120கிமீ ரேஞ்ச் உடன் Hot Wheels எலக்ட்ரிக் பைக்!! விலை தான் எங்கேயோ இருக்கு!

120கிமீ ரேஞ்ச் உடன் Hot Wheels எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார இருசக்கர வாகனத்தை பற்றிய விரிவான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

120கிமீ ரேஞ்ச் உடன் Hot Wheels எலக்ட்ரிக் பைக்!! விலை தான் எங்கேயோ இருக்கு!

சந்தையில் பிரபலமாக இருக்கும் ஆட்டோமொபைல் வாகனங்களை அளவில் சிறியதாக, பொம்மை மாடல்கள் போன்று உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது Hot Wheels நிறுவனமாகும். ஆனால் இவ்வாறான தயாரிப்புகளுடன் நிறுத்தி கொள்ள இந்த நிறுவனம் விரும்பவில்லை.

இதனால் அமெரிக்க எலக்ட்ரிக் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான Super73 நிறுவனத்துடன் நிஜ-உலக மாடல் ஒன்றை தயாரிப்பதற்காக Hot Wheels கூட்டணி சேர்ந்துள்ளது. மேலும், Super73 நிறுவனத்தின் பிரதான Super73-RX மாடலை அடிப்படையாக கொண்டு X Super73-RX என்ற வாகனத்தையும் Hot Wheels நிறுவனம் உருவாக்கியுள்ளது.

120கிமீ ரேஞ்ச் உடன் Hot Wheels எலக்ட்ரிக் பைக்!! விலை தான் எங்கேயோ இருக்கு!

வெறும் 24 யூனிட்கள் மட்டுமே இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த 24 யூனிட்களும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அமெரிக்க சந்தையில் இந்த Hot Wheels எலக்ட்ரிக் பைக்கின் விலை 5,000 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

120கிமீ ரேஞ்ச் உடன் Hot Wheels எலக்ட்ரிக் பைக்!! விலை தான் எங்கேயோ இருக்கு!

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3.71 லட்சமாகும். தோற்றத்தில் Super73-RXக்கும் Hot Wheels-இன் X Super73-RX எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளிற்கும் இடையில் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. அதேபோல் மெக்கானிக்கல் பாகங்களும் வழக்கமான Super73-RX மாடலில் இருந்தே பெறப்பட்டுள்ளது.

Super73-RX-இன் Hot Wheels எடிசனில் ஆரஞ்ச் & நீலம் நிறங்களில் எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இதே ஆரஞ்ச் & நீல நிறத்தை எலக்ட்ரிக் பைக்கை சுற்றிலும் மற்ற இடங்களிலும் பார்க்க முடிகிறது. சக்கரங்களின் ரிம்கள் பித்தளையின் நிறத்தில் காட்சியளிக்கின்றன. இருப்பினும் பைக்கின் பெரும்பான்மையான பாகங்கள் கருப்பு நிறத்திலேயே உள்ளன.

120கிமீ ரேஞ்ச் உடன் Hot Wheels எலக்ட்ரிக் பைக்!! விலை தான் எங்கேயோ இருக்கு!

இதன்படி, டேங்க் பேட்கள், சங்கிலி மற்றும் பைக்கின் மத்தியில் வழங்கப்பட்டுள்ள வளையாத இரும்பினால் ஆன ஃப்ரேம் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் உள்ளன. ஹேண்டில்பார் & இருக்கைகள் Hot Wheels பிராண்டின் ஒரு அங்கமான Saddleman நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

120கிமீ ரேஞ்ச் உடன் Hot Wheels எலக்ட்ரிக் பைக்!! விலை தான் எங்கேயோ இருக்கு!

முன்பக்கத்தில் ஹெட்லைட் ஆனது மஞ்சள் நிறத்தில் டிண்ட் செய்யப்பட்டுள்ளது. வயர்-ஸ்போக்டு சக்கரங்களுடன் இயங்குகின்ற இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ப்ளாக் பேட்டர்னில் க்னாபி டயர்களை கொண்டுள்ளது. இதனால் இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை ஆஃப்-ரோட்டிற்கும் கொண்டு செல்ல முடியும்.

அப்படியே இயக்க ஆற்றல் விஷயத்திற்கு வந்தால், 960 வாட்ஸ் பேட்டரி இந்த இ-பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது இந்த இருசக்கர வாகனத்தின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்கும். 2 கிலோவாட்ஸ் ஆற்றலில் வழங்கப்பட்டுள்ள இதன் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 2.7 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

120கிமீ ரேஞ்ச் உடன் Hot Wheels எலக்ட்ரிக் பைக்!! விலை தான் எங்கேயோ இருக்கு!

ஒரு தடவை சார்ஜ் செய்தால் 65 கிமீ வரையில் இயங்க உதவும் இந்த எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி அமைப்பின் உதவியுடன் Hot Wheels X Super73-RX எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் அதிகப்பட்சமாக மணிக்கு 32கிமீ வேகத்தில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஈக்கோ பெடல் உதவி மோடில் பெடலை மிதிப்பதன் மூலம் ரேஞ்சை 120கிமீ வரையில் அதிகரித்து கொள்ள முடியும். மேலும் இந்த மோடில் வாகனத்தின் டாப் ஸ்பீடும் 45kmph ஆக அதிகரிக்கும். இதன் பேட்டரியை 5-ஆம்பியர் சார்ஜர் உடன் 100% சார்ஜ் நிரப்ப 3இல் இருந்து 4 மணிநேரங்கள் தேவைப்படுமாம்.

120கிமீ ரேஞ்ச் உடன் Hot Wheels எலக்ட்ரிக் பைக்!! விலை தான் எங்கேயோ இருக்கு!

அதேநேரம் 3-ஆம்பியர் சார்ஜர் மூலமாக 100% சார்ஜ் நிரப்ப 6-7 மணிநேரங்கள் தேவைப்படலாம். இந்த எலக்ட்ரிக் பைக்கின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், Hot Wheels-இன் X Super73-RX எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் அதிகப்பட்சமாக 36 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்லலாம்.

ஆதலால் இது கமர்ஷியல் பயன்பாட்டிற்கு ஏற்ற எலக்ட்ரிக் வாகனம் என்றால் அதில் மிகையில்லை. ஒவ்வொரு X Super73-RX எலக்ட்ரிக் பைக்கை உருவாக்குவதற்கும் 12-16 வாரங்கள் தேவைப்படும் என்பதால், முன்பதிவுகள் கிடைத்த பிறகு இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் தயாரிக்க துவங்கப்பட்டதாக Hot Wheels தெரிவித்துள்ளது.

120கிமீ ரேஞ்ச் உடன் Hot Wheels எலக்ட்ரிக் பைக்!! விலை தான் எங்கேயோ இருக்கு!

ரூ.3.71 லட்சம் என்பது உண்மையில் மிக அதிகமான தொகை என்றாலும், Hot Wheels இருசக்கர வாகன பிரியர்கள் இந்த தொகையை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. X Super73-RX எலக்ட்ரிக் பைக்கை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அமெரிக்காவில் பிரபலமான ஃபோர்டு ப்ரான்கோ காரின் சிறிய அளவிலான Hot Wheels மாடல் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hot Wheels Electric Motorcycle Debuts, Up To 120 Kms Range.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X