கேடிஎம் 200சிசி பைக்குகளுக்கு திடீரென அதிகரித்த மார்க்கெட்!! மாத விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது!

எத்தனையோ மோட்டார்சைக்கிள்கள் இருந்தாலும் கேடிஎம் பைக்குகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருப்பது என்னமோ உண்மை தான். ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் பிராண்டான கேடிஎம்-இல் இருந்து இந்தியாவில் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஆர்சி125 மற்றும் ஆர்சி200 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தன.

கேடிஎம் 200சிசி பைக்குகளுக்கு திடீரென அதிகரித்த மார்க்கெட்!! மாத விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது!

இவற்றை தொடர்ந்து புதிய தலைமுறை ஆர்சி390 பைக்கை அறிமுகம் செய்ய கேடிஎம் தயாராகி வருகிறது. இதற்கடுத்து புதிய தலைமுறை ட்யூக் ரேஞ்ச் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவை கடந்து இந்தியாவிலும் மெல்ல மெல்ல கேடிஎம் பைக்குகள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தான் தற்போது வெளியாகியுள்ள கேடிஎம் நிறுவனத்தின் கடந்த 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரமும் உறுதிப்படுத்துகிறது.

கேடிஎம் 200சிசி பைக்குகளுக்கு திடீரென அதிகரித்த மார்க்கெட்!! மாத விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது!

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 7,126 கேடிஎம் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2020 அக்டோபர் மாதத்தை காட்டிலும் 5.46 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 6,757 கேடிஎம் மோட்டார்சைக்கிள்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதுவே கடந்த மாத விற்பனை எண்ணிக்கை, அதற்கு முந்தைய மாதத்தை காட்டிலும் சுமார் 60% அதிகமாகும்.

கேடிஎம் 200சிசி பைக்குகளுக்கு திடீரென அதிகரித்த மார்க்கெட்!! மாத விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது!

ஏனென்றால் கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் வெறும் 4,454 கேடிஎம் பைக்குகளே விற்கப்பட்டு இருந்தன. இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட கேடிஎம் மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை ஆகும். கடந்த ஆண்டு அக்டோபரிலும், கடந்த செப்டம்பர் மாதத்திலும் முறையே 2,695 மற்றும் 2,326 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த கேடிஎம் 200சிசி பைக்குகளின் விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் கவனிக்கத்தக்க அளவில் உயர்ந்து முதலிடத்தை வழக்கம்போல் தொடர்ந்துள்ளது.

கேடிஎம் 200சிசி பைக்குகளுக்கு திடீரென அதிகரித்த மார்க்கெட்!! மாத விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது!

அந்த இரு மாதங்களை காட்டிலும் இரண்டு மடங்காக கடந்த அக்டோபரில் 4,696 கேடிஎம் 200சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 200சிசி-யில் ட்யூக் 200 மற்றும் ஆர்சி200 பைக்குகளை கேடிஎம் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில் ஆர்சி200 மாடலின் புதிய தலைமுறை சமீபத்தில் தான் ரூ.2.09 லட்சம் என்கிற அறிமுக விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இதே விலையில் தான் இதன் முந்தைய வெர்சனும் விற்பனை செய்யப்பட்டது.

கேடிஎம் 200சிசி பைக்குகளுக்கு திடீரென அதிகரித்த மார்க்கெட்!! மாத விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது!

200சிசி-க்கு அடுத்து 390சிசி மற்றும் 250சிசி-இல் அதிக எண்ணிக்கையில் கேடிஎம் பைக்குகள் இந்தியாவில் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏறக்குறைய ஒரே மாதிரியாக கடந்த அக்டோபர் மாதத்தில் 1,171 390சிசி பைக்குகளும், 1,162 250சிசி கேடிஎம் பைக்குகளும் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரிலும் 390சிசி கேடிஎம் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருந்தது.

கேடிஎம் 200சிசி பைக்குகளுக்கு திடீரென அதிகரித்த மார்க்கெட்!! மாத விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது!

ஆனால் தற்போதைய விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 63.29% குறைவாக 712 250சிசி கேடிஎம் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் 2021 செப்டம்பரில் 250சிசி கேடிஎம் மோட்டார்சைக்கிள்களையே அதிக எண்ணிக்கையில் (1,173 யூனிட்கள்) கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2021 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11% அதிகம்.

கேடிஎம் 200சிசி பைக்குகளுக்கு திடீரென அதிகரித்த மார்க்கெட்!! மாத விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது!

ஆனால் மறுப்பக்கம் வெறும் 373 யூனிட் 390சிசி பைக்குகளே கடந்த செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தோமேயானால், 390சிசி கேடிஎம் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் சுமார் 213.94 உயர்ந்துள்ளது. விலை குறைவான கேடிஎம் 125சிசி பைக்குகளின் விற்பனை தான் மிக பெரிய அளவில் அடி வாங்கியுள்ளது.

கேடிஎம் 200சிசி பைக்குகளுக்கு திடீரென அதிகரித்த மார்க்கெட்!! மாத விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது!

கடந்த மாதத்தில் வெறும் 97 கேடிஎம் 125 பைக்குகளே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 அக்டோபரில் சுமார் 2,312 கேடிஎம் 125சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த செப்டம்பரில் மாதத்திலும், 582 125சிசி கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு ஓரளவிற்கு பரவாயில்லை என்பது போல் இருந்தன. இந்தியாவில் பஜாஜ் ஆட்டோவின் சாகான் தொழிற்சாலையை தான் தயாரிப்பு பணிகளுக்கு கேடிஎம் நிறுவனம் பயன்படுத்துகிறது என்பது ஊரறிந்த விஷயம்.

கேடிஎம் 200சிசி பைக்குகளுக்கு திடீரென அதிகரித்த மார்க்கெட்!! மாத விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது!

இங்கிருந்து கேடிஎம் மோட்டார்சைக்கிள்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதற்கு மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் அதிகப்பட்சமாக 1,154 390சிசி கேடிஎம் பைக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்த நிலையில் தான் 200சிசி பைக்குகள் உள்ளன.

கேடிஎம் 200சிசி பைக்குகளுக்கு திடீரென அதிகரித்த மார்க்கெட்!! மாத விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது!

2020 அக்டோபரிலும் இவ்வாறு 200சிசி பைக்குகளை காட்டிலும் 390சிசி மோட்டார்சைக்கிள்களையே கேடிஎம் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் 2021 செப்டம்பரில் 200சிசி பைக்குகளே அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. 250சிசி கேடிஎம் பைக்குகள் வழக்கமான எண்ணிக்கையில் கடந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க, 125சிசி கேடிஎம் பைக்குகளின் ஏற்றுமதி எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்கு அருகிலேயே உள்ளது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM registered total volume of 60% MoM growth in the domestic market.
Story first published: Sunday, November 21, 2021, 5:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X