கவாஸாகியின் இந்த ஆஃப்-ரோடு பைக்குகளை சலுகையுடன் வாங்கலாம்!!

கவாஸாகி நிறுவனம் அதன் ஆஃப்-ரோடு மோட்டார்சைக்கிள்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகியின் இந்த ஆஃப்-ரோடு பைக்குகளை சலுகையுடன் வாங்கலாம்!!

கவாஸாகியின் ஆஃப்-ரோடு மோட்டார்சைக்கிள்களாக கேஎல்எக்ஸ்110, கேஎல்எக்ஸ்140 மற்றும் கேஎக்ஸ்100 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை பொது சாலையில் இயக்க அனுமதிக்கப்படாத அட்வென்ச்சர் பைக்குகளாகும்.

கவாஸாகியின் இந்த ஆஃப்-ரோடு பைக்குகளை சலுகையுடன் வாங்கலாம்!!

இவற்றில் கேஎல்எக்ஸ்110 பைக்கிற்கு ரூ.30,000 மதிப்பில் தள்ளுபடி வவுச்சரையும், கேஎல்எக்ஸ்140 பைக்கிற்கு ரூ.40,000 தள்ளுபடி வவுச்சரையும், கேஎக்ஸ்100 பைக்கிற்கு ரூ.50,000 தள்ளுபடி வவுச்சரையும் கவாஸாகி நிறுவனம் வழங்கியுள்ளது.

கவாஸாகியின் இந்த ஆஃப்-ரோடு பைக்குகளை சலுகையுடன் வாங்கலாம்!!

கடந்த வருட ஸ்டாக்கை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் கவாஸாகி நிறுவனம் சலுகையை இந்த பைக்குகளுக்கு வழங்கியுள்ளது. இதனால் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும்.

கவாஸாகியின் இந்த ஆஃப்-ரோடு பைக்குகளை சலுகையுடன் வாங்கலாம்!!

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமையுடன் வழங்கப்படவுள்ள இந்த சலுகையினால் இந்த மோட்டார்சைக்கிள்களின் விற்பனையும் அதிகரிக்கும் என கவாஸாகி நம்பிக்கை கொண்டுள்ளது.

கவாஸாகியின் இந்த ஆஃப்-ரோடு பைக்குகளை சலுகையுடன் வாங்கலாம்!!

கவாஸாகி கேஎல்எக்ஸ்110 பைக்கில் 112சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7.3 பிஎஸ் மற்றும் 8.0 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

கவாஸாகியின் இந்த ஆஃப்-ரோடு பைக்குகளை சலுகையுடன் வாங்கலாம்!!

ரூ.2.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த பைக்கின் எடை வெறும் 76 கிலோ மட்டுமே. கவாஸாகி கேஎல்எக்ஸ்140 பைக்கில் 144சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் என்ஜின் வழங்கப்படுகிறது.

கவாஸாகியின் இந்த ஆஃப்-ரோடு பைக்குகளை சலுகையுடன் வாங்கலாம்!!

இதன் என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. வெறும் 99 கிலோவில் உள்ள இதன் விலை ரூ.4.06 லட்சமாக உள்ளது. கவாஸாகி கேஎக்ஸ்100 பைக்கில் 99சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், 2-ஸ்ட்ரோக் என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

கவாஸாகியின் இந்த ஆஃப்-ரோடு பைக்குகளை சலுகையுடன் வாங்கலாம்!!

ரூ.4.87 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலையினை கொண்டுள்ள இதன் கெர்ப் எடை 77 கிலோ ஆகும். இந்த பைக்குகளை சாலையில் பயன்படுத்த முடியாவிட்டாலும், தனி பயன்பாட்டிற்காக வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை குறித்து விரிவாக அறிய அருகில் டீலர்ஷிப் மையத்தை அணுகவும்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Up to Rs. 50,000 Discount On These 3 Kawasaki Bikes In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X