Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2 புதிய பைக்குகளை அறிமுகம் செய்யும் கவாஸாகி... விலை குறையலாம் என்பதால் நின்ஜா 300 மீது பெரும் எதிர்பார்ப்பு...
கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் 2 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் கூடிய விரைவில் 2 புதிய பைக்குகளை அறிமுகம் செய்வதற்கு கவாஸாகி நிறுவனம் தயாராகி வருகிறது. சமூக வலை தள பதிவு வாயிலாக, 2 புதிய பைக்குகளின் வருகையை கவாஸாகி நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால் என்னென்ன பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது? என்பதை கவாஸாகி நிறுவனம் அறிவிக்கவில்லை.

எனினும் 2 பைக்குகளில் ஒன்று, நின்ஜா 300 பைக்கின் 2021 மாடலாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் கவாஸாகி நிறுவனத்தின் பைக்குகளில் ஒன்றாக நின்ஜா 300 இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. டிசைனை பொறுத்தவரை புதிய கவாஸாகி நின்ஜா 300 பல்வேறு அப்டேட்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வண்ண தேர்வுகள் மற்றும் கிராபிக்ஸ் மூலம் நின்ஜா 300 பைக்கை கவாஸாகி நிறுவனம் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் ட்வின்-போட் ஹெட்லைட் செட்அப், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்பிளிட் இருக்கைகள் ஆகிய வசதிகளையும் புதிய நின்ஜா 300 பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் புதிய நின்ஜா 300 பைக்கில், 296 சிசி, லிக்யூட்-கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 38.4 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அத்துடன் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாகவும் இந்த இன்ஜின் இருக்கும்.

அதே நேரத்தில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விலை தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் முந்தைய மாடலுக்கு 2.98 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் புதிய மாடலின் விலை ஓரளவிற்கு உயர்த்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது 3.20 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் உதிரிபாகங்களை அதிகளவில் இந்தியாவிலேயே பெறுவதற்கு கவாஸாகி திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் விலை குறையலாம் எனவும் சில தகவல்கள் கூறுகின்றன.

எனவே சரியான விலை நிர்ணயத்தை தெரிந்து கொள்வதற்கு புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வரை நாம் காத்திருக்க வேண்டும். கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் புதிய மாடல் இந்திய இளைஞர்கள் மத்தியில் தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விலை குறைந்தால், அதன் விற்பனை இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரத்தில் இரண்டாவது பைக்கை பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்கவில்லை. இது முற்றிலும் புத்தம் புதிய பைக்காக இருக்கலாம். அல்லது தற்போது உள்ள ஏதேனும் ஒரு பைக்கின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாகவும் இருக்கலாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை கவாஸாகி நிறுவனம் வெகு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.