வீட்டிலேயே உருவாக்கப்பட்ட மின்சார பைக்... இதை உருவாக்கியவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் தெரியுமா?

இளைஞர் ஒருவர் வீட்டிலேயே வைத்து மின்சார பைக் ஒன்றை உருவாக்கியிருக்கின்றார். இதுகுறித்த ஆச்சரியமளிக்கும் தகவல் மற்றும் வீடியோவை இப்பதிவில் காணலாம்.

வீட்டிலேயே உருவாக்கப்பட்ட மின்சார பைக்... இதை உருவாக்கியவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் தெரியுமா?

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் பாபு. வாகன மெக்கானிக்கான இவர் யுட்யூப்பில் மிகவும் ஆக்டிவான நபராக செயல்பட்டு வருகின்றார். இவரின் யுட்யூப் சேனலில் வாகனங்கள் சார்ந்த வீடியோக்களே மிக அதிகம். வாகனங்கள்மீது அதீத ஆர்வம் கொண்ட இவர், வாகனங்கள் சார்ந்து பல புதுமையான செயல்களைச் செய்து வருகின்றார். இதுகுறித்த வீடியோக்களை அவரது சுடுஸ் கஸ்டம் யுட்யூப் சேனலில் அதிகமாக இருக்கின்றன.

வீட்டிலேயே உருவாக்கப்பட்ட மின்சார பைக்... இதை உருவாக்கியவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் தெரியுமா?

ராகேஷ் பாபு, அண்மையில் ஃபோக்ஸ்வேகன் பீட் அடிப்படையிலான மின்சார காரை உருவாக்கினார். இதன் வாயிலாகவே இவரின் முகம் ஆட்டோ உலகில் பிரபலமடையத் தொடங்கியது. இது ஓர் ஹோம் மேட் விண்டேஜ் ரக காராகும். இக்காரைத் தொடர்ந்து, சிறிய தோற்றம் கொண்ட யமஹா ஆர்எக்ஸ்100 மற்றும் சிறுவர்களுக்கான எலெக்ட்ரிக் ஜூப் உள்ளிட்ட வாகனங்களை அவர் உருவாக்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வீட்டிலேயே உருவாக்கப்பட்ட மின்சார பைக்... இதை உருவாக்கியவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் தெரியுமா?

இந்த நிலையில் ராகேஷ் பாபு புதிய வாகனம் ஒன்றை தற்போது உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை தனது யுட்யூப் சேனலில் வீடியோவாக அவர் வெளியிட்டிருக்கின்றார். இம்முறை மின்சாரத்தால் இயங்கக்கூடிய இருசக்கர வாகனத்தை அவர் உருவாக்கியிருக்கின்றார்.

வீட்டிலேயே உருவாக்கப்பட்ட மின்சார பைக்... இதை உருவாக்கியவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் தெரியுமா?

அவர் உருவாக்கியிருக்கும் மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு ட்வின் பைக்கைப் போன்று காட்சியளிக்கின்றது. ஆனால், இப்பைக்கை தனது தனிப்பட்ட வாகன உருவாக்கும் திறன் மூலமாக மட்டுமே அவர் உருவாக்கியிருக்கின்றார். குறிப்பாக, பெட்ரோல் டேங்க் மற்றும் பைக்கின் சேஸ் உள்ளிட்ட சிலவற்றை அவரே, அவர் கைப்பட உலோக தகரத்தால் உருவாக்கியிருக்கின்றார்.

வீட்டிலேயே உருவாக்கப்பட்ட மின்சார பைக்... இதை உருவாக்கியவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் தெரியுமா?

அதேசமயம், இந்த பைக்கின் மெயினான சட்டத்தை வேறொரு பாக்கில் இருந்தே அவர் பெற்றிருக்கின்றார். இதற்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓர் பைக்கை ராகேஷ் பாபு பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனை அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவிலேயே உறுதி செய்திருக்கின்றார்.

வீட்டிலேயே உருவாக்கப்பட்ட மின்சார பைக்... இதை உருவாக்கியவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் தெரியுமா?

தொடர்ந்து மட்டுகுவார்ட், வீல், மின் மோட்டார், மின் விளக்கு மற்றும் ஆக்சலரேஷன் கேபிள் போன்றவற்றை ராகேஷ் பாபு வெளிப்புற சந்தையில் இருந்து பெற்று மின்சார பைக்கின் உருவாக்கத்திற்கு பயன்படுத்தியிருக்கின்றார். இப்பைக்கின் உருவாக்கத்திற்காக தனது வீட்டிலேயே அமைக்கப்பட்டிருக்கும் கராஜையே அவர் பயன்படுத்தியிருக்கின்றார்.

ஆமாங்க ராகேஷ் பாபு தனது வீட்டிலேயே ஓர் சிறிய மெக்கானிக் ஷாப்பை உருவாக்கி அதன் மூலமாகவே வாகனங்களை உருவாக்கும் மற்றும் மெக்கானிக் பணிகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையிலேயே அனைவரையும் அசர வைக்கும் வகையில் மின்சார பைக்கை அவர் உருவாக்கியிருக்கின்றார்.

இந்த பைக்கில் 2 ஆயிரம் வாட் திறன் மின்சார மோட்டாரை அவர் பயன்படுத்தியிருக்கின்றார். கடைசி வீடியோவில் பைக்கை குட்டியானையில் (மினி லோடு வேன்) ஏற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதை வைத்து பார்க்கையில், மின்சார பைக் இன்னும் முழுமையடையவில்லை என்பதை உணர முடிகின்றது.

அதாவது, மின்சார ஒயரிங் மற்றும் பேட்டரி பொருத்தும் பணிக்காக அப்பைக் மினி லோடு வேனில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இப்பைக் முழுமை காட்சிக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Kerala YoungMan Builds Electric Motorcycle At Home. Read In Tamil.
Story first published: Monday, April 5, 2021, 10:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X