100 வருடங்களை நிறைவு செய்யும் Indian Chief பிராண்ட்!! 2022 Chief பைக்குகள் அறிமுகம்

2022 Chief மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் Indian Motorcycle நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய Indian மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

100 வருடங்களை நிறைவு செய்யும் அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் பிராண்ட் - Indian Motorcycle!!

முதன்முதலாக 1921ல், அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக Indian Motorcycle நிறுவனம் Indian Chief மோட்டார்சைக்கிளை வெளியீடு செய்தது. அதன்பின் வாடிக்கையாளர்கள் பலரை கவர்ந்த இந்த Indian Motorcycle மாடல் தற்சமயம் உள்ள மிகவும் பழமையான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக விளங்குகிறது.

100 வருடங்களை நிறைவு செய்யும் அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் பிராண்ட் - Indian Motorcycle!!

1921ல் வணிகத்தை துவங்கிய இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெற்றிக்கரமாக 100 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே 2022 Chief வரிசை மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த Chief மோட்டார்சைக்கிள்கள் வரிசையில், Chief Dark Horse, Chief Bobber Dark Horse மற்றும் Super Chief Limited என்பவை அடங்குகின்றன.

100 வருடங்களை நிறைவு செய்யும் அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் பிராண்ட் - Indian Motorcycle!!

வி-இரட்டை ஸ்டைலில், மாடர்ன் செயல்திறன் மற்றும் தொழிற்நுட்பங்களுடன் பெயரில் மட்டும் தான் இந்தியாவை இவை கொண்டுள்ளதே தவிர்த்து புதிய Chief பைக்குகள் பக்கா அமெரிக்கன்-ஸ்டைல் மோட்டார்சைக்கிள்களாக உருவாக்கப்பட்டுள்ளன. steel-tube frame-இல் உருவாக்கப்பட்டுள்ள இந்த Chief பைக்குகள் அனைத்திலும் Indian Motorcycle நிறுவனத்தின் ஆற்றல்மிக்க 1000 ஸ்ட்ரோக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

100 வருடங்களை நிறைவு செய்யும் அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் பிராண்ட் - Indian Motorcycle!!

இருப்பினும் மூன்றிலும் ஒன்றில் இருந்து ஒன்று வேறுப்பட்ட ரைடிங் அனுபவத்தை பெற முடியும். புதிய Chief மோட்டார்சைக்கிள்கள், ஒரு காலத்தில் விற்பனையில் இருந்த அமெரிக்க வி-இரட்டை என்ஜின் பைக்குகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதில் Chief Bobber Dark Horse கூடுதல் ஸ்டைலானது.

100 வருடங்களை நிறைவு செய்யும் அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் பிராண்ட் - Indian Motorcycle!!

Super Chief Limited பைக்கானது பொருட்களை வைப்பதற்கான பிரத்யேக பைகள் மற்றும் முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடி உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த Indian மோட்டார்சைக்கிள்கள் அனைத்திலும் 15.1 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் சக்கரங்களில் Pirelli Night Dragon tires பொருத்தப்பட்டுள்ளன.

100 வருடங்களை நிறைவு செய்யும் அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் பிராண்ட் - Indian Motorcycle!!

இவற்றுடன் ஸ்போர்ட், ஸ்டாண்டர்ட் & டூர் என்ற 3 விதமான ரைடிங் மோட்களை பெற்றுவந்துள்ள 2022 Indian Chief பைக்குகளில் க்ரூஸ் கண்ட்ரோலும் மிக முக்கிய அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. 1626மிமீ-இல் வீல்பேஸ் (சக்கரங்களுக்கு இடையேயான தூரம்), 662மிமீ-இல் தரையில் இருந்து இருக்கையின் உயரத்தை கொண்டுள்ள புதிய Chief பைக்குகளின் எடை கிட்டத்தட்ட 300 கிலோ என்ற அளவில் தான் உள்ளதால் எந்தவொரு ரைடரும் சிரமமின்றி இவற்றை ஓட்டலாம் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

100 வருடங்களை நிறைவு செய்யும் அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் பிராண்ட் - Indian Motorcycle!!

மற்றப்படி Indian Chief பைக்குகளின் வழக்கமான 132மிமீ டிராவல் உடன் 46மிமீ-இல் முன்பக்க ஃபோர்க்குகள், 28.5-கோண lean angle மற்றும் சவுகரியமான ரைடிங் பொசிஷன் உள்ளிட்டவை இந்த 2022 மாடல்களிலும் தொடரப்பட்டுள்ளன. இவை மூன்றிலும் 1890சிசி தண்டர்ஸ்ட்ரோக் 116 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

100 வருடங்களை நிறைவு செய்யும் அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் பிராண்ட் - Indian Motorcycle!!

இதன் மூலமாக 162 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பெற முடியும். ABS நிலையானதாக இவற்றில் வழங்கப்பட்டுள்ளது. Chief மற்றும் Chief Bobber Dark Horse பைக்குகள் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்க, Super Chief Limited மாடல் மட்டும் கூடுதல் காஸ்ட்லீயான தோற்றத்திற்காக க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

100 வருடங்களை நிறைவு செய்யும் அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் பிராண்ட் - Indian Motorcycle!!

இவற்றுடன் பயணத்தை, பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலில் முன்னரே திட்டமிட்டு கொள்ளும் வசதியும் (Ride Command system) இந்த Indian Chief மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதியினை ஓட்டுனர் ஹேண்டில்பாரில் வழங்கப்பட்ட கண்ட்ரோல்களின் மூலமாகவோ அல்லது தொடுத்திரை மூலமாகவோ பயன்படுத்த முடியும்.

அத்துடன் பைக் & பயணம் குறித்த விபரங்கள் மற்றும் turn-by-turn navigation உள்ளிட்ட வசதிகளையும் இந்த Chief மோட்டார்சைக்கிள்களில் பெறலாம். மேலும் Ride Command அமைப்பின் வாயிலாக, மொபைல் போனை ப்ளூடூத் அல்லது யுஎஸ்பி மூலமாக பைக் உடன் இணைத்திருந்தால், வயர் இல்லா ஹெல்மெட்டில் ஒலித்து கொண்டிருக்கும் பாடல்களை பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலிலேயே மாற்றலாம்/ கண்ட்ரோல் செய்யலாம்.

100 வருடங்களை நிறைவு செய்யும் அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் பிராண்ட் - Indian Motorcycle!!

பாடல்கள் மட்டுமல்ல, மொபைல் போனிற்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளையும் பாக்கெட்டில் இருந்து போனை எடுக்காமல் இந்த Indian Chief பைக்குகளின் மூலமாகவே கண்ட்ரோல் செய்ய முடியும் என்கிறது தயாரிப்பு நிறுவனம். இந்த மூன்று Indian Chief பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.20.75 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆரம்ப விலை உடன் 2022 Chief மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது குறித்து இந்தியாவில் Indian Motorcycle பிராண்டை நிர்வகித்துவரும் Polaris India Pvt.Ltd நிறுவனத்தின் முதன்மை மேலாளர் லலித் சர்மா பேசுகையில், Chief, ஒரு புகழ்பெற்ற, பழமையான வரலாற்றை கொண்ட பிராண்ட். இத்தகைய பிராண்டின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாங்கள் Chief மோட்டார்சைக்கிளின் புதிய வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார்.

Most Read Articles
English summary
Indian Motorcycle launches the new 2022 Chief line up in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X