இந்தியாவில் மட்டும்தான் மலிவானது!! மலேசியாவில் அறிமுகமான ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை எவ்வளவு தெரியுமா?!

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹஸ்க்வர்னா நிறுவனம் அதன் விட்பிளேன் 401, ஸ்வார்ட்பிளேன் 401 மற்றும் ஸ்வார்ட்பிளேன் 250 பைக்குகளை மலேசியா நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் மட்டும்தான் மலிவானது!! மலேசியாவில் அறிமுகமான ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை எவ்வளவு தெரியுமா?!

இந்தியாவில் ஹஸ்க்வர்னா பிராண்ட் கடந்த 2020 துவக்கத்தில் விட்பிளேன் 250 மற்றும் ஸ்வார்ட்பிளேன் 250 பைக்குகளின் மூலம் அறிமுகமானது. கேடிஎம் பைக்குகளை போல் ஹஸ்க்வர்னா பைக்குகளும் ஒவ்வொரு மாதமும் கணிசமான விற்பனையை பெற்று வருகின்றன.

இந்தியாவில் மட்டும்தான் மலிவானது!! மலேசியாவில் அறிமுகமான ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை எவ்வளவு தெரியுமா?!

இந்த 250சிசி பைக்குகளை தொடர்ந்து அடுத்ததாக மேற்கூறப்பட்ட இரு மாடல்களின் 401சிசி பைக்குகளையும் இந்தியாவிற்கு கொண்டுவர ஹஸ்க்வர்னா திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இவற்றின் விலை குறைவான 200சிசி வெர்சன்களையும் கொண்டுவர இந்த ஸ்வீடன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் மட்டும்தான் மலிவானது!! மலேசியாவில் அறிமுகமான ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை எவ்வளவு தெரியுமா?!

இந்த நிலையில் இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹஸ்க்வர்னா பைக்குகளில் விட்பிளேன் 250 இல்லாமல் ஸ்வார்ட்பிளேன் 250 மற்றும் இந்த இரு மாடல்களின் 401சிசி வெர்சன்கள் மலேசிய நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் மட்டும்தான் மலிவானது!! மலேசியாவில் அறிமுகமான ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை எவ்வளவு தெரியுமா?!

ஸ்வார்ட்பிளேன் 250, எடை குறைவானது, நகரம் மற்றும் ஆஃப்-ரோடு என இரு விதமான சாலைகளுக்கும் ஏற்றது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இதில் பொருத்தப்படுகின்ற 248.8சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-ல் 23 கிலோவாட்ஸ் மற்றும் 7500 ஆர்பிஎம்-ல் 24 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்தியாவில் மட்டும்தான் மலிவானது!! மலேசியாவில் அறிமுகமான ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை எவ்வளவு தெரியுமா?!

ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன்சக்கரத்தில் பைப்ரே 4-பிஸ்டன் உடன் 320மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் பைப்ரே ஒற்றை-பிஸ்டன் 230மிமீ டிஸ்க்கும் வழங்கப்படுகின்றன. பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன் மற்றும் பின்பக்கத்தில் அபெக்ஸ் 43மிமீ ஃபோர்க் மற்றும் அபெக்ஸ் மோனோஷாக் பொருத்தப்படுகிறது.

இந்தியாவில் மட்டும்தான் மலிவானது!! மலேசியாவில் அறிமுகமான ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை எவ்வளவு தெரியுமா?!

விட்பிளேன் 401 மற்றும் ஸ்வார்ட்பிளேன் 401 தோற்றத்திலும் சரி, வழங்கப்படும் தொழிற்நுட்பங்களிலும் சரி இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன. ஸ்வார்ட்பிளேன் 250-ஐ போல் ஸ்வார்ட்பிளேன் 401 பைக்கும் நகர்புற சாலையிலும், குண்டு குழியுமாக சாலையிலும் பயன்படுத்த மிகவும் ஏற்ற பைக்காகும்.

இந்தியாவில் மட்டும்தான் மலிவானது!! மலேசியாவில் அறிமுகமான ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை எவ்வளவு தெரியுமா?!

ஹஸ்க்வர்னா விட்பிளேன் பொதுவாக கேஃப் ரேஸர் ரக மாடலாகும். ஆக்ரோஷமான பயணங்களுக்கு ஏற்றதான விட்பிளேன் பைக்குகளில் அதற்காகவே ஹேண்டில்பார் சற்று தாழ்வாகவும், ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி சற்று பின்னோக்கி தள்ளியும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டும்தான் மலிவானது!! மலேசியாவில் அறிமுகமான ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை எவ்வளவு தெரியுமா?!

விட்பிளேன் 401 மற்றும் ஸ்வார்ட்பிளேன் 401 என்ற இரு பைக்கிலும் ஒரே 373சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-ல் 32 கிலோவாட்ஸ் மற்றும் 7000 ஆர்பிஎம்-ல் 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டும்தான் மலிவானது!! மலேசியாவில் அறிமுகமான ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை எவ்வளவு தெரியுமா?!

இவற்றில் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன்பக்கத்தில் 43மிமீ-ல் அபெக்ஸ் ஃபோர்க் & 4-பிஸ்டன் காலிபர் உடன் 320மிமீ டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கத்தில் மோனோஷாக் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடன் 320மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் ஸ்வார்ட்பிளேன் 250 பைக் 24,800 ஆர்.எம் (ரிங்கிட் மலேசியன்) என்ற விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும்தான் மலிவானது!! மலேசியாவில் அறிமுகமான ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை எவ்வளவு தெரியுமா?!

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 4.5 லட்சத்திற்கும் அதிகம் என்றாலும், இந்தியாவில் இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.86 லட்சம் என்ற அளவில்தான் உள்ளது. விட்பிளேன் 401 மற்றும் ஸ்வார்ட்பிளேன் 401 பைக்குகளின் விலைகள் அங்கு ஒரே 29,800 ஆர்.எம்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.5.43 லட்சமாகும்.

Most Read Articles
English summary
Husqvarna launched 2021 Svartpilen 250 & 401 and Vitpilen 401 in Malaysia
Story first published: Friday, January 8, 2021, 1:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X