சைபோர்க் யோடா எலெக்ட்ரிக் பைக் வெளியீடு... க்ரூஸர் ரக டூ-வீலர் பிரியர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கு!

இக்னைட்ரான் மோட்டோகார்ப் நிறுவனம் அதன் சைபோர்க் யோடா க்ரூஸர் மின்சார மோட்டார்சைக்கிளை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த இ-வாகனம் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சைபர் யோடா

க்ரூஸர் ரக இருசக்கர வாகனத்தை விரும்பும் இருசக்கர வாகன காதலர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இக்னைட்ரான் மோட்டோகார்ப் நிறுவனம் சைபோர்க் யோடா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கின்றது. இந்த புதுமுக இ-மோட்டார்சைக்கிளையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.

இந்த மோட்டார்சைக்கிள் மட்டுமில்லைங்க இதனை உருவாக்கி இருக்கும் இக்னைட்ரான் மோட்டோகார்ப் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் புதிய மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, சைபோர்க் யோடா மோட்டார்சைக்கிள் பிரீமியம் ரக ஸ்வாப்பபிள் பேட்டரி கொண்ட பைக் என்பது தெரிய வந்திருக்கின்றது.

மிக விரைவில் இந்த மின் வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரும் பொருட்டு இக்னைட்ரான் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடுத்தரம், உயர் வேகம் ஆகிய பிரிவுகளில் இது வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் அனைத்து சாலைகளிலும் சிறந்த வெளிப்பாட்டைக் கொடுக்கும் வகையில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த வசதியை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு ஆய்வுகளை இந்த வாகனத்தைக் கொண்டு தயாரிப்பு நிறுவனம் செய்திருக்கின்றது.

சைபோர்க் பிராண்டின்கீழ் இன்னும் சில தயாரிப்புகளும் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றன. அதிக ரேஞ்ஜ், மிக சிறந்த திறன் வெளிப்பாடு வசதிக் கொண்ட மின் மோட்டார் மற்றும் குறைவான விலை உள்ளிட்ட சிறப்புகளுடன் அவை விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து, நிறுவனம் நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில் மிக வலுவான விற்பனை மற்றும் சேவை மையங்களை நிறுவ திட்டமிட்டிருக்கின்றது.

மேலும், ஒவ்வொரு கிமீட்டருக்கும் ஓர் சார்ஜிங் மையத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் திட்டத்திலும் இந்த நிறுவனம் இருக்கின்றது. இத்துடன், சாலையோர உதவி, பேட்டரியை மாற்றும் ஸ்வாப்பபிள் நிலையம் உள்ளிட்டவற்றையும் அதிகளவில் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாதிரியான திட்டங்களின் தொடக்கமாகவே புதிய சைபோர்க் யோடா மோட்டார்சைக்கிள் தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார க்ரூஸர் பைக்கில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் வழங்கப்படும் என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

மிக விரைவில் வாகனம் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஹரியான மாநிலம், குருகிராமுக்கு அருகில் அமைந்திருக்கின்றது. இங்கே நிறுவனத்தின் அனைத்து மின் வாகனங்களும் தயாரிக்கப்பட இருக்கின்றன.

Most Read Articles
English summary
Ignitron motocorp unveils cyborg yoda cruiser e motorcycle
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X