நீங்க ஜாவா பைக் உரிமையாளரா? முதல்ல இத படிச்சுட்டு மறு வேலைய பாருங்க!

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளை அட்டகாசமாக மாற்றிக் கொள்வதற்கான இரண்டு புதிய ஆக்சஸெரீகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆக்சஸெரீகளும் அதிரடி தள்ளுபடி விலையில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக ஜாவா அறிவித்துள்ளது.

நீங்க ஜாவா 42 பைக் உரிமையாளரா?

இந்தியாவின் நடுத்தர வகை க்ரூஸர் பைக் மார்க்கெட்டில் ஜாவா பைக்குகள் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன. இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய ஜாவா 42 பைக் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜாவா 42 (2.1) என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்தது.

புதிய வண்ணத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், ஸ்போக்ஸ் சக்கரங்களுக்கு பதிலாக அலாய் வீல்களும் வழங்கப்பட்டன. அலாய் வீல்கள், எஞ்சின் பகுதி, புகைப்போக்கி குழாய், சஸ்பென்ஷன் யூனிட்டுகள் ஆகியவை கருப்பு வண்ணத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இதுதவிர்த்து, இண்டிகேட்டர், ஹெட்லைட் ஆகியவற்றில் புதிய அலங்கார வேலைப்பாடுகளும் இடம்பெற்றிருந்தன. லெக் கார்டு மற்றும் ஹேண்டில்பார், ரேடியேட்டர் அமைப்பு ஆகியவையும் கருப்பு வண்ணத்திற்கு மாற்றப்பட்டு இருந்தது. சொகுசான புதிய இருக்கை, தையல்வேலைப்பாடு, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டயல், க்ராப் ரெயில், ஹெட்லைட் க்ரில், டின்ட் செய்யப்பட்ட வைசர் ஆகியவையும் மதிப்பை கூட்டின.

இதனால், புதிய ஜாவா 42 பைக் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே ஜாவா 300 மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு பைக் மாடல்களையும் வாங்கியவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், 300 மற்றும் 42 பைக்குகளின் தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, பழைய ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகளுக்கு ட்யூப்லெஸ் டயர்களுடன் கூடிய புதிய அலாய் வீல்கள் மற்றும் ஸ்டைலான பார் எண்ட் வகை கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு புதிய ஆக்சஸெரீகளுக்கும் ரூ.14,498 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வரும் 31ந் தேதிக்குள் இந்த புதிய ஆக்சஸெரீகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தொகுப்பை வெறும் ரூ.7,999 என்ற விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

ஜாவா மோட்டார்சைக்கிள்

கோல்டன் ஸ்கீம் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆக்சஸெரீகள் வழங்கப்படுகின்றன. இந்த புதிய ஆக்சஸெரீகள் ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளுக்கு அதிக கவர்ச்சியையும், தனித்துவத்தையும் வழங்கும்.

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் டிசைனில்தான் வேறுபடுகின்றன. ஆனால், எஞ்சின் ஒன்றுதான். இந்த பைக் மாடல்களில் 293சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 27.3 பிஎச்பி பவரையும், 27.05 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa has announced Golden Stripes accessories package with huge discount offer in Indian customers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X