கடந்த பிப்ரவரியில் மொத்தம் எத்தனை கேடிஎம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன? முழு விபரம் இதோ!!

கடந்த பிப்ரவரி மாதத்தில் கேடிஎம் நிறுவனம் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்த மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த பிப்ரவரியில் மொத்தம் எத்தனை கேடிஎம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன? முழு விபரம் இதோ!!

கேடிஎம் பைக்குகளின் விற்பனை கடந்த சில மாதங்களை காட்டிலும் கணிசமாக கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக, பைக்குகளின் தயாரிப்பிற்கு தடையாக அமைந்த பாகங்களின் தட்டுப்பாட்டை கூறலாம்.

கடந்த பிப்ரவரியில் மொத்தம் எத்தனை கேடிஎம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன? முழு விபரம் இதோ!!

இதன் காரணமாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் கேடிஎம் நிறுவனத்தால் டெலிவிரி செய்ய முடியாமல் போயிருக்கலாம். கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 5,394 பைக்குகளை கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் மொத்தம் எத்தனை கேடிஎம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன? முழு விபரம் இதோ!!

ஆனால் 2020 பிப்ரவரியில் 6,470 பைக்குகளையும் (16.63% குறைவு), 2021 ஜனவரி மாதத்தில் 6,777 பைக்குகளையும் (20.41% குறைவு) இந்த ஆஸ்திரியன் மோட்டார்சைக்கிள் பிராண்ட் விற்பனை செய்திருந்தது.

Rank KTM Domestic Feb-21 Feb-20 Growth (%)
1 200 2,431 2,900 -16.17
2 125 2,200 1,476 49.05
3 390 451 1,505 -70.03
4 250 312 589 -47.03
Rank KTM Domestic Feb-21 Jan-21 Growth (%)
1 200 2,431 2,979 -18.40
2 125 2,200 2,516 -12.56
3 390 451 722 -37.53
4 250 312 560 -44.29
கடந்த பிப்ரவரியில் மொத்தம் எத்தனை கேடிஎம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன? முழு விபரம் இதோ!!

இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் பிரதான விற்பனை மாடல்களாக 200சிசி பைக்குகள் விளங்குகின்றன. 200சிசி-யில் கேடிஎம் பிராண்டில் இருந்து ட்யூக் 200 மற்றும் ஆர்சி200 பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த பிப்ரவரியில் மொத்தம் எத்தனை கேடிஎம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன? முழு விபரம் இதோ!!

இவை இரண்டும் சேர்த்து கடந்த மாதத்தில் 2,431 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலும் ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தப்பட்சம் 2,700 கேடிஎம் 200சிசி பைக்குகளாவது நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுவிடும். ஆனால் கடந்த மாதத்தில் சில நூறுகள் குறைந்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் மொத்தம் எத்தனை கேடிஎம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன? முழு விபரம் இதோ!!

200சிசி-க்கும் குறைவான 125சிசி-யிலும் கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்படுவது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால் இந்தியர்கள் 125சிசி-ஐ காட்டிலும் 200சிசி-யில் கேடிஎம் பைக்கை வாங்கவே விரும்புகின்றனர்.

கடந்த பிப்ரவரியில் மொத்தம் எத்தனை கேடிஎம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன? முழு விபரம் இதோ!!

இருப்பினும் கடந்த சில மாதங்களாக 125சிசி கேடிஎம் பைக்குகளும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 2020 பிப்ரவரியில் வெறும் 1,476 கேடிஎம் 125சிசி பைக்குகள் மட்டுமே விற்பனை செய்ய்ப்பட்ட நிலையில் கடந்த மாதத்தில் 2,200 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரியில் மொத்தம் எத்தனை கேடிஎம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன? முழு விபரம் இதோ!!

இந்த வகையில் கேடிஎம் 125சிசி பைக்குகளின் விற்பனை சுமார் 49.05 சதவீதம் உயர்ந்துள்ளது. இவற்றை காட்டிலும் பெரிய என்ஜினை கொண்ட கேடிஎம் பைக்குகளின் விற்பனை இந்தியாவில் பெரிய அளவில் வீழ்ச்சியை கடந்த மாதத்தில் சந்தித்திருப்பது அட்டவணையை பார்க்கும்போதே தெரிய வருகிறது.

கடந்த பிப்ரவரியில் மொத்தம் எத்தனை கேடிஎம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன? முழு விபரம் இதோ!!

இந்திய விற்பனை மட்டுமில்லாமல் புனேவில் பஜாஜ் சாகான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கேடிஎம் பைக்குகள் வெளிநாட்டு சந்தைகளுக்கும் நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் எப்போதுமே 390சிசி கேடிஎம் பைக்குகளின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பது வழக்கம்.

Rank KTM Exports Feb-21 Feb-20 Growth (%)
1 200 3,034 3,536 -14.20
2 125 2,982 738 304.07
3 390 1,177 840 40.12
4 250 960 273 251.65
Rank KTM Exports Feb-21 Jan-21 Growth (%)
1 200 3,034 3,354 -9.54
2 125 2,982 1,234 141.65
3 390 1,177 850 38.47
4 250 960 1,376 -32.23
கடந்த பிப்ரவரியில் மொத்தம் எத்தனை கேடிஎம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன? முழு விபரம் இதோ!!

ஆனால் அவற்றின் ஏற்றுமதியும் தயாரிப்பு பணிகளில் உருவாகியுள்ள தடைகளால் 2020 பிப்ரவரி மற்றும் 2021 ஜனவரி மாதங்களுடன் ஒப்பிடும்போது சிறிதளவு குறைந்துள்ளது. ஆனால் மற்ற பைக்குகளை வழக்கத்தை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கேடிஎம் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது இது தொடர்பான அட்டவணையை பார்க்கும்போது தெரிய வருகிறது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM India Sales Decline, Exports Grow In Feb 2021. Read In Tamil.
Story first published: Monday, March 22, 2021, 22:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X