புதிதாக ஓர் நாட்டில் கால் தடம் பதிக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்... எந்த நாட்டில் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹீரோ மோட்டோகார்ப் புதிதாக ஓர் நாட்டில் வர்த்தக பணியைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது எந்த நாடு, என்னென்ன இருசக்கர வாகன மாடல்களை அங்கு விற்பனைக்குக் அறிமுகம் செய்திருக்கின்றது என்பது பற்றிய தகவலை இந்த பதவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

புதிதாக ஓர் நாட்டில் கால் தடம் பதிக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்... எந்த நாட்டில் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் புதிதாக ஓர் நாட்டில் வர்த்தக பணியைத் தொடங்கியிருக்கின்றது தகவல் வெளியிட்டுள்ளது. மெக்ஸிகோ நாட்டிலேயே ஹீரோ நிறுவனம் புதிதாக வர்த்தகத்தை பணியைத் தொடங்கியுள்ளது.

புதிதாக ஓர் நாட்டில் கால் தடம் பதிக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்... எந்த நாட்டில் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த செயல்பாட்டின் அடிப்படையில் புதிதாக எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி, ஹங்க் 190, ஹங்க் 160ஆர், ஹங்க் 150, ஈகோ 150டிஆர், ஈகோ 150 கார்கோ, இக்னிடர் 125 மற்றும் டேஷ் 125 ஆகிய பிரபலமான இருசக்கர வாகன மாடல்களை அந்நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

புதிதாக ஓர் நாட்டில் கால் தடம் பதிக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்... எந்த நாட்டில் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதில், இக்னிடர் 125 மற்றும் டேஷ் 125 ஆகியவை ஸ்கூட்டர்கள் ஆகும். மற்ற அனைத்தும் பைக்குகள் ஆகும். தனது உலகளாவிய விற்பனைச் சந்தையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் ஹீரோ மோட்டோகார்ப் மெக்ஸிகோ நாட்டில் புதிதாக தனது வர்த்தகத்தை தொடங்கியிருக்கின்றது.

புதிதாக ஓர் நாட்டில் கால் தடம் பதிக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்... எந்த நாட்டில் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அனைத்து இருசக்கர வாகனங்களையும் குறைந்த விலையில் விற்பனைக்குக் களமிறக்கியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. விநியோகஸ்தர், ஏஜென்சி மற்றும் விற்பனையாளர்கள் அடங்கிய நெட்வொர்க்கின் வாயிலாக தனது விற்பனை வர்த்தகத்தை ஹீரோ மோட்டோகார்ப் மெக்ஸிகோவில் தொடங்கியிருக்கின்றது.

புதிதாக ஓர் நாட்டில் கால் தடம் பதிக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்... எந்த நாட்டில் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த நெட்வொர்க்கினாலேயே குறைந்த விலையில் தனது இருசக்கர வாகனங்களை அந்நாட்டில் களமிறக்க முடிந்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி சிறப்பு கடன் திட்டத்தின் வாயிலாகவும் மெக்ஸிகோவினரை கவர ஹீரோ நிறுவனம் வழி வகை செய்துள்ளது.

புதிதாக ஓர் நாட்டில் கால் தடம் பதிக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்... எந்த நாட்டில் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆமாங்க, அந்நாட்டின் நிதி நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு சிறப்பு சலுகைகளை ஹீரோ அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் அல்லது 30 ஆயிரம் கிமீட்டர்கள் வாரண்டியையும் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. உலகளவில் ஹீரோ நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

புதிதாக ஓர் நாட்டில் கால் தடம் பதிக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்... எந்த நாட்டில் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த நிலையிலேயே தனது காலடியை மெக்ஸிகோ நாட்டில் ஹீரோ பதித்துள்ளது. நிறுவனத்தின் இந்த செயல் நாட்டிற்கே பெருமையளிக்கும் தருணமாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தைகளில் ஹீரோ நிறுவனத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு நிறுவனத்திற்கு கிடைக்கும் ஓர் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகின்றது.

புதிதாக ஓர் நாட்டில் கால் தடம் பதிக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்... எந்த நாட்டில் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இருசக்கர வாகனங்கள் என்ன விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில் அவை, அந்நாட்டில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு கடும் போட்டியை வழங்கும் வகையில் குறைந்த விலையில் களமிறக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
India's Largest Two Wheeler Maker Hero Starts Retail Business In Mexico. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X