இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? இன்னும் ரொம்ப நாள் இல்ல! எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுகம் எப்போது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. உற்பத்தி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் முக்கிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? இன்னும் ரொம்ப நாள் இல்ல! எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைங்க!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் Ultraviolette Automotive Pvt Ltd (அல்ட்ராவயலெட் ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட்). இந்நிறுவனம் புதிய உற்பத்தி ஆலையை உருவாக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இத்துடன், புதிய உற்பத்தி ஆலையின் வாயிலாக தனது எஃப்77 (F77) எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை தயாரிக்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? இன்னும் ரொம்ப நாள் இல்ல! எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைங்க!

நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை 2019ம் ஆண்டே கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்திவிட்டது குறிப்பிடத்தகுந்தது. ஆனால் இப்போதே இதனை உற்பத்தி செய்யும் பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் இப்பைக்கின் உற்பத்தி பணிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? இன்னும் ரொம்ப நாள் இல்ல! எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைங்க!

இதைத்தொடர்ந்து 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் பேட்ச் எஃப்77 எலெக்ட்ரிக் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவைத் தொடர்ந்து 2024ம் ஆண்டில் இப்பைக் உலகளவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது.

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? இன்னும் ரொம்ப நாள் இல்ல! எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைங்க!

இப்பைக்கை உருவாக்குவதற்காக சுமார் 70 ஆயிரம் சதுர அடியில் உற்பத்தி ஆலையை நிறுவனம் உருவாக்கி வருகின்றது. முழுக்க மின் வாகனத்தை மட்டுமே மையமாகக் கொண்டு இந்த ஆலை இயங்கும். ஆண்டுக்கு 15 யூனிட்டுகள் என்ற உற்பத்தி திறனில் இந்த ஆலை இயங்கும். முதல் ஓராண்டு மட்டுமே இந்த உற்பத்தி திறனில் ஆலை செயல்படும். அதற்கு பின்னர் ஆண்டிற்கு 1,20,000 யூனிட்டுகள் உற்பத்தி என்ற எண்ணிக்கையில் அது இயங்கும்.

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? இன்னும் ரொம்ப நாள் இல்ல! எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைங்க!

அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் எஃப்77 எலெக்ட்ரிக் ஏற்கனவே பலரிடத்தில் இருந்து புக்கிங்கிற்கான அழைப்பு வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், இதுவரையில் சுமார் 40 ஆயிரம் புக்கிங் அழைப்புகள் நிறுவனத்திற்கு வந்திருக்கின்றது. இது உலகளவில் கிடைத்த அழைப்புகள் ஆகும்.

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? இன்னும் ரொம்ப நாள் இல்ல! எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைங்க!

விற்பனைக்கு வருவதற்கு முன்னரே இத்தகைய வரவேற்பை எஃப்77 எலெக்ட்ரிக் பைக் பெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பைக் அதிகபட்சமாக மணிக்கு 147 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தை வெறும் 7.5 செகண்டுகளிலேயே இப்பைக் எட்டிவிடும்.

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? இன்னும் ரொம்ப நாள் இல்ல! எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைங்க!

இதுமாதிரியான சிறப்பு திறன்களை அது கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே உலகளவில் நல்ல எதிர்பார்ப்பை இப்போதே பெற தொடங்கியிருக்கின்றது. அதேவேலையில், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எந்தவொரு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமும் இத்தகைய அதிக திறன்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இல்லை. ஆகையால், நாட்டின் மிக அதி-வேக திறன் கொண்ட வாகனமாக எஃப்77 இருக்கின்றது.

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? இன்னும் ரொம்ப நாள் இல்ல! எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைங்க!

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கிடைக்கும். ஷேடோவ், லைட்னிங் மற்றும் லேசர் ஆகிய வேரியண்டுகளில் அது விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், ஏர் கூல்டு, பிரஸ்லெஸ் டிஎம் மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாகக 33.5 பிஎச்பி திறனை வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? இன்னும் ரொம்ப நாள் இல்ல! எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைங்க!

இத்துடன், எலெக்ட்ரிக் வாகனத்தில் ஈகோ, ஸ்போர்ட் மற்றும் இன்சேன் உள்ளிட்ட இயக்க மோட்களும் வழங்கப்பட இருக்கின்றது. பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்ட எலெக்ட்ரிக் பைக்காக இது விற்பனைக்கு வர இருப்பதால் சற்று அதிக விலையிலே எஃப்77 எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், ரூ. 3 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? இன்னும் ரொம்ப நாள் இல்ல! எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைங்க!

அல்ட்ராவயலெட் எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், பைக் டிராக்கிங் சிஸ்டம், டிஎஃப்டி திரை மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளிட்டவை இடம் பெற இருக்கின்றன. இத்துடன், இன்னும் பல பிரீமியம் தர வசதிகள் இதில் இடம் பெற இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? இன்னும் ரொம்ப நாள் இல்ல! எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைங்க!

அந்தவகையில், இன்வெர்டட் கார்ட்ரிட்ஜ் ரக ஃபோர்க் முன் பக்கத்திலும், கேஸ் சார்ஜட் ப்ரீ லோட் அட்ஜெஸ்டபிள் ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 4 பிஸ்டன் காலிபர் உடன் கூடிய 320 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 230 மிமீ டிஸ்க் ஒற்றை பிஸ்டன் வசதியுடன் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

Most Read Articles
English summary
India s fastest e bike ultraviolette f77 to launch by march 2022
Story first published: Wednesday, September 8, 2021, 18:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X