கேடிஎம் 250 அட்வென்ச்சர் vs புதிய பெனெல்லி டிஆர்கே251 - எந்த அட்வென்ச்சர் பைக்கை தேர்வு செய்யலாம்?

பெனெல்லி நிறுவனம் சமீபத்தில் அதன் ஆரம்ப நிலை அட்வென்ச்சர் பைக்காக டிஆர்கே251 மோட்டார்சைக்கிளை இந்த 2021 டிசம்பர் மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. ஐந்தாவது பெனெல்லி பைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஆர்கே251-இன் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.51 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் vs புதிய பெனெல்லி டிஆர்கே251 - எந்த அட்வென்ச்சர் பைக்கை தேர்வு செய்யலாம்?

விற்பனையில் இந்த பெனெல்லி அட்வென்ச்சர் பைக்கிற்கு கேடிஎம் 250 அட்வென்ச்சர் நேரடி போட்டி மாடலாக விளங்குகிறது. இந்த இரு அட்வென்ச்சர் பைக்குகளுக்கு இடையேயான ஒற்றுமை மற்று வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் பார்க்கலாம் வாங்க.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் vs புதிய பெனெல்லி டிஆர்கே251 - எந்த அட்வென்ச்சர் பைக்கை தேர்வு செய்யலாம்?

கிட்டத்தட்ட ஒரே அளவிலான விலைகளை கொண்ட இவை சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளிலும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால் பரிமாண அளவுகளில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் சிறப்பானதாகவும், காம்பெக்ட் அளவுகளினால் பெனெல்லி டிஆர்கே251 சிறந்த ஹேண்ட்லிங்கை வழங்கக்கூடியதாகவும் விளங்குகிறது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் vs புதிய பெனெல்லி டிஆர்கே251 - எந்த அட்வென்ச்சர் பைக்கை தேர்வு செய்யலாம்?

டிஆர்கே251 உயரத்தில் சிறியதாக உள்ளது. அதேபோல் இந்த பைக்கின் எடையும் குறைவானதாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் எளிமையான பயணத்தை கொடுக்கக்கூடியதாக இந்த பெனெல்லி பைக் உள்ளது. இதற்கு மற்றொரு உதாரணமாக இவ்விரு பைக்குகளில் ஓட்டுனர் இருக்கை அமைப்பை கூறலாம்.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் vs புதிய பெனெல்லி டிஆர்கே251 - எந்த அட்வென்ச்சர் பைக்கை தேர்வு செய்யலாம்?

ஏனெனில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் ஓட்டுனர் இருக்கை தரையில் இருந்து 855மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதுவே, பெனெல்லியின் அட்வென்ச்சர் பைக்கில் 800மிமீ-இல் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப 250 அட்வென்ச்சர் பைக்கில் 200மிமீ-இல் உயரமான வீல்பேஸ் வழங்கப்படுகிறது. அதுவே பெனெல்லியின் அட்வென்ச்சர் பைக்கில் 170மிமீ அளவிலேயே க்ரவுண்ட் க்ளியரென்ஸ் கொடுக்கப்படுகிறது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் vs புதிய பெனெல்லி டிஆர்கே251 - எந்த அட்வென்ச்சர் பைக்கை தேர்வு செய்யலாம்?

தொழிற்நுட்ப வசதிகளை பொறுத்தவரையில், இவை இரண்டும் டிஜிட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், இரட்டை-சேனல் ஏபிஎஸ் மற்றும் எல்இடி டிஆர்எல்களை பெறுகின்றன. ஆனால் கேடிஎம் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்படுவதில்லை. ஆனால் பெனெல்லி டிஆர்கே251 பைக்கில் தானியங்கி ஹெட்லேம்ப் செயல்பாடு கொடுக்கப்படுகிறது. அதேபோல் இந்த பெனெல்லி பைக்கில் யுஎஸ்பி சார்ஜரும் நிலையான தேர்வாக வழங்கப்படுகிறது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் vs புதிய பெனெல்லி டிஆர்கே251 - எந்த அட்வென்ச்சர் பைக்கை தேர்வு செய்யலாம்?

ஆனால் மெக்கானிக்கல் பாகங்களில் கேடிஎம் 250 அட்வென்ச்சரின் கை ஓங்கியுள்ளது. ஏனெனில் பெனெல்லி டிஆர்கே251 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு எளிமையான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், டெலெஸ்கோபிக் ஆயில் டேம்ப்டு பின்பக்கத்திலும் வழங்கப்படுகின்றன. மறுப்பக்கம், ஆஸ்திரியன் அட்வென்ச்சர் பைக்கில் தலைக்கீழான WP அபெக்ஸ் ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், மோனோ-ஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் கொடுக்கப்படுகின்றன.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் vs புதிய பெனெல்லி டிஆர்கே251 - எந்த அட்வென்ச்சர் பைக்கை தேர்வு செய்யலாம்?

இவற்றுடன் பிரேக்கிங் அமைப்பையும் வலிமையானதாக கேடிஎம் 250 அட்வென்ச்சர் கொண்டுள்ளது. இந்த கேடிஎம் அட்வென்ச்சர் பைக்கில் முன்பக்கத்தில் பெரிய அளவில் 320மிமீ-இல் டிஸ்க்கும், பின்பக்கத்தில் 280மிமீ-இல் டிஸ்க்கும் பொருத்தப்படுகின்றன. பெனெல்லி மாடலிலும் பின்பக்கத்தில் 240மிமீ-இல் நன்கு பெரிய டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்படுகின்றன.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் vs புதிய பெனெல்லி டிஆர்கே251 - எந்த அட்வென்ச்சர் பைக்கை தேர்வு செய்யலாம்?

பெனெல்லி டிஆர்கே251 பைக்கில் இரு பக்கங்களிலும் 17-இன்ச்சில் அலாய் சக்கரங்களும், கேடிஎம் 250 அட்வென்ச்சரில் முன்பக்கத்தில் மட்டுமே 19-இன்ச்சில் சற்று பெரிய சக்கரமும் பொருத்தப்படுகின்றன. இந்த மாற்றத்தினால் இந்த இரு அட்வென்ச்சர் பைக்குகளிலும் வேறுப்பட்ட பயண சூழல் கிடைக்கிறது. ஆனால், இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இவை இரண்டிலும் ஒரே மாதிரியான 249சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வு, லிக்யுடு-கூல்டு என்ஜினே பொருத்தப்படுகிறது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் vs புதிய பெனெல்லி டிஆர்கே251 - எந்த அட்வென்ச்சர் பைக்கை தேர்வு செய்யலாம்?

ஆனால் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் இரண்டிலும் வித்தியாசப்படுகின்றன. கேடிஎம் 250 அட்வென்ச்சரின் 249சிசி என்ஜினானது அதிகப்பட்சமாக 29.5 பிஎச்பி மற்றும் 24 என்எம் டார்க் திறனையும், பெனெல்லி டிஆர்கே251 அட்வென்ச்சரின் என்ஜின் சற்று குறைவாக 25.47 பிஎச்பி மற்றும் 21.2 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியவைகளாக உள்ளன.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் vs புதிய பெனெல்லி டிஆர்கே251 - எந்த அட்வென்ச்சர் பைக்கை தேர்வு செய்யலாம்?

ஆனால் இவை இரண்டிலும் ஒரே மாதிரியாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் அமைப்பே இணைக்கப்படுகிறது. இருப்பினும் டிஆர்கே251 பைக்கில் ஈரமான பல-தட்டு க்ளட்ச் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் கேடிஎம் பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த இரு அட்வென்ச்சர் பைக்குகளின் விலைகள் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே உள்ளன.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் vs புதிய பெனெல்லி டிஆர்கே251 - எந்த அட்வென்ச்சர் பைக்கை தேர்வு செய்யலாம்?

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெனெல்லி டிஆர்கே251 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.51 லட்சமாக இருக்க, கேடிஎம் 250 அட்வென்ச்சரின் விலை ரூ.2.35 லட்சமாக உள்ளது. என்ஜின் மூலம் கிடைக்கக்கூடிய ஆற்றல் அளவுகளை பொறுத்தவரையில், கேடிஎம் 250 அட்வென்ச்சர் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மாடலாக விளங்குவதை கூறியே ஆக வேண்டும்.

Most Read Articles

English summary
Ktm 250 adventure vs benelli trk251 250cc adv bikes comparison
Story first published: Sunday, December 19, 2021, 22:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X