இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

Kawasaki நிறுவனத்தின் KX250 மற்றும் KX450 ஆகிய இரு மாடல் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான Kawasaki (கவாஸாகி), KX250 (கேஎக்ஸ்250) மற்றும் KX450 (கேஎக்ஸ்450) ஆகிய இரட்டையர் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இரண்டும் அட்வென்சர் ரக வாகனமாகும். இதனை அட்வென்சர் ட்வின் என நிறுவனம் குறிப்பிடுகின்றது.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

இதில், கேஎக்ஸ்250 மாடலுக்கு ரூ. 7.99 லட்சமும், கேஎக்ஸ்450 மாடலுக்கு ரூ. 8.59 லட்சம் என்ற விலையையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களான ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகியவற்றைக் காட்டிலும் மிக அதிக விலை ஆகும்.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

இரு கார் மாடல்களின் ஆரம்ப நிலை மாடலும் ரூ. 5.59 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இவற்றைக் காட்டிலும் மிக அதிக விலைக் கொண்டதாக தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் கவாஸாகி அட்வென்சர் ட்வின் மோட்டார்சைக்கிள்கள் உள்ளன.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

இவையிரண்டும் ஹார்ட்கோர் ஆஃப்-ரோடிங் மற்றும் டர்ட் பைக் ரக இருசக்கர வாகனங்கள் ஆகும். அட்வென்சர் பயண பிரியர்களைக் கவரும் வகையில் இவ்விரு மோட்டார்சைக்கிள்களை இந்திய இருசக்கர வாகன சந்தையில் கவாஸாகி விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

நாட்டில் அனைத்து கவாஸாகி இருசக்கர வாகன விற்பனையாளர்கள் வாயிலாகவும் இருசக்கர வாகனத்திற்கான புக்கிங் தற்போது தொடங்கப்பட்டிருக்கின்றது. இரு மோட்டார்சைக்கிள்களுக்கும் இடையில் மிக குறைந்த அளவு வித்தியாசங்களே இருக்கின்றன.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

குறிப்பாக உருவ தோற்றத்தில் எந்த மாற்றமும் இரு மாடல்களுக்கும் இடையில் தென்படவில்லை. அதேவேலையில் உள்ளீடுகளில் (கருவிகளில்) பல மாற்றங்களை அவைக் கொண்டிருக்கின்றன. எஞ்ஜின் மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் இரண்டும் மாற்றங்களுடன் தென்படுகின்றன.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

இரு மாடல் மோட்டார்சைக்கிளையும் கவாஸாகி நிறுவனம் இலகு ரக அலுமினியம் ஃப்ரேமால் கட்டமைத்திருக்கின்றது. இதன் டைனமிக்ஸ் பல மடங்கு மேம்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையால் டர்ட் மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏதுவான வாகன மோட்டார்சைக்கிள்கள் காட்சியளிக்கின்றன.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் சாகசத்தின்போது வீலிங் மற்றும் மேடுகளின் வாயிலாக காற்றில் பறக்க ஏதுவான உடல்வாகுவை அவை பெற்றிருக்கின்றன. கூடுதல் ஓர் சிறப்பு விஷயம் என்ன என்றால் இப்பைக்கினை கவாஸாகி டிங்கர் செய்யாமலே உருவாக்கியிருக்கின்றது.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

மேலும், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட எரிபொருளல் தொட்டி, ஓர் தட்டையான ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை மற்றும் மெல்லிய பேனல்களை மோட்டார்சைக்கிள்களை நிறுவனம் அலங்கரித்திருக்கின்றது. இத்துடன், எர்கோ ஃபிட் அட்ஜஸ்டபிள் ஹேண்டில் பார், மாற்றியமைக்கும் வசதிக் கொண்ட கால் வைக்கும் கம்பிகள், ரெந்தல் அலுமினியம் ஃபேட்பார் உள்ளிட்டவையும் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

தொடர்ந்து, அட்வென்சர் பயணங்களின்போது மிக சிறந்த சஸ்பென்ஷன் வசதியை வழங்கும் நோக்கில் 49 மிமீ அளவுள்ள இன்வெர்டட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும் (முன் பக்கத்தில்), ட்ராக் யூனிட் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இரு சஸ்பென்ஷன்களையுமே அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

இதேபோல் மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக ஒற்றை டிஸ்க் பிரேக், 270 மிமி அளவுள்ள ரோட்டார் மற்ரும் ட்வின் பிஸ்டன் காலிபர்கள் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இது முன்பக்க வீலுக்கான பிரேக்கிங் கருவிகள் ஆகும். பின் பக்க வீலில் 250 மிமீ அளவுள்ள ரோட்டார் மற்றும் சிங்கிள் பிஸ்டன் காலிபர்கள் பயனப்டுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

இதில், கேஎக்ஸ் 250 பைக் மாடலில் 249 சிசி திறனை வெளியேற்றக் கூடிய லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் கேஎக்ஸ்450 மாடலில் 449 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளோட விலை ரூ.8 லட்சமாம்! இவற்றை சாலையில் வைத்து இயக்க அனுமதிகூட இல்லை!

இவையிரண்டும் டர்ட் மற்றும் அட்வென்சர் பயணம் ஏதுவான அதிக திறன் கொண்ட மோட்டாராகும். இரு எஞ்ஜின்களும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸிலேயே இயங்கும். இவற்றில் முதல் முறையாக ஹைட்ராலிக் க்ளட்ச் வசதியை கவாஸாகி வழங்குகின்றது. இத்துடன், எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியும் இந்த மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பு இந்த இருசக்கர வாகனங்களை இந்தியாவில் சாலையில் வைத்து இயக்க அனுமதியில்லை.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki launches kx250 and kx450 hardcore off roading bikes in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X