2021 மாடல் 890 ட்யூக் பைக்கை வெளியீடு செய்தது கேடிஎம்... இந்திய இளைஞர்களால் இதை கையில் பெற முடியுமா?

கேடிஎம் நிறுவனம் 2021 890 ட்யூக் பைக்கை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. இப்பைக் பற்றிய சிறப்பு தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

2021 மாடல் 890 ட்யூக் பைக்கை வெளியீடு செய்தது கேடிஎம்... இந்திய இளைஞர்களால் இதை கையில் பெற முடியுமா?

கேடிஎம் நிறுவனம் 890 ட்யூக் பைக்கை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த பைக்கையே விரைவில் இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பைக்கை யூரோ 5 மாசு உமிழ்வு தரத்திற்கு ஏற்ப கேடிஎம் உருவாக்கியிருக்கின்றது. இது பிஎஸ்-6 தரத்திற்கு இணையானதாகும்.

2021 மாடல் 890 ட்யூக் பைக்கை வெளியீடு செய்தது கேடிஎம்... இந்திய இளைஞர்களால் இதை கையில் பெற முடியுமா?

890 சிசி திறனில் பல்வேறு மாடல் இருசக்கர வாகனங்களை கேடிஎம் விற்பனைச் செய்து வருகின்றது. ஆனால், அவற்றைக் காட்டிலும் சற்று திறன் குறைந்த மாடலாக புதுமுக 890 ட்யூக் பைக் இருக்கின்றது. இது ஓர் நேக்கட் ரக தயாரிப்பாகும். குறைந்த விலையை உறுதி செய்வதற்காகவே இப்படியான ரகத்தில் இப்பைக்கை கேடிஎம் உருவாக்கியிருக்கின்றது.

2021 மாடல் 890 ட்யூக் பைக்கை வெளியீடு செய்தது கேடிஎம்... இந்திய இளைஞர்களால் இதை கையில் பெற முடியுமா?

இதில் இடம்பெற்றிருக்கும் எஞ்ஜின் 889சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய பாரல்லல்-ட்வின், லிக்யூடு கூல்கு எல்சி8சி மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாக 115 பிஎச்பி-யையும், 92 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியது. தொடர்ந்து, ஒன்பது லெவலில்கள் கொண்ட டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் என பல்வேறு சிறப்பு வசதிகளும் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

2021 மாடல் 890 ட்யூக் பைக்கை வெளியீடு செய்தது கேடிஎம்... இந்திய இளைஞர்களால் இதை கையில் பெற முடியுமா?

890 ட்யூக் பைக்கின் உறுதி தன்மைக்காக ஸ்டீல் ஃபிரேம் மற்றும் அலுமினியம் சப் ஃபிரேம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக பைக்கின் முன் பக்கத்தில் 43மிமீ அளவுள்ள டபிள்யூபி அபெக்ஸ் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக் ப்ரீலோட் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

2021 மாடல் 890 ட்யூக் பைக்கை வெளியீடு செய்தது கேடிஎம்... இந்திய இளைஞர்களால் இதை கையில் பெற முடியுமா?

கேடிஎம் 890 ட்யூக் பைக் இரு விதமான நிற தேர்விலேயே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்திலேயே அது கிடைக்க இருக்கின்றது. தற்போதைய வெளியீட்டைத் தொடர்ந்து விரைவில் விற்பனைக்கான அறிமுகத்தையும் இப்பைக் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2021 மாடல் 890 ட்யூக் பைக்கை வெளியீடு செய்தது கேடிஎம்... இந்திய இளைஞர்களால் இதை கையில் பெற முடியுமா?

ஆகையால், சர்வதேச சந்தையில் இன்னும் ஒரு சில வாரங்களில் கேடிஎம் 890 ட்யூக் பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடப்பாண்டின் இறுதிக்குள் வரும் என கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021 மாடல் 890 ட்யூக் பைக்கை வெளியீடு செய்தது கேடிஎம்... இந்திய இளைஞர்களால் இதை கையில் பெற முடியுமா?

இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் 8.5 லட்ச ரூபாய் அல்லது 9.5 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே வரும் என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேடிஎம் 890 ட்யூக் ஓர் பிரீமியம் ரக பைக் என்பதனாலேயே இந்த அதிகபட்ச விலையை நிறுவனம் நிர்ணயிக்க இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Revealed 2021 890 Duke Bike. Here Is Full Details. Read In Tamil.
Story first published: Friday, January 22, 2021, 17:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X