குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி வெளிவந்துள்ள புதிய தகவல்கள், வாடிக்கையாளர்கள மத்தியில் மிகப்பெரிய ஆவலையும், எதிர்பார்ப்பையும் கிளறி உள்ளது. அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என தெரிகிறது.

 குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஓலா டாக்சி நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கி இருப்பது தெரிந்ததே. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓலா நிறுவனம் ஓசூரில் தனது மின்சார வாகன ஆலையை அமைத்து வருகிறது. உலகின் மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டர் ஆலையாக இது இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.

 குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது. ஆம். இதன் தொழில்நுட்ப அம்சங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் புதிய பாதையை அமைத்துக் கொடுக்கும் என்று தெரிகிறது.

 குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

கடந்த ஆண்டு மத்தியில் ஆம்ஸ்டர்நாம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எட்டெர்கோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தை ஓலா நிறுவனம் கையகப்படுத்தியது. எட்டெர்கோ விற்பனை செய்து வரும் ஆப்ஸ்கூட்டர் என்ற மின்சார ஸ்கூட்டரின் அடிப்படையில்தான் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வர இருக்கிறது.

 குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

அதாவது, இந்திய தட்பவெப்பம் மற்றும் சாலை நிலைகளுக்கு தக்கவாறு சில மாறுதல்கள் மற்றும் ஓலா பேட்ஜ் கொடுக்கப்பட்டு வர இருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டர் குறித்து ஓலா நிறுவனத்தின் ஸ்தாபகர் பவிஷ் அகர்வால் சில முக்கிய விஷயங்களை மணிகன்ட்ரோல் தளத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

அதில், ஆண்டுக்கு 2,000 ஸ்கூட்டர்கள் என்ற இலக்குடன் நாங்கள் வர்த்தகத்தை துவங்கப்போவதில்லை. இந்தியாவில் 1,000 பேருக்கு 160 பேரிடம்தான் இருசக்கர வாகனங்கள் உள்ளது. ஆனால், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் சராசரியாக 1,000 பேருக்கு 600 பேரிடம் இருசக்கர வாகனங்கள் உள்ளன.

 குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதே அளவுக்கு இந்தியாவிலும் வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதற்கு சரியான தயாரிப்பை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். விலை, ரேஞ்ச் என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.

 குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

நாங்களே சொந்தமாக பேட்டரி மற்றும் மின் மோட்டார்களை உற்பத்தி செய்ய இருக்கிறோம். எங்களது சொந்த டிசைன் மற்றும் தொழில்நுட்பங்களுடன் தயாரிப்புகளை கொண்டு வர உள்ளோம். அனைத்து சாஃப்ட்வேர்களை கூட நாங்களேதான் உருவாக்குவோம். எனவே, மிகச் சிறந்த தயாரிப்பை கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளோம்.

 குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

எங்களது ஸ்கூட்டர் எட்டெர்கோ ஆப்ஸ்கூட்டரின் அடிப்படையிலான மாடலாக இருக்கும். ஆனால், இந்தியாவுக்கு தக்கவாறு சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.

 குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஒவ்வொரு ஸ்கூட்டரிலும் இரண்டு பேட்டரிகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பேட்டரியும் 10.5 முதல் 11 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஒரு பேட்டரியை ஒரு மணிநேரத்தில் சார்ஜ் செய்து விட முடியும்.

 குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

வீட்டில் இருக்கும் சாதாரண பவர் சாக்கெட் மூலமாகவே சார்ஜ் செய்ய முடியும். எங்களது ஸ்கூட்டர் 100 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழ் கொடுக்கப்படும் இடவசதியில் இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்கும் அளவுக்கு மிக அதிக இடவசதியும் இருக்கும்.

 குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். இன்பில்ட் சிம் கார்டு வசதியுடன் இணைய வசதியை பெற முடியும். போன் அழைப்புகள், பாடல்களை கேட்பதற்கான வசதிகள் மற்றும் நிகழ்நேர பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்த ஸ்கூட்டர் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

 குறைவான விலை, ஒரே மணிநேரத்தில் பேட்டரி சார்ஜ்... அதிர வைக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதனிடையே, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிகிறது. மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும் வாய்ப்புள்ளது. விலையும் ஒரு லட்ச ரூபாய்க்கு கீழாக இருக்கும் என்பதால், சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Here are some important things you need to know about Ola Electric Scooter.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X