கேடிஎம் பைக்குகளின் விற்பனையில் தொடரும் வீழ்ச்சி!! வரும் மாதங்களில் கைக்கொடுக்குமா புதிய ஆர்சி200?

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு தற்போதைக்கு நடைபெற்று கொண்டிருப்பது சவாலான சூழ்நிலை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய் தொற்று பரவல்கள் ஒருபக்கம் சில கட்டுப்பாடுகளை அமலில் வைத்திருக்க, மறுபக்கம் உலகளாவிய சிப்-களுக்கான பற்றாக்குறை வாகன தயாரிப்பு பணிகளுக்கு தடையாக உள்ளன.

கேடிஎம் பைக்குகளின் விற்பனையில் தொடரும் வீழ்ச்சி!! வரும் மாதங்களில் கைக்கொடுக்குமா புதிய ஆர்சி200?

இதன் விளைவாக பெரும்பான்மையான வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை சமீப மாதங்களாக கணிசமாக குறைந்து வருவதை பார்த்து வருகிறோம். இதில் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனமும் தனது பங்கிற்கு விற்பனை சரிவை சந்தித்து வருகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கடந்த 2021 நவம்பர் மாத கேடிஎம் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கைகளை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

கேடிஎம் பைக்குகளின் விற்பனையில் தொடரும் வீழ்ச்சி!! வரும் மாதங்களில் கைக்கொடுக்குமா புதிய ஆர்சி200?

இந்தியாவில் பஜாஜ் ஆட்டோவின் உதவியுடன் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்துவரும் கேடிஎம் கடந்த நவம்பர் மாதத்தில் உள்நாட்டு விற்பனையிலும், வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் சரிவை கண்டுள்ளது. உள்நாட்டு விற்பனையை பொருத்தவரையில், கடந்த மாதத்தில் வழக்கம்போல் 200சிசி கேடிஎம் பைக்குகளே முன்னிலையில் உள்ளன.

கேடிஎம் பைக்குகளின் விற்பனையில் தொடரும் வீழ்ச்சி!! வரும் மாதங்களில் கைக்கொடுக்குமா புதிய ஆர்சி200?

கேடிஎம் 200 ட்யூக் மற்றும் ஆர்சி200 பைக்குகள் அடங்கும் இந்த பிரிவில் கடந்த மாதத்தில் மொத்தம் 1,894 யூனிட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் தான் அப்டேட் செய்யப்பட்ட ஆர்சி200 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. இதனால் கேடிஎம் 200சிசி பைக்குகளின் விற்பனை வரும் மாதங்களில் கவனிக்கத்தக்க அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தோம்.

கேடிஎம் பைக்குகளின் விற்பனையில் தொடரும் வீழ்ச்சி!! வரும் மாதங்களில் கைக்கொடுக்குமா புதிய ஆர்சி200?

ஆனால் 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பரில் கேடிஎம் 200சிசி பைக்குகளின் விற்பனை கிட்டத்தட்ட 10.45% குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் கேடிஎம் 200சிசி பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து 2,115 யூனிட்களாக இருந்தது. 2020 நவம்பரில் 200சிசி பைக்குகளுக்கு அடுத்து அதிகம் விற்பனை செய்யப்பட்ட கேடிஎம் பைக்குகளாக 250சிசி (ட்யூக், அட்வென்ச்சர்) பைக்குகள் விளங்கின.

கேடிஎம் பைக்குகளின் விற்பனையில் தொடரும் வீழ்ச்சி!! வரும் மாதங்களில் கைக்கொடுக்குமா புதிய ஆர்சி200?

ஆனால் கடந்த மாதத்தில் இரண்டாவது இடத்தை 125 ட்யூக் மற்றும் ஆர்சி125 மாடல்கள் அடங்கும் கேடிஎம் 125சிசி பைக்குகள் உள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 929 யூனிட் கேடிஎம் 125சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இம்முறை 2வது இடத்தை பிடித்தாலும் 2020 நவம்பர் மாதத்தை (1,316 யூனிட்கள்) காட்டிலும் கடந்த மாதத்தில் 29.14% குறைவான எண்ணிக்கையிலேயே கேடிஎம் 125சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கேடிஎம் பைக்குகளின் விற்பனையில் தொடரும் வீழ்ச்சி!! வரும் மாதங்களில் கைக்கொடுக்குமா புதிய ஆர்சி200?

கடந்த மாதத்தில் மூன்றாவது இடத்திற்கு இறங்கியுள்ள கேடிஎம் 250சிசி பைக்குகள் மொத்தம் 735 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2020 நவம்பரில் இதனை காட்டிலும் டபுள் மடங்காக 1,590 யூனிட் 250சிசி பைக்குகளை கேடிஎம் விற்பனை செய்திருந்தது. இதற்கு அடுத்து கேடிஎம் 390சிசி பைக்குகள் 238 யூனிட்கள் கடந்த நவம்பரில் விற்கப்பட்டுள்ளன. ஆனால் 2020 நவம்பரில் 597 கேடிஎம் 390சிசி பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

கேடிஎம் பைக்குகளின் விற்பனையில் தொடரும் வீழ்ச்சி!! வரும் மாதங்களில் கைக்கொடுக்குமா புதிய ஆர்சி200?

இந்த வகையில் இந்த கேடிஎம் பைக்குகளின் விற்பனை 60.13% குறைந்துள்ளது. 390சிசி-இல் 390 ட்யூக் மற்றும் 390 அட்வென்ச்சர் பைக்குகளை இந்தியாவில் இந்த ஆஸ்திரிய மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கேடிஎம் பைக்குகளின் உள்நாட்டு விற்பனை தான் இவ்வாறு பெரிய அளவில் குறைந்துள்ளதே தவிர்த்து, வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி ஓரளவிற்கு பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கேடிஎம் பைக்குகளின் விற்பனையில் தொடரும் வீழ்ச்சி!! வரும் மாதங்களில் கைக்கொடுக்குமா புதிய ஆர்சி200?

இன்னும் சொல்லப்போனால், ஏற்றுமதியில் சில கேடிஎம் பைக்குகள் முந்தைய ஆண்டை காட்டிலும் நேர்மறையான எண்ணிக்கைகளை பதிவு செய்துள்ளன. அதிலும் குறிப்பாக, ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள 125சிசி கேடிஎம் பைக்குகளின் ஏற்றுமதி எண்ணிக்கை 2020 நவம்பருடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் சுமார் 203.17% உயர்ந்துள்ளது.

கேடிஎம் பைக்குகளின் விற்பனையில் தொடரும் வீழ்ச்சி!! வரும் மாதங்களில் கைக்கொடுக்குமா புதிய ஆர்சி200?

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 378 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த கேடிஎம் 125சிசி பைக்குகள் கடந்த நவம்பர் மாதத்தில் 1,146 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கேடிஎம் 125சிசி பைக்குகளின் எண்ணிக்கையை காட்டிலும் சில நூறு யூனிட்கள் அதிகமாகும். இதற்கு அடுத்து முறையே கேடிஎம் 200சிசி பைக்குகள் 1,041 யூனிட்கள் மற்றும் இதனை நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு கேடிஎம் 390சிசி பைக்குகள் 1,036 யூனிட்கள் ஏற்றுமதியுடன் 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன.

கேடிஎம் பைக்குகளின் விற்பனையில் தொடரும் வீழ்ச்சி!! வரும் மாதங்களில் கைக்கொடுக்குமா புதிய ஆர்சி200?

ஆனால் 2020 நவம்பரில் தற்போதைய எண்ணிக்கையை காட்டிலும் 41% அதிகமாக 1,756 கேடிஎம் 390சிசி பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. ஆனால் மறுப்பக்கம் 200சிசி பைக்குகளின் ஏற்றுமதியில் கேடிஎம் இந்தியா நிறுவனம் 10.51 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. கேடிஎம் 250சிசி பைக்குகள் கடந்த நவம்பர் மாதத்தில் 794 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
In Nov 2021, KTM India's domestic sales decline of 32.43% on YoY basis.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X