இந்திய சிபி200எக்ஸ் vs இந்தோனிஷிய சிபி150எக்ஸ்!! பக்கா ஹோண்டா அட்வென்ச்சர் பைக் எது?

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய அட்வென்ச்சர் பைக்காக சிபி150எக்ஸ்-ஐ உலகளவில் வெளியீடு செய்தது. ஹோண்டாவின் சிபிஎக்ஸ் மோட்டார்சைக்கிள்கள் வரிசையில் ஆரம்ப-நிலை மாடலாக புதிய சிபி150எக்ஸ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய சிபி200எக்ஸ் vs இந்தோனிஷிய சிபி150எக்ஸ்!! பக்கா ஹோண்டா அட்வென்ச்சர் பைக் எது?

இந்திய சந்தையை பொறுத்தவரையில், சில மாதங்களுக்கு முன்பு சிபி200எக்ஸ் என்ற அட்வென்ச்சர் பைக்கை ஹோண்டா களமிறக்கியது. இதனால் சிபி150எக்ஸ் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பில்லை என்றாலும், இந்த இரு ஹோண்டா அட்வென்ச்சர் பைக்குகளுக்கு இடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சிபி200எக்ஸ் vs இந்தோனிஷிய சிபி150எக்ஸ்!! பக்கா ஹோண்டா அட்வென்ச்சர் பைக் எது?

தோற்றம்

இந்திய சிபி200எக்ஸ் மாடலுடன் ஒப்பிடுகையில், இந்தோனிஷிய சிபி150எக்ஸ் ஆனது முற்றிலுமாக ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிபி200எக்ஸ் மற்றும் சிபி150எக்ஸ் இரண்டும் அதன் நாக்டு வெர்சன்களில் (ஹார்னெட் 2.0 மற்றும் சிபி150ஆர்)-இல் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போதைக்கு சிபிஎக்ஸ் பைக்குகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான டிசைன் தத்துவத்தையே ஹோண்டா பின்பற்றுகிறது.

இந்திய சிபி200எக்ஸ் vs இந்தோனிஷிய சிபி150எக்ஸ்!! பக்கா ஹோண்டா அட்வென்ச்சர் பைக் எது?

சிபி200எக்ஸ் பைக்கில் உள்ளதை போன்று அதிக எண்ணிக்கையில் பேனல்கள் சிபி150எக்ஸ்-இல் வழங்கப்படவில்லை. ஆனால் நீளமான எதிர்காற்று தடுப்பு கண்ணாடி இந்த 150சிசி அட்வென்ச்சர் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்கா அட்வென்ச்சர் பைக்காக சிபி150எக்ஸ் காட்சியளிப்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் பக்கவாட்டு பேன்ல்கள் சிபி200எக்ஸ்-இல் ஸ்போர்டியரானதாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.

இந்திய சிபி200எக்ஸ் vs இந்தோனிஷிய சிபி150எக்ஸ்!! பக்கா ஹோண்டா அட்வென்ச்சர் பைக் எது?

உண்மையில் குறைவான சிசி என்ஜினை கொண்டிருந்தாலும், சிபி150எக்ஸ் மெட்டல்-போன்ற ஃபினிஷ் உடன் சற்று பிரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது. இவை இரண்டிற்கும் இடையே மற்றொரு கவனிக்கத்தக்கக்கூடிய வித்தியாசமாக, சிபி150எக்ஸ் மெட்டாலிக் ஃபினிஷில் பெரிய என்ஜின் பேஷ் தட்டினை கொண்டுள்ளது. அப்படியே சிபி200எக்ஸ் பைக்கிற்கு வந்தோமேயானால், இதில் சிறிய அளவிலான மெட்டாலிக்-அல்லாத யூனிட் வழங்கப்படுகிறது.

இந்திய சிபி200எக்ஸ் vs இந்தோனிஷிய சிபி150எக்ஸ்!! பக்கா ஹோண்டா அட்வென்ச்சர் பைக் எது?

வன்பொருள்கள்

சிபி150எக்ஸ் மற்றும் சிபி200எக்ஸ் என இரண்டும் ஒரே மாதிரியான டைமண்ட்-டைப் ஃப்ரேமின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனுக்கு சிபி150எக்ஸ்-இல் முன்பக்கத்தில் 150மிமீ டிராவல் உடன் தலைக்கீழான 37மிமீ ஷோவா ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ப்ரோ-லிங்க் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதுவே சிபி200எக்ஸ்-இல் யுஎஸ்டி முன்பக்க ஃபோர்க்குகளையும், பின்பக்க மோனோ-ஷாக்கையும் ஹோண்டா பொருத்துகிறது. ஆனால் இதில் டிராவல்கள் சிபி150எக்ஸ் உடன் ஒப்பிடுகையில் சற்று சிறியதாக உள்ளன.

இந்திய சிபி200எக்ஸ் vs இந்தோனிஷிய சிபி150எக்ஸ்!! பக்கா ஹோண்டா அட்வென்ச்சர் பைக் எது?

பிரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ஐ சிபி200எக்ஸ் மாடல் மட்டுமே பெற்றுள்ளது. இந்த இரு அட்வென்ச்சர் பைக்குகளிலும் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைனில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் நமது இந்திய சிபி200எக்ஸ் பைக்கில் நன்கு அகலமான டயர்கள் பொருத்தப்படுகின்றன.

இந்திய சிபி200எக்ஸ் vs இந்தோனிஷிய சிபி150எக்ஸ்!! பக்கா ஹோண்டா அட்வென்ச்சர் பைக் எது?

என்ஜின் அமைப்பு

இந்த இரு ஹோண்டா அட்வென்ச்சர் பைக்குகளுக்கு இடையேயான மிக முக்கியமான வித்தியாசம் இதுவாகும். இந்தோனிஷியாவில் வெளியீடு செய்யப்பட்டுள்ள சிபி150எக்ஸ் பைக்கில் 149.16சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை ஹோண்டா பொருத்தியுள்ளது. இருப்பினும் இந்த என்ஜின் எத்தகைய ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதை தற்போதைக்கு இன்னும் வெளியிடவில்லை.

இந்திய சிபி200எக்ஸ் vs இந்தோனிஷிய சிபி150எக்ஸ்!! பக்கா ஹோண்டா அட்வென்ச்சர் பைக் எது?

சிபி150எக்ஸ்-இன் நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலான சிபி150ஆர் பைக்கில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 16.5 பிஎச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 13.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. மறுப்பக்கம் சிபி200எக்ஸ் பைக்கில் ஹார்னெட் 2.0 பைக்கின் 184.4சிசி, ஃப்யுல்-இன்ஜெக்டட் சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 8500 ஆர்பிஎம்-இல் 17 பிஎச்பி மற்றும் 6000 ஆர்பிஎம்-இல் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்திய சிபி200எக்ஸ் vs இந்தோனிஷிய சிபி150எக்ஸ்!! பக்கா ஹோண்டா அட்வென்ச்சர் பைக் எது?

வசதிகள்

தொழிற்நுட்ப வசதிகளை பொறுத்தவரையில், சிபி150எக்ஸ் மற்றும் சிபி200எக்ஸ் என இரண்டு பைக்கும் முழு-எல்இடி விளக்குகள், டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை பெற்றுள்ளன. இருப்பினும் இந்த அட்வென்ச்சர் பைக்குகள் இரண்டிலும் இணைப்பு தொழிற்நுட்பங்களை ஹோண்டா வழங்கவில்லை. ஆனால் சிபி200எக்ஸ்-ஐ காட்டிலும் இந்தோனிஷிய சிபி150எக்ஸ்-இல் ஓட்டுனரால் கூடுதல் தகவல்களை பெற முடியும்.

Most Read Articles
English summary
India-spec Honda CB200X Vs Indonesia-spec CB150X.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X