கேடிஎம் பைக்குகளின் விலைகள் 2021ல் 3வது முறையாக அதிகரிப்பு!! ஒருபக்கம் பெட்ரோல் விலை உயருது, மறுபக்கம் இதுவா!

கேடிஎம் & ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் பைக்குகளின் விலைகள் 2021ல் 3வது முறையாக அதிகரிப்பு!! ஒருபக்கம் பெட்ரோல் விலை உயருது, மறுபக்கம் இதுவா!

இந்த 2021 ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை அதிகரிப்பு கேடிஎம் நிறுவனம் நடப்பாண்டில் கொண்டுவரும் மூன்றாவது விலை அதிகரிப்பாகும்.

Model New Price Old Price Difference
Duke 125 ₹1,70,515 ₹1,60,575 ₹9,940
Duke 200 ₹1,85,606 ₹1,83,584 ₹2,022
Duke 250 ₹2,28,736 ₹2,21,888 ₹6,848
Duke 390 ₹2,87,545 ₹2,76,187 ₹11,358
RC 125 ₹1,80,538 ₹1,70,470 ₹10,068
RC 200 ₹2,08,602 ₹2,06,349 ₹2,253
RC 390 ₹2,77,517 ₹2,66,159 ₹11,358
250 Adventure ₹2,54,995 ₹2,54,739 ₹256*
390 Adventure ₹3,28,286 ₹3,16,863 ₹11,423
Svartpilen 250 ₹2,10,650 ₹1,99,552 ₹11,098
Vitpilen 250 ₹2,10,022 ₹1,98,925 ₹11,097
கேடிஎம் பைக்குகளின் விலைகள் 2021ல் 3வது முறையாக அதிகரிப்பு!! ஒருபக்கம் பெட்ரோல் விலை உயருது, மறுபக்கம் இதுவா!

இந்த விலை அதிகரிப்புகள் குறைந்தப்பட்சமாக ரூ.256ல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.11,423 வரையில் உள்ளன. இந்தியாவின் இரண்டாவது விலைமிக்க 125சிசி மோட்டார்சைக்கிளாக விளங்கும் கேடிஎம் ட்யூக் 125-இன் புதிய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் பைக்குகளின் விலைகள் 2021ல் 3வது முறையாக அதிகரிப்பு!! ஒருபக்கம் பெட்ரோல் விலை உயருது, மறுபக்கம் இதுவா!

முன்பு ரூ.1,60,575 ஆக இருந்த இதன் எக்ஸ்ஷோரூம் விலை தற்போது ரூ.9,940 அதிகரிக்கப்பட்டு ரூ.1,70,515 ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. கேடிஎம் பிராண்டின் பிரதான இந்திய மாடலாக விளங்கும் ட்யூக் 390-இன் விலை ரூ.11,358 உயர்த்தப்பட்டுள்ளது.

கேடிஎம் பைக்குகளின் விலைகள் 2021ல் 3வது முறையாக அதிகரிப்பு!! ஒருபக்கம் பெட்ரோல் விலை உயருது, மறுபக்கம் இதுவா!

இதன் விளைவாக இந்த 390சிசி நாக்டு மோட்டார்சைக்கிளின் விலை ரூ.2.87 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் பிரதான தேர்வுகளாக விளங்கும் கேடிஎம் ட்யூக் 200 மற்றும் ட்யூக் 250 பைக்குகள் முறையே ரூ.2,022 மற்றும் ரூ.6,848 விலை உயர்வை சந்தித்துள்ளன.

கேடிஎம் பைக்குகளின் விலைகள் 2021ல் 3வது முறையாக அதிகரிப்பு!! ஒருபக்கம் பெட்ரோல் விலை உயருது, மறுபக்கம் இதுவா!

கேடிஎம் ஆர்சி பைக்குகளை பொருத்தவரையில், ஆர்சி 125 பைக்கின் புதிய விலை ட்யூக் 125-ஐ காட்டிலும் ரூ.10,000 அதிகமாக ரூ.1.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பந்தய களத்திற்கு ஏற்ற பைக்காக பார்க்கப்படுகின்ற ஆர்சி390 ரூ.11,358-ஐ விலை உயர்வாக பெற்றுள்ளது.

கேடிஎம் பைக்குகளின் விலைகள் 2021ல் 3வது முறையாக அதிகரிப்பு!! ஒருபக்கம் பெட்ரோல் விலை உயருது, மறுபக்கம் இதுவா!

இதன் புதிய விலை ரூ.2.77 லட்சமாகும். ஆனால் இது ட்யூக்390-ஐ காட்டிலும் ரூ.10,000 குறைவாகும். ஆர்சி200-இன் விலை அதிகரிப்பு பெரிய அளவில் இல்லை, ரூ.2,253 மட்டுமே. இருப்பதிலேயே மிகவும் குறைந்தப்பட்சமாக 250 அட்வென்ச்சர் பைக்கின் விலை வெறும் ரூ.258 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

கேடிஎம் பைக்குகளின் விலைகள் 2021ல் 3வது முறையாக அதிகரிப்பு!! ஒருபக்கம் பெட்ரோல் விலை உயருது, மறுபக்கம் இதுவா!

ஆனால் 390 அட்வென்ச்சரின் விலை ரூ.11,423 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 390 அட்வென்ச்சரின் எக்ஸ்ஷோரூம் விலை இனி ரூ.3.28 லட்சம் ஆகும். கேடிஎம் பைக்குகளை போன்று ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

கேடிஎம் பைக்குகளின் விலைகள் 2021ல் 3வது முறையாக அதிகரிப்பு!! ஒருபக்கம் பெட்ரோல் விலை உயருது, மறுபக்கம் இதுவா!

இந்தியாவில் ஹஸ்க்வர்னா பிராண்டில் இருந்து ஸ்வார்ட்பிளேன் 250, விட்பிளேன் 250 என்ற இரு 250சிசி மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலைகள் முறையே ரூ.11,098 மற்றும் ரூ.11,097 உயர்த்தப்பட்டுள்ளன.

கேடிஎம் பைக்குகளின் விலைகள் 2021ல் 3வது முறையாக அதிகரிப்பு!! ஒருபக்கம் பெட்ரோல் விலை உயருது, மறுபக்கம் இதுவா!

இந்த புதிய விலை அதிகரிப்பினால் இந்த ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலைகள் இந்தியாவில் ரூ.2 லட்சத்தை கடந்துள்ளன. இருப்பினும் இவை இரண்டும் இன்னமும் கேடிஎம் ட்யூக்250 பைக்கை காட்டிலும் ரூ.18,000 விலை குறைவானவைகளாகவே உள்ளன.

Most Read Articles
English summary
KTM, Husqvarna prices hiked; 125 Duke now costs Rs 1.7 lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X