Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 7 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 9 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்டைலில் கேடிஎம் ட்யூக் பைக்குகளே தோற்றுவிடும்!! கோவாவில் உலாவந்த இந்தியாவின் கபீரா கேஎம்4000 எலக்ட்ரிக் பைக்!
இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகவுள்ள கபீரா கேஎம்4000 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கோவாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கபீரா மொபைலிட்டி நிறுவனம் இரு அதி-வேக எலக்ட்ரிக் பைக்குகளை இந்திய சந்தையில் அடுத்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

கேஎம்3000 மற்றும் கேஎம்4000 என்ற பெயர்களில் கொண்டுவரப்படும் இந்த எலக்ட்ரிக் பைக்குகள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பைக்குகளுக்கான முன்பதிவுகள் சில தினங்களுக்கு முன்புதான் துவங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கோவாவில் கேஎம்4000 பைக் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. கோவாவில்தான் கபீரா மொபைலிட்டி நிறுவனத்திற்கு தொழிற்சாலை உள்ளது.

கேஎம்4000, கேடிஎம் ட்யூக் பைக்குகளை போன்று நாக்டு மோட்டார்சைக்கிளாகும். ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்களில் கேஎம்4000 பைக் கேஎம்3000-ஐ காட்டிலும் சற்று உயரம் அதிகமாக கொண்டிருப்பதை அறிய முடிகிறது.

சோதனையில் பைக் முழுவதும் வெள்ளை நிறத்தால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் பைக்கின் தோற்றத்தை குறித்து ஆராய முடியவில்லை. இவ்வளவு ஏன் பைக் தயாரிப்பு நிறுவனத்தின் முத்திரையை கூட பார்க்க முடியவில்லை.

இது கபீரா கேஎம்4000 என்பதையே பைக் ஓட்டுனரின் சட்டையில் உள்ள லோகோவை வைத்துதான் நாங்கள் அறிந்து கொண்டோம். எப்படியிருந்தாலும் தற்போதைய மாடர்ன் பைக்குகளுக்கு சவால்விடும் வகையில், காற்று இயக்கவியலுக்கு ஏற்ற விதத்தில்தான் இந்த பைக்கின் தோற்றம் இருக்கும்.

ஃபயர் ப்ரூஃப் பேட்டரி, பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளை இரு கபீரா பைக்கிலும் எதிர்பார்க்கலாம். மற்றப்படி கேஎம்4000 பைக்கை பற்றிய விபரங்கள் தற்போதைக்கு குறைவாகவே உள்ளன. நமக்கு கிடைத்துள்ள தகவல்களில் இந்த எலக்ட்ரிக் பைக்குகளில் டெல்டாஇவி பிஎல்டிசி மோட்டார் சிங்கிள்-முழு சார்ஜில் 150கிமீ ரேஞ்சை வழங்கும் விதத்தில் பொருத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் அதிகப்பட்ச வேகம் 120kmph வேகத்தில் வழங்கப்படலாம். இந்த ஸ்பை படங்கள் பைக்கின் முன் சக்கரத்தில் இரட்டை டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளதை வெளிக்காட்டுகின்றன. சஸ்பென்ஷனுக்கு முன் பக்கத்தில் தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் உள்ளன. இவை தவிர்த்து கபீரா பைக்குகளை பற்றிய விரிவான விபரங்கள் அடுத்த மாத அறிமுகத்தின்போது வெளியிடப்படலாம்.