டீலர்கள் கிடையாது... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

டீலர்கள் கிடையாது... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

இந்தியாவின் சுதந்திர தினத்தில் (ஆகஸ்ட் 15), Ola Electric நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் மட்டுமே. S1 மற்றும் S1 Pro என மொத்தம் 2 வேரியண்ட்களில் Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

டீலர்கள் கிடையாது... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்திய சந்தையில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. Ola S1 வேரியண்ட்டின் விலை 99,999 ரூபாய் ஆகும். அதே சமயம் S1 Pro வேரியண்ட்டின் விலை 1,29,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். ஆனால் மாநிலத்திற்கு மாநிலம் விலை மாறுபடும் என்பது கவனிக்கத்தக்கது.

டீலர்கள் கிடையாது... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில்தான் Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிக குறைவான விலைக்கு வாங்க முடியும். அங்கு S1 வேரியண்ட்டின் விலை வெறும் 79,999 ரூபாய் மட்டுமே. தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், குஜராத் மாநில அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருவதுதான் இதற்கு காரணம்.

டீலர்கள் கிடையாது... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்பதிவு தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திலேயே 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்து விட்டனர் என்பது ஆச்சரியமான விஷயம். Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்வதற்கு வெறும் 499 ரூபாய் போதும்.

டீலர்கள் கிடையாது... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

Ola Electric நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள Ola Electric நிறுவனத்தின் Futurefactory-ல் Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன.

டீலர்கள் கிடையாது... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

Ola Electric நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நேரடியாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டெலிவரி செய்யவுள்ளது. டீலர் நெட்வொர்க் கிடையாது. Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கும் என Ola Electric நிறுவனம் அறிவித்துள்ளது.

டீலர்கள் கிடையாது... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

இந்தியா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரி செய்வதற்கு Ola Electric நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மாத தவணையிலும் வாங்க முடியும். மாத தவணையாக 3 ஆயிரம் ரூபாயை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும் என Ola Electric நிறுவனம் தெரிவித்துள்ளது.

டீலர்கள் கிடையாது... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

மாத தவணை திட்டத்திற்காக பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உடன் Ola Electric நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு பலர் ஆர்வமாக உள்ளனர். இந்த நேரத்தில் விற்பனைக்கு வந்துள்ள Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீலர்கள் கிடையாது... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

இதேபோல் Simple One என்ற மற்றொரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

டீலர்கள் கிடையாது... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, இந்த புதிய தயாரிப்புகளின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையை சமாளித்து விடலாம் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வரும் காலங்களில் இன்னும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளன.

டீலர்கள் கிடையாது... Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

ஏற்கனவே Bajaj Chetak, TVS iQube மற்றும் Ather 450X போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு எலெக்ட்ரிக் கார்களும் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில், Tata Nexon Electric SUV முக்கியமானது. இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Important details about ola electric scooter
Story first published: Friday, August 20, 2021, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X