புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் வெளியானது!

அண்மையில் வெளியிடப்பட்ட புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் எஞ்சின் குறித்து பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களும், இந்த பைக் எப்போது அறிமுகம் செய்யப்படும் உள்ளிட்ட விபரங்களும் தற்போது வெளியாகி இருக்கின்றன.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் வெளியானது!

மஹிந்திராவின் அங்கமாக செயல்பட்டு வரும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ ஆகிய பாரம்பரிய மோட்டார்சைக்கிள் பிராண்டுகளை கையகப்படுத்தி, அந்த பிராண்டுகளில் புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது. ஜாவா பிராண்டு மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துவிட்ட கிளாசிக் லெஜென்ட்ஸ் அடுத்து யெஸ்டி பிராண்டு பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் வெளியானது!

இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பிஎஸ்ஏ பிராண்டில் கோல்டு ஸ்டார் 650 என்ற பெயரில் புதிய பைக்கை அண்மையில் வெளியிட்டது. இந்த பைக் உலக அளவில் பைக் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பைக்கின் எஞ்சின் மற்றும் இந்திய வருகை குறித்த சில முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் வெளியானது!

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ எஃப்650 ஃபன்டுரோ என்ற பைக்கில் வழங்கப்பட்ட எஞ்சினை மேம்படுத்தி பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கில் பயன்படுத்ததப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது, பிஎம்டபிள்யூ எஃப்650 ஃபன்டுரோ பைக்கின் 652சிசி எஞ்சினை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த ரோட்டேக்ஸ் நிறுவனம் உருவாக்கி கொடுத்தது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் வெளியானது!

தற்போது கோல்டு ஸ்டார் 650 பைக்கில் ரோட்டேக்ஸ் நிறுவனத்தின் 652சிசி எஞ்சின்தான் பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது, பிஎம்டபிள்யூ எஃப்650 ஃபன்டுரோ பைக்கின் எஞ்சினை யூரோ-5 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மாற்றங்களை செய்து மேம்படுத்தி உள்ளனர்.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் வெளியானது!

இந்த எஞ்சின்தான் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த 652சிசி எஞ்சின் DOHC லிக்யூடு கூல்டு வகை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 45 பிஎச்பி பவரையும், 55 என்எஎம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் வெளியானது!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கிற்கு நேரடி போட்டியாக எதிர்பார்க்கப்படும் இந்த எஞ்சின் பவர் வெளிப்படுத்தும் திறனில் சற்று குறைவாக இருந்தாலும், அதிக டார்க் திறனை வழங்க வல்லதாக இருக்கிறது. மணிக்கு 166 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் வெளியானது!

இதுகுறித்து கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் அனுபம் தரேஜா ஆட்டோகார் இந்தியா தளத்திடம் தெரிவித்துள்ள தகவலில், "இங்கிலாந்தை சேர்ந்த ரிகார்டோ நிறுவனம்தான் புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் சேஸி உள்ளிட்டவற்றின் உருவாக்கப் பணிகளை மேற்கொண்டது. ரெட்லைன் ஸ்டூடியோ டிசைன் செய்தது, என்று தெரிவித்துள்ளார்.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் வெளியானது!

மேலும், இந்த பைக் முதலில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும். முதல்கட்டமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர், மேலை நாடுகளுக்காக இங்கிலாந்தில் இந்த பைக்கை உற்பத்தி செய்வதற்கான திட்டமும் உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், இந்த பைக் உடனடியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்று தெரிய வந்துள்ளது. இந்த பைக்கின் பொறியியல் மற்றும் ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடப்பதால், அறிமுகத்திற்கு சற்று காலம் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் வெளியானது!

இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் மட்டுமே ஜாவா பைக்குகளை விற்பனை செய்யும் உரிமத்தையும், அனுமதியையும் கிளாசிக் லெஜென்ட்ஸ் பெற்றுள்ளது. எனவே, இங்கிலாந்தில் மல்டி பிராண்டு பைக் விற்பனை நிலையங்கள் மூலமாக பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கை விற்பனை செய்ய கிளாசிக் லெஜென்ட்ஸ் திட்டமிட்டுள்ளது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் வெளியானது!

இந்த புதிய பைக் டபுள் கிராடில் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 18 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் பயன்படுத்தப்பட்டு இருக்கும் இரண்டு சக்கரங்களிலும் பைரெல்லி ஃபான்டம் ஸ்போர்ட்ஸ்காம்ப் டயர்கள் உள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டு இருக்கும். இரண்டு சக்கரங்களிலும் பிரெம்போ காலிபர்கள் மறும் சிங்கிள் டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

English summary
Interesting Details About New BSA Gold Star Motorcycle.
Story first published: Friday, December 10, 2021, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X