மீண்டும் உயிர் பெறுகிறது Kinetic Luna... ஆனா இந்த முறை வேற லெவலில் அறிமுகமாக போகுது! தெரிஞ்சா அசந்துருவீங்க!

Kinetic Luna மீண்டும் இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமின்றி வேற லெவல் வசதிகளுடன் அது களமிறங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மீண்டும் உயிர் பெறுகிறது Kinetic Luna... ஆனா இந்த முறை வேற லெவலில் அறிமுகமாக போகுது! தெரிஞ்சா அசந்துருவீங்க!

1970 மற்றும் 1980ம் ஆண்டுகளில் பிறந்தவர்களில் Kinetic Luna பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம். அந்தளவிற்கு மிகவும் புகழ்பெற்ற மொபட் ரக வாகனமாக இருந்ததே Luna. இந்த வாகனத்தை மீண்டும் Kinetic இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

மீண்டும் உயிர் பெறுகிறது Kinetic Luna... ஆனா இந்த முறை வேற லெவலில் அறிமுகமாக போகுது! தெரிஞ்சா அசந்துருவீங்க!

ஆனால், இம்முறை எலெக்ட்ரிக் வாகனமாக நிறுவனம் இந்தியாவில் கொண்டு வர இருப்பதாக கூறப்படுகின்றது. Kinetic Engineering, Luna மொபட்டை இந்தியாவில் 1972ம் ஆண்டே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவின் நடுத்தர குடும்பதாரர்களைக் கவரும் நோக்கில் இவ்வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.

மீண்டும் உயிர் பெறுகிறது Kinetic Luna... ஆனா இந்த முறை வேற லெவலில் அறிமுகமாக போகுது! தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்த வாகனத்திற்கு மின்சார வாகனமாக மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சியில் Kinetic களமிறங்கியிருக்கின்றது. தற்போது மின்சார மூன்று சக்கர மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களை நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இத்துடன் சேர்த்து மிக விரைவில் Luna மொபட்டையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்க இருக்கிறது.

மீண்டும் உயிர் பெறுகிறது Kinetic Luna... ஆனா இந்த முறை வேற லெவலில் அறிமுகமாக போகுது! தெரிஞ்சா அசந்துருவீங்க!

இதன் வருகை இந்த வருடத்தின் இறுதிக்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில்கூட நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் Luna எலெக்ட்ரிக் வெர்ஷனின் உற்பத்தியை உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இன்னும் ஓரிரு மாதங்களில் இது அறிமுகமானாலும் சந்தேகத்திற்கு இடமில்லை.

மீண்டும் உயிர் பெறுகிறது Kinetic Luna... ஆனா இந்த முறை வேற லெவலில் அறிமுகமாக போகுது! தெரிஞ்சா அசந்துருவீங்க!

Luna எலெக்ட்ரிக் வாகனத்தில் 1kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. ஆகையால், லைசென்ஸ் மற்றும் பதிவு சான்று போன்ற எந்தவொரு ஆவணமும் இதற்கு தேவைப்படாது.

மீண்டும் உயிர் பெறுகிறது Kinetic Luna... ஆனா இந்த முறை வேற லெவலில் அறிமுகமாக போகுது! தெரிஞ்சா அசந்துருவீங்க!

அதேசமயம், இதில் இடம் பெற இருக்கும் லித்தியம் அயன் பேட்டரி ஒரு முழுமையான சார்ஜில் 70 கிமீ முதல் 80 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கும் என கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், யுஎஸ்பி சார்ஜர், இணைப்பு வசதி, எல்இடி மின் விளக்கு மற்றும் டிஆர்எல்கள் உள்ளிட்டவையும் kinetic luna எலெக்ட்ரிக் மொபட் வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

மீண்டும் உயிர் பெறுகிறது Kinetic Luna... ஆனா இந்த முறை வேற லெவலில் அறிமுகமாக போகுது! தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றன.

மீண்டும் உயிர் பெறுகிறது Kinetic Luna... ஆனா இந்த முறை வேற லெவலில் அறிமுகமாக போகுது! தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே kinetic நிறுவனம் luna எலெக்ட்ரிக் மொபட்டின் வருகை குறித்த தகவலை வெளியிட்டு இந்தியர்களைக் கிறங்கடிக்கச் செய்திருக்கின்றது. குறிப்பாக இதன் வருகை குறித்த தகவல் 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மீண்டும் உயிர் பெறுகிறது Kinetic Luna... ஆனா இந்த முறை வேற லெவலில் அறிமுகமாக போகுது! தெரிஞ்சா அசந்துருவீங்க!

luna 70ஸ் மற்றும் 80ஸ்-களில் மிக எடைக் குறைந்த மற்றும் 50 சிசி ரக வாகனமாக விற்பனைக்குக் கிடைத்தது. Piaggio Ciao மொபட்டின் நகல் செய்யப்பட்ட வாகனமே இந்த luna ஆகும். ஆம், இந்தியாவிற்காக பிரத்யேகமாக luna எனும் பெயரில் இந்த வாகனம் நம் நாட்டில் விற்பனைக்கு வந்தது.

Most Read Articles
English summary
Kinetic engineering planning to launch luna electric moped in this year
Story first published: Saturday, August 21, 2021, 18:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X