வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!

முதல் தொகுப்பு ஆட்டம் (Atum) எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் ஹைதராபாத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியாகியுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!

இந்தியாவில் தற்சமயம் உள்ள எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஆட்டமொபைல், ஹைதராபாத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தனது தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!

இந்த நிறுவனத்தின் முதல் ஆட்டம் 1.0 கேஃப்-ரேஸர் ஸ்டைல் எலக்ட்ரிக் பைக்கின் முதல் 10 யூனிட்கள் தொழிற்சாலையிலேயே வைத்து முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன.

வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!

கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்கின் விலை மிகவும் குறைவாக ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறைவான விலை தான் அங்கு சுற்று பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பேசும் பொருளாக மாறியுள்ளது.

வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!

அறிமுகத்தில் இருந்து இதுவரையில் மட்டுமே 400க்கும் அதிகமான முன்பதிவுகளை இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு ஏற்றுள்ள தயாரிப்பு நிறுவனம் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட மற்ற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு டெலிவிரி செய்யவுள்ளது என்பது குறித்த விபரங்களை இதுவரையில் வெளியிடவில்லை.

வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!

பழமையான ரெட்ரோ தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்கில் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. சிங்கிள்-முழு சார்ஜில் கிட்டத்தட்ட 100கிமீ வரையில் பைக்கை இயக்கி செல்லக்கூடிய ஆற்றல் கொண்ட இந்த பேட்டரி தொகுப்பை சார்ஜ் செய்ய 4 மணிநேரத்திற்கும் குறைவான நேரமே தேவைப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!

வெறும் 6 கிலோ மட்டுமே எடை கொண்டதாக இருக்கும் இந்த பேட்டரியை பைக்கில் இருந்து நீக்குவதும், சார்ஜ் செய்வதும் மிக எளிதானது. அதுமட்டுமில்லாமல் ஆட்டம் 1.0 பைக்கின் பேட்டரியை எந்தவொரு 3-பின் சாக்கெட்டிலும் சார்ஜ் செய்யலாம்.

வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!

வெவ்வேறான சாலைகளில் சோதனைகளில் உட்படுத்தப்பட்ட பின்னரே விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்கில் 20X4 என நன்கு அகலமான டயர்கள், சவுகரியமான இருக்கை அமைப்பு, எல்இடி தரத்தில் ஹெட்லைட், இண்டிகேட்டர்கள், டெயில்லைட் மற்றும் டிஜிட்டல் திரை உடன் க்ரவுண்ட் கிளியெரென்ஸ் சிறப்பானதாகவே வழங்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!

தானியங்கி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையத்திடம் முறையான அனுமதி பெற்ற ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்கிற்கு ஒரு வருட உத்தரவாதத்தையும், அதில் பொருத்தப்படுகின்ற பேட்டரி தொகுப்பிற்கு 2 வருட உத்தரவாதத்தையும் ஆட்டமொபைல் நிறுவனம் வழங்கியுள்ளது.

Most Read Articles

English summary
Atum Electric Motorcycle First Batch Delivered To Owners In Hyderabad
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X