Just In
- 6 min ago
இது வானத்தில் பறக்காது... கட்டிட கலைஞர் உருவாக்கிய வித்தியாசமான வாகனம்... சூப்பர் திறமை!!
- 11 min ago
புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரின் டீசர் வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!
- 1 hr ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 1 hr ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
Don't Miss!
- News
முதல் ரவுண்டில் கறார்.. திமுக மீட்டிங் முடிந்த கையோடு கேஎஸ் அழகிரி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது?
- Finance
கவனிக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்.. ஈஸி டிரிப் பிளானர்ஸ் ஐபிஓ.. நல்ல வாய்ப்பு..!
- Movies
என்னை தேவதையாக்கிய தாய்மை.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய 'எருமை சாணி' ஹரிஜா!
- Sports
எரியுற தீயில் எண்ணெய ஊத்துறதா? ..... டக் அவுட்டான கோலி... மறைமுகமாக கடுப்பேத்தும் க்ரீம் ஸ்வான்
- Lifestyle
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முந்தைய மாடலை விட அட்டகாசமான அலங்கரிப்பில் 2021 ஜாவா ஃபார்டி டூ... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்...
முந்தைய மாடலைவிட கூடுதல் அலங்கரிப்பு அம்சங்களுடன் ஜாவா ஃபார்டி டூ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் கிளாசிக் ரக வாகன விற்பனையில் தனி ஆளாக ராயல் என்பீல்டு கெத்துக் காட்டி வந்த நேரம் அது அப்போது இந்நிறுவனத்திற்கு போட்டியாக மீண்டும் மறுமலர்ச்சியாக ஆக இருப்பதாக பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஜாவா அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் மீண்டும் கால் தடம் பதித்தது.

இதனைத் தொடர்ந்து, ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா ஃபார்டி டூ (Forty Two), ஜாவா பெராக் ஆகிய மாடல்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த மாடல்களையே நிறுவனம் தற்போது 2021ம் ஆண்டிற்கு ஏற்ப புதுப்பித்து வருகின்றது. அவ்வாறு, புதுப்பித்தல்களைப் பெற்ற ஃபார்டி டூ மாடலையே இன்று நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இப்பைக்கை இந்திய சாலைகளில் வைத்து தர பரிசோதனைக்கு உட்படுத்தி வந்தநிலையில் இன்று பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக விலையாக ரூ. 1.84 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன புதுப்பித்தல்கள் செய்யப்பட்டுள்ளன?
ஜாவா நிறுவனம் ஃபார்டி டூ பைக்கை மேலும் அழகானதாக மாற்றும் நோக்கில் கூடுதல் சில அம்சங்களையே இந்த புதுப்பித்தலில் சேர்த்திருக்கின்றது. குறிப்பாக, பைக்கின் கவர்ச்சியான தோற்றத்தைக் கூட்டும் வகையில் அலாய் வீல் சேர்க்கப்பட்டிருக்கின்றது. முன்னதாக ஸ்போக் கம்பிகள் கொண்ட அலாய் வீல்களே இதில் பயன்படுத்தப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

தொடர்ந்து, இந்த வீலில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த தேர்வை ஏற்கனவே ஜாவா ஃபார்டி டூ பைக்குகளைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையளர்களுக்கும் வழங்க ஜாவா திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து, பழைய பூச்சுக் கொண்ட அணிகலன்களுக்கு பதிலாக கருப்பு நிறத்திலான கூறுகளையே இம்முறை ஜாவா நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

எக்சாஸ்ட், ஹெட்லைட் முன்பக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் குரோம் பூச்சுக் கொண்ட கூறுகள் முன்னதாக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்ற சிறு சிறு மாற்றங்களையே 2021 ஃபார்டி டூ பைக் பெற்றிருக்கின்றது. ஆகையால், பெரியளவிலான மாற்றங்களை இப்பைக்கில் நம்மால் காண முடியவில்லை.

மேலும், இப்பைக்கில் புதிய பார்-எண்ட் மிர்ரர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, புதிதாக சிறிய ஃப்ளை ஸ்கிரீன் மற்றும் பின்பக்கத்தில் இரும்பு உலோகம் உள்ளிட்டவை நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதுபோதாதென்று கூடுதல் சில அணிகலன்களை அகஸசெரீஸ்களாக வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

எஞ்ஜின் மற்றும் சேஸிஸ்:
மிகவும் வலுவான சேஸிஸையே 2021 ஃபார்டி டூ பைக்கில் பயன்படுத்தியிருப்பதாக ஜாவா தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, அட்ஜெஸ்ட் ப்ரீலோட் வசதிக் கொண்ட சஸ்பென்ஷன் பைக்கின் முன்பக்கத்தில் ஜாவா பொருத்தியிருக்கின்றது. இது, களைப்பற்ற பயண அனுபவத்தை வழங்க உதவும்.

தொடர்ந்து, முந்தைய மாடலைக் காட்டிலும் கூடுதல் 0.8 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினை ட்யூன்-அப் செய்திருக்கின்றது ஜாவா. இதன் தற்போதைய திறன் வெளிப்பாடு 27.3 பிஎச் மற்றும் 27 என்எம் டார்க் ஆகும். இந்த திறனுக்காக 293சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஃப்யூவல் இன்ஜெக்டட், லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

கூடுதல் சிறப்பு அம்சம், புதுப்பிக்கப்பட்ட தோற்றம் உள்ளிட்ட காரணங்களால் இப்பைக்கிற்கு ரூ. 1.84 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.