைல்கல்தான் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் இந்தியாவின் தென் பகுதியில் நம்பர்-1 நிறுவனமாக இருந்து வருகிறோம் எனவும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியாவில் இத்தனை இரு சக்கர வாகனங்கள் விற்பனையா? புதிய மைல்கல்லை கடந்த ஹோண்டா...

கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய தென் இந்திய பகுதிகளில்தான் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 1.50 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

தென் இந்தியாவில் இத்தனை இரு சக்கர வாகனங்கள் விற்பனையா? புதிய மைல்கல்லை கடந்த ஹோண்டா...

இந்த சாதனையை படைப்பதற்கு 20 ஆண்டுகளை எடுத்து கொண்டதாகவும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், முதல் 75 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு 15 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதாவது 2001 முதல் 2016ம் ஆண்டு வரை முதல் 75 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தென் இந்தியாவில் இத்தனை இரு சக்கர வாகனங்கள் விற்பனையா? புதிய மைல்கல்லை கடந்த ஹோண்டா...

ஆனால் எஞ்சிய 75 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளன. 2017ம் ஆண்டு முதல் நடப்பு 2021ம் ஆண்டிற்குள் இந்த 75 லட்சம் இரு சக்கர வாகனங்களை ஹோண்டா விற்பனை செய்து விட்டது. தென் இந்தியாவில் ஹோண்டா இரு சக்கர வாகனங்களின் விற்பனை வேகமாக உயர்ந்து வருவதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

தென் இந்தியாவில் இத்தனை இரு சக்கர வாகனங்கள் விற்பனையா? புதிய மைல்கல்லை கடந்த ஹோண்டா...

இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் தென் இந்தியாவின் பங்கு மகத்தானதாக உள்ளது. தென் இந்தியாவில் விற்பனையில் இமாலய சாதனையை படைக்க உதவிய வாடிக்கையாளர்களுக்கு இந்த நேரத்தில் ஹோண்டா நிறுவனம் நன்றி தெரிவித்து கொண்டுள்ளது.

தென் இந்தியாவில் இத்தனை இரு சக்கர வாகனங்கள் விற்பனையா? புதிய மைல்கல்லை கடந்த ஹோண்டா...

தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியா முழுக்க மிகவும் பிரபலமான மாடலாக இருந்து வருகிறது. ஹோண்டா நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையை ஆக்டிவா ஸ்கூட்டர் தவறாமல் ஈட்டி தந்து கொண்டுள்ளது. அத்துடன் டியோ போன்ற ஹோண்டா மற்ற தயாரிப்புகளும் பிரபலமாக இருந்து வருகின்றன.

தென் இந்தியாவில் இத்தனை இரு சக்கர வாகனங்கள் விற்பனையா? புதிய மைல்கல்லை கடந்த ஹோண்டா...

இந்த வரிசையில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளும் இந்தியாவில் தற்போது வேகமாக பிரபலமாகி வருகிறது.

Most Read Articles

English summary
Honda Two-Wheeler Sales In South India Achieves New Milestone - Here Are The Details. Read in Tamil
Story first published: Saturday, February 13, 2021, 20:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X