காற்றில் பறக்க, தண்ணீரில் மிதக்க, சாலையில் சீறி பாய இந்த ஒரு வாகனம் போதும்.. கேரள இளைஞரின் செம்ம கண்டுபிடிப்பு

கேரள இளைஞர் உருவாக்கியிருக்கும் ஒற்றை வாகனத்தைக் கொண்டு காற்றில் பறக்கலாம், சாலையில் சீறிப் பாய்ந்து செல்லலாம், தண்ணீரில் மிதக்கலாம். இத்தகைய வசதிக் கொண்ட வாகனத்தையே இளைஞர் உருவாக்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

காற்றில் பறக்க, தண்ணீரில் மிதக்க, சாலையில் சீறி பாய இந்த ஒற்றை வாகனம் போதும்... கேரள இளைஞரின் அசாத்திய கண்டுபிடிப்பு!

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்து வரும் மிகவும் பிரபலமான இருசக்கர வாகன மாடல்களில் பல்சர் பைக்கும் ஒன்று. இதனை இந்திய இளைஞர்களின் மிகவும் பிடித்தமான இருசக்கர வாகனம் என்றும்கூட கூறலாம். அந்தளவிற்கு இளைஞர்கள் இப்பைக் மீது மிகுந்த வெறித்தனமான பிரியர்களாக இருந்து வருகின்றனர்.

காற்றில் பறக்க, தண்ணீரில் மிதக்க, சாலையில் சீறி பாய இந்த ஒற்றை வாகனம் போதும்... கேரள இளைஞரின் அசாத்திய கண்டுபிடிப்பு!

இந்த பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலங்கள் ஆகின்றன. இந்த நிலையிலும், தற்போதும் மவுசு குறையாமல் விற்பனையைப் பெற்று வருகின்றது பல்சர். இத்தகைய பைக்கின் எஞ்ஜினைக் கொண்டே இந்திய இளைஞர் ஒருவர் மூன்று விதமாக பயன்படுத்தக் கூடிய வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார்.

காற்றில் பறக்க, தண்ணீரில் மிதக்க, சாலையில் சீறி பாய இந்த ஒற்றை வாகனம் போதும்... கேரள இளைஞரின் அசாத்திய கண்டுபிடிப்பு!

இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்த விநோத வாகனம் பற்றிய வீடியோவை ஆனந்த் ஹெலிக் கல்யாணி எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. ஆனந்த் என்பது வாகனத்தை உருவாக்கிய பெயர் ஆகும். தன்னுடைய பெயரிலேயே வாகன மாடிஃபிகேஷன் பற்றிய வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகின்றார்.

காற்றில் பறக்க, தண்ணீரில் மிதக்க, சாலையில் சீறி பாய இந்த ஒற்றை வாகனம் போதும்... கேரள இளைஞரின் அசாத்திய கண்டுபிடிப்பு!

இது ஓர் கேரளாவை மையமாகக் கொண்டு இயங்கும் மலையாள சேனல் இதுவாகும். மூன்று வித பயன்பாடுக் கொண்ட வாகனத்தை உருவாக்கியவரும் மலையாளி ஆவார். இவரே பஜாஜ் பல்சர் என்எஸ்200 மோட்டார்சைக்கிளின் எஞ்ஜினைக் கொண்டு இவ்வாகனத்தை கட்டமைத்திருக்கின்றார்.

காற்றில் பறக்க, தண்ணீரில் மிதக்க, சாலையில் சீறி பாய இந்த ஒற்றை வாகனம் போதும்... கேரள இளைஞரின் அசாத்திய கண்டுபிடிப்பு!

3 இன் 1 வாகனம்; ட்ரைக் பைக், தண்ணீரில் செல்லும் போட் மற்றும் ஏர் போட் என வெவ்வேறு விதமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடிய ஒற்றை வாகனத்தையே ஆனந்த் உருவாக்கியிருக்கின்றார். முதலில் இவர் உருவாக்கியது ட்ரைக் ரக பைக்காகும். இதுவே மூன்று வாகனங்களுக்குமான அடிப்படை வாகனமாகும்.

காற்றில் பறக்க, தண்ணீரில் மிதக்க, சாலையில் சீறி பாய இந்த ஒற்றை வாகனம் போதும்... கேரள இளைஞரின் அசாத்திய கண்டுபிடிப்பு!

இதனை உருவாக்க அவர் உலோக ராட்களை அவர் பயன்படுத்தியிருக்கின்றனர். இவற்றைக் கொண்டே ஸ்டார் போன்ற ஓர் சட்டத்தை உருவாக்கி, அதன் பின்னர் பெரிய மின்விசிறி அமைப்பை பொருத்தியிருக்கின்றார். இதுவே வாகனத்தின் இயக்கத்திற்கு உதவுகின்றது.

காற்றில் பறக்க, தண்ணீரில் மிதக்க, சாலையில் சீறி பாய இந்த ஒற்றை வாகனம் போதும்... கேரள இளைஞரின் அசாத்திய கண்டுபிடிப்பு!

அதாவது, சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனமாக இயங்கும்போது அல்லது தண்ணீரில் படகாக மிதக்கும்போது அல்லது வான்வெளியில் பறக்கும்போது, இந்த அனைத்து நிலை இயக்கத்திற்குமே பின் பகுதியில் பொருத்தியிருக்கும் விசிறியே உதவுகின்றது. இது வாகனத்திற்கு தள்ளு விசையை வழங்கி இயக்கத்தை உருவாக்குகின்றது.

படகு; காற்றடைக்கப்பட்ட இரு செவ்வக அமைப்பிலான பெட்டியினை இரு முனைகளிலும் பொருத்துவதன்மூலம் இந்த வாகனத்தை படகாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதேப்போன்று இதனை ஏர் போட்டாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு பாராகிளைடிங்கிற்காகன ரெக்கைகளை இவ்வாகனத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும்.

காற்றில் பறக்க, தண்ணீரில் மிதக்க, சாலையில் சீறி பாய இந்த ஒற்றை வாகனம் போதும்... கேரள இளைஞரின் அசாத்திய கண்டுபிடிப்பு!

அவ்வாறு பொருத்தும்பட்சத்தில் இவ்வாகனத்தைக் கொண்டு வானில் பறக்க முடியும். இதேபோன்று சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனமாகனவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு நான்கு சக்கரங்களை மட்டும் இணைத்தால் போதுமானது. இந்த அனைத்துவிதமான பயன்பாட்டையும் ஆனந்த் தனது நண்பர்களுடன் செய்து காட்டியிருக்கின்றார்.

காற்றில் பறக்க, தண்ணீரில் மிதக்க, சாலையில் சீறி பாய இந்த ஒற்றை வாகனம் போதும்... கேரள இளைஞரின் அசாத்திய கண்டுபிடிப்பு!

உலகளவில் இதுபோன்ற பன்முக (3 இன் 1) வசதிக் கொண்ட இது மட்டுமே ஆகும். இத்தகைய அரிதான வாகனத்தையே கேரளாவைச் சேர்ந்த இளைஞர் உருவாக்கியிருக்கின்றார். இந்த வாகனத்திற்காக அவர் பஜாஜ் பல்சர் என்எஸ் 200 மோட்டார்சைக்கிளின் எஞ்ஜினைப் பயன்படுத்தியிருக்கின்றார்.

காற்றில் பறக்க, தண்ணீரில் மிதக்க, சாலையில் சீறி பாய இந்த ஒற்றை வாகனம் போதும்... கேரள இளைஞரின் அசாத்திய கண்டுபிடிப்பு!

ஆகையால், வேகக் கட்டுப்பாடு, பிரேக் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, ஓர் பல்சர் பைக்கை எப்படி நாம் பயன்படுத்துகின்றோமோ, அதேபோன்றே, இந்த வாகனத்தையும் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதன் கட்டுப்பாடுகள் அனைத்தும் கால்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆக்சலரேஷன், பிரேக் என அனைத்தும் கால்களைக் கொண்டே கட்டுப்படுத்த முடியும்.

Most Read Articles

English summary
Kerala Youngster Made 3-in-1 Vehicle; You Can This Use This As Trike, Air-Boat & Boat. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X