விரைவில் அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் மின்சார க்ரூஸர் பைக்... ரொம்ப கம்மியான விலையில் வர போகுதாம்!

மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான கோமகி, மிக விரைவில் இந்தியாவில் எலெக்ட்ரிக் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டின் முதல் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் வாகனமாக இதன் வருகை அமைய இருக்கின்றது. அறிமுகம் பற்றிய காலக்கெடுவையும் நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்து முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விரைவில் அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் மின்சார க்ரூஸர் பைக்... ரொம்ப கம்மியான விலையில் வர போகுதாம்! எப்போது அறிமுகம்?

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கோமகி, மிக விரைவில் ஓர் புதுமுக க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்கை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. க்ரூஸர் ஸ்டைலில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் மின்சார வாகனம் இதுவே ஆகும். ஆகையால், இதன் வருகை குறித்து வெளியாகியிருக்கும் தகவல் மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் மின்சார க்ரூஸர் பைக்... ரொம்ப கம்மியான விலையில் வர போகுதாம்! எப்போது அறிமுகம்?

வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் எலெக்ட்ரிக் க்ரூஸ்ர் பைக்கை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என கூறப்படுகின்றது. இப்பைக்கை மிக குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், நல்ல திறன் கொண்ட பேட்டரி பேக்கில் இந்த எலெக்ட்ரிக் வரும் என்பதையும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் மின்சார க்ரூஸர் பைக்... ரொம்ப கம்மியான விலையில் வர போகுதாம்! எப்போது அறிமுகம்?

அதேநேரத்தில், எலெக்ட்ரிக் வாகனத்தின் முக்கிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலை தென்படுகின்றது. மக்களின் ஆர்வத்தை எகிர செய்யும் வகையில் நிறுவனம் விரைவில் க்ரூஸர் ரக மின்சார பைக் பற்றிய முக்கிய தகவல்களை மிக விரைவில் வெளியிட இருக்கின்றது. கோமகி நிறுவனம் தற்போது பன்முக தேர்வுகளில் மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

விரைவில் அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் மின்சார க்ரூஸர் பைக்... ரொம்ப கம்மியான விலையில் வர போகுதாம்! எப்போது அறிமுகம்?

அனைத்துமே வழக்கமான தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் மட்டுமே ஆகும். இந்த நிலையிலேயே புதிய தேர்வாக தனது முதல் க்ரூஸர் ஸ்டைலிலான எலெக்ட்ரிக் பைக்கை நிறுவனம் விரைவில் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. மேலும், தற்போது நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வரும் மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் இது மிகப் பெரிய மற்றும் சிறந்த தயாரிப்பாகவும் இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இது நிறுவனத்தின் ஐந்தாவது மிக முக்கியமான தயாரிப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விரைவில் அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் மின்சார க்ரூஸர் பைக்... ரொம்ப கம்மியான விலையில் வர போகுதாம்! எப்போது அறிமுகம்?

அதேவேலையில், நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக் மட்டுமின்றி இன்னும் பல மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. நிறுவனத்தின் தற்போதைய முக்கிய தயாரிப்பாக எக்ஸ்ஜிடி-எக்ஸ்1 உள்ளது. இது ஓர் மிகக் குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஆகும்.

விரைவில் அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் மின்சார க்ரூஸர் பைக்... ரொம்ப கம்மியான விலையில் வர போகுதாம்! எப்போது அறிமுகம்?

ஜெல் மற்றும் லித்தியம் அயன் எனும் இரு விதமான பேட்டரி தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், ஜெல் பேட்டரி பொருத்தப்பட்ட மாடலுக்கு ரூ. 45 ஆயிரமும், லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்ட மாடலுக்கு ரூ. 60 ஆயிரமும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் மின்சார க்ரூஸர் பைக்... ரொம்ப கம்மியான விலையில் வர போகுதாம்! எப்போது அறிமுகம்?

கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு முழுமையான சார்ஜில் 120 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கும். இதுவே எலெக்ட்ரிக் வாகனத்தின் உச்சபட்ச ரேஞ்ச் திறன் ஆகும். ஈகோ மோடில் வைத்து பயணிக்கும் போதே இந்த உச்சபட்ச ரேஞ்ஜ் திறனை பெற முடியும். விலை, ஸ்டைல் மற்றும் செயல்திறன் என அனைத்திலும் சிறந்த தயாரிப்பாக இது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

விரைவில் அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் மின்சார க்ரூஸர் பைக்... ரொம்ப கம்மியான விலையில் வர போகுதாம்! எப்போது அறிமுகம்?

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு, முன்பை காட்டிலும் அதிகளவில் சாலையில் தென்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் தரிசனமே சான்று. அதேநேரத்தில், எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

விரைவில் அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் மின்சார க்ரூஸர் பைக்... ரொம்ப கம்மியான விலையில் வர போகுதாம்! எப்போது அறிமுகம்?

ஆனால், மின்சார வெர்ஷனில் இவற்றின் தேர்வு மிகவும் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையிலேயே மிக விரைவில் தங்கள் நிறுவனத்தின் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்கை அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக கோமகி அறிவித்துள்ளது.

குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Komaki planning to launch country s first cruiser type electric bike
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X