கவாஸாகியின் இரு புதிய இசட் எச்2 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! இதயம் பலவீனமானவங்க விலையை பாக்காதீங்க!

கவாஸாகியின் புதிய இசட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ பைக்குகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய கவாஸாகி பைக்குகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகியின் இரு புதிய இசட் எச்2 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! இதயம் பலவீனமானவங்க விலையை பாக்காதீங்க!

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கவாஸாகி இசட் எச்2 மாடலின் எஸ்இ வெர்சன்தான் இசட் எச்2 எஸ்இ ஆகும். இவற்றின் விலைகள் முறையே ரூ.21.90 லட்சம் மற்றும் ரூ.25.90 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கவாஸாகியின் இரு புதிய இசட் எச்2 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! இதயம் பலவீனமானவங்க விலையை பாக்காதீங்க!

கவாஸாகியின் சூப்பர்சார்ஜ்டு ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள்களான இவை நிறுவனத்தின் சுகோமி டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முழு-டிஜிட்டல் விளக்குகளை பெற்றுவந்துள்ள இந்த இரு பைக்குகளிலும் ப்ளூடூத்தை ஏற்று கொள்ளக்கூடிய வண்ண இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் 4.3 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளது.

கவாஸாகியின் இரு புதிய இசட் எச்2 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! இதயம் பலவீனமானவங்க விலையை பாக்காதீங்க!

இந்த வண்ண திரை கவாஸாகி ரிடியோலாஜி என்ற அப்கிளேஷன் மூலமாக இயங்கும். புதிய கவாஸாகி இசட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ மோட்டார்சைக்கிள்களில் 998சிசி, இன்-லைன் 4-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, டிஒஎச்சி, 16-வால்வு, சூப்பர்சார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

கவாஸாகியின் இரு புதிய இசட் எச்2 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! இதயம் பலவீனமானவங்க விலையை பாக்காதீங்க!

அதிகப்பட்சமாக 197.2 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரான்ஸ்மிஷன் அமைப்பில் ஸ்லிப்பர்-க்ளட்ச் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கவாஸாகி பைக்குகளும் ட்ரெல்லிஸ் ப்ரேமில் தயாரிக்கப்பட்டுள்ளன.

கவாஸாகியின் இரு புதிய இசட் எச்2 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! இதயம் பலவீனமானவங்க விலையை பாக்காதீங்க!

சஸ்பென்ஷன் அமைப்பாக ஸ்டாண்டர்ட் இசட் எச்2 மாடலில் முன்பக்கத்தில் ஷோவா எஸ்.எஃப்.எஃப்-பிபி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ஷோவா மோனோ-ஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அதேநேரம், எஸ்இ மாடலில் ஷோவாவின் ஸ்கைஹூக் தொழிற்நுட்பத்துடன் கவாஸாகி எலக்ட்ரானிக் கண்ட்ரோல் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

கவாஸாகியின் இரு புதிய இசட் எச்2 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! இதயம் பலவீனமானவங்க விலையை பாக்காதீங்க!

இந்த கவாஸாகி இசட் எச்2 பைக்குகளில் பயணிகளின் பாதுகாப்பிற்கு ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், (ஸ்போர்ட், மழை & சாலை) 3 ரைடிங் மோட்கள், (முழு, பாதி & லோ) 3 பவர் மோட்கள், ஏபிஎஸ், லாஞ்ச் கண்ட்ரோல், குயிக்‌ஷிஃப்டர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Z H2 and Z H2 SE-launched in India.
Story first published: Tuesday, January 5, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X