Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
குறிப்பிட்ட சில கவாஸாகி பைக்குகளுக்கு 2021 ஜனவரி மாதத்திற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போல் கவாஸாகி நிறுவனமும் சமீபத்தில் அதன் தயாரிப்புகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளை உயர்த்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த விலை உயர்வை சரிக்கட்டும் நோக்கில் கவாஸாகி பைக்குகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளில் பெரும்பான்மையானவை முந்தைய மாதங்களில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளே அடங்குகின்றன. இருப்பினும் ஸ்டாக் வரை மட்டுமே சலுகை, முதலில் வருபவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களை கவாஸாகி நிறுவனம் இந்த ஜனவரி மாத சலுகையில் இணைத்துள்ளது.

கவாஸாகியின் புதிய சலுகை அறிவிப்பின்படி இந்த 2021 ஜனவரி மாதத்தில் கவாஸாகியின் கேஎக்ஸ்100, கேஎல்எக்ஸ்140, கேஎல்எக்ஸ்110, டபிள்யூ800, வல்கன் எஸ், இசட்650, வெர்சஸ் 650 மற்றும் வெர்சஸ் 1000 மோட்டார்சைக்கிள்களை வாங்குவோர் ரூ.20,000-ல் இருந்து ரூ.50,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்தலாம்.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ரூ.4,87,800 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற கவாஸாகி கேஎக்ஸ்100 பைக்கிற்கு ரூ.30,000 மதிப்பிலான தள்ளுபடிகளும், ரூ.4.06 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகின்ற கேஎல்எக்ஸ்140ஜி பைக்கிற்கு ரூ.40,000 மதிப்பிலான தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேஎல்எக்ஸ்110, ரூ.2,99,500 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அதிகப்பட்ச சலுகை தொகையாக ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.20,000 வரையில் சலுகையை கவாஸாகி வல்கன் எஸ் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் இம்மாதத்தில் பெறலாம்.

வல்கன் எஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.5.94 லட்சமாக உள்ளது. ரூ.7.09 லட்சத்தில் விலையை கொண்டுள்ள டபிள்யூ800 மோட்டார்சைக்கிளுக்கு ரூ.30,000-ல் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

கவாஸாகி இந்தியாவில் சந்தைப்படுத்திவரும் 650சிசி பைக்குகளான இசட்650 மற்றும் வெர்சஸ் 650 பைக்குகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலைகள் முறையே ரூ.6.04 லட்சம் மற்றும் ரூ.6.39 லட்சம் என்ற அளவில் உள்ளன.

அதிகப்பட்ச சலுகை தொகையான ரூ.50 ஆயிரத்தை முழுவதுமாக கவாஸாகியின் 1000சிசி பைக்கான வெர்சஸ்1000 ஏற்றுள்ளது. அதாவது இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளர் அதிகப்பட்சமாக ரூ.50,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்.

ஆண்டுத்தோறும் தயாரிப்புகளின் விலைகளை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குள் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன. இதனால் ஏற்படும் விற்பனை சரிவை சரிக்கட்டவே இந்த தள்ளுபடி சலுகைகள் அனைத்தும். கவாஸாகியும் இந்த நோக்கத்தில்தான் சலுகை அறிவிப்புகளை அதன் சமூக வலைத்தள பக்கங்களில் தற்போது வெளியிட்டுள்ளது.