இந்தியன் நிறுவனத்தின் புதிய சீஃப் மாடல்களின் விலை விபரம் வெளியீடு!

இந்தியன் நிறுவனத்தின் சீஃப் வரிசையில் வர இருக்கும் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான ஆரம்ப விலை விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய மாடல்களுக்கு புக்கிங்கும் துவங்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 இந்தியன் நிறுவனத்தின் புதிய சீஃப் மாடல்களின் விலை விபரம் வெளியீடு!

பிரம்மாண்ட வகையிலான பிரிமீயம் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் உலக அளவில் மிகவும் பிரபலமானதாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு பல்வேறு வகைகளில் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது.

 இந்தியன் நிறுவனத்தின் புதிய சீஃப் மாடல்களின் விலை விபரம் வெளியீடு!

அந்த வகையில், வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற இந்தியன் சீஃப் என்ற குடும்ப வரிசையிலான மாடல்கள் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

 இந்தியன் நிறுவனத்தின் புதிய சீஃப் மாடல்களின் விலை விபரம் வெளியீடு!

இந்த நிலையில், இந்த சீஃப் குடும்ப வரிசையில் வர இருக்கும் புதிய மாடல்கள் ரூ.20.76 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாடல்களுக்கு ரூ.3 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்தியன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 இந்தியன் நிறுவனத்தின் புதிய சீஃப் மாடல்களின் விலை விபரம் வெளியீடு!

இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டு காலத்தில், அதாவது, வரும் ஏப்ரல்- ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் இந்த புதிய சீஃப்டெயின் மாடல்கள் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 இந்தியன் நிறுவனத்தின் புதிய சீஃப் மாடல்களின் விலை விபரம் வெளியீடு!

இந்தியன் சீஃப் என்ற குடும்ப வரிசையில் சீஃப் டார்க் ஹார்ஸ், சீஃப் பாபர் டார்க் ஹார்ஸ், சூப்பர் சீஃப் லிமிடேட் ஆகிய மூன்று மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த மாடல்களில் வீல்பேஸ் மற்றும் இருக்கை உயரம் குறைக்கப்பட்டுள்ளது.

 இந்தியன் நிறுவனத்தின் புதிய சீஃப் மாடல்களின் விலை விபரம் வெளியீடு!

மேலும், இந்த மாடல்கள் 304 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஓட்டுனருக்கு வசதியான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் விதத்தில், 28.5 டிகிரி கோணத்தில் சாய்வாக இணைக்கப்பட்டு இருக்கும் 46 மிமீ ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன் உள்ளது.

 இந்தியன் நிறுவனத்தின் புதிய சீஃப் மாடல்களின் விலை விபரம் வெளியீடு!

இந்த மோட்டார்சைக்கிள் மாடல்களில் முழுமையான எல்இடி பல்புகளுடன் ஹெட்லைட், கீ லெஸ் இக்னிஷன், யுஎஸ்பி சார்ஜர், 4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூடூத் இணைப்பு வசதி, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 இந்தியன் நிறுவனத்தின் புதிய சீஃப் மாடல்களின் விலை விபரம் வெளியீடு!

புதிய இந்தியன் சீஃப் வரிசை மோட்டார்சைக்கிள் மாடல்களில் 1,890 சிசி வி ட்வின் ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 162 என்எம் டார்க் திறனை வழங்கும். 6 ஸ்பீடு கியர்பா்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டான்டர்டு, ஸ்போர்ட் மற்றும் டூர் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Indian Motorcycle has commenced pre Bookings For 2022 Chief Lineup in India.
Story first published: Thursday, March 11, 2021, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X