ஜனவரி 26ல் வெளிவரும் புதிய கேடிஎம் பைக்!! அட்வென்ச்சரா? அல்லது ஆர்சி-யா?, விபரம் உள்ளே

ஜனவரி 26ஆம் தேதி புதிய மோட்டார்சைக்கிள் வெளிவரவுள்ளதை வெளிகாட்டும் புதிய டீசர் படத்தினை கேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜனவரி 26ல் வெளிவரும் புதிய கேடிஎம் பைக்!! அட்வென்ச்சரா? அல்லது ஆர்சி-யா?, விபரம் உள்ளே

வருகிற ஜனவரி 26ஆம் தேதி பல நிறுவனங்களது புதிய மோட்டார்சைக்கிள்கள் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. சமீபத்தில்கூட, ட்ரையம்ப் நிறுவனம் அதன் புத்தம் புதிய ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் மோட்டார்சைக்கிளை வரும் 26ல் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது.

ஜனவரி 26ல் வெளிவரும் புதிய கேடிஎம் பைக்!! அட்வென்ச்சரா? அல்லது ஆர்சி-யா?, விபரம் உள்ளே

இதன் தொடர்ச்சியாக தற்போது ட்ரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் பைக் அறிமுகமாகும் அதே தேதியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் தனது புதிய மோட்டார்சைக்கிளின் டீசர் படத்தை கேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 26ல் வெளிவரும் புதிய கேடிஎம் பைக்!! அட்வென்ச்சரா? அல்லது ஆர்சி-யா?, விபரம் உள்ளே

இந்த டீசர் படத்தில், "தி வோர்ல்டு கெட்ஸ் ஸ்மாலர்" என்ற வாக்கியம் கூறப்பட்டுள்ளது. இதன் தமிழ் அர்த்தம், உலகம் சிறியதாகிறது என்பதாகும். கேடிஎம்-இன் இந்த கருத்தின்படி பார்க்கும்போது வெளிவருவது அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக இருக்கலாம்.

ஜனவரி 26ல் வெளிவரும் புதிய கேடிஎம் பைக்!! அட்வென்ச்சரா? அல்லது ஆர்சி-யா?, விபரம் உள்ளே

அதேநேரம் வாக்கியங்களுக்கு பின்புறத்தில் ரேஸ் ட்ராக் உள்ளது. இதனால் ஸ்போர்டியான மோட்டார்சைக்கிளையும் எதிர்பார்க்கலாம். மற்றப்படி புதிய கேடிஎம் பைக்கை பற்றிய எந்த தகவலையும் இந்த டீசர் படம் வெளிக்காட்டவில்லை. அதற்கு நாம் 26ஆம் தேதி வரையில் காத்திருந்தாக வேண்டும்.

ஜனவரி 26ல் வெளிவரும் புதிய கேடிஎம் பைக்!! அட்வென்ச்சரா? அல்லது ஆர்சி-யா?, விபரம் உள்ளே

நமக்கு தெரிந்தவரையில் 1290 சூப்பர் அட்வென்ச்சர் வரிசையில் களமிறங்கும் புதிய கேடிஎம் மோட்டார்சைக்கிளாக இது இருக்கலாம். இந்த வரிசையில் மோட்டார்சைக்கிள்கள் ஆர் மற்றும் எஸ் என்ற இரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஜனவரி 26ல் வெளிவரும் புதிய கேடிஎம் பைக்!! அட்வென்ச்சரா? அல்லது ஆர்சி-யா?, விபரம் உள்ளே

சில நாட்களுக்கு முன்பு 2021 1290 சூப்பர் அட்வென்ச்சர் மாடல்களில் வழங்கப்படவுள்ள ரேடார் சார்ந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற தொழிற்நுட்ப வசதிகள் குறித்த விபரங்களை கேடிஎம் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

ஜனவரி 26ல் வெளிவரும் புதிய கேடிஎம் பைக்!! அட்வென்ச்சரா? அல்லது ஆர்சி-யா?, விபரம் உள்ளே

இதனால் வரும் 26ஆம் தேதியில் புதிய அட்வென்ச்சர் பைக் அறிமுகப்படுத்தப்படவே அதிக வாய்ப்புள்ளது. இந்த ரேடார் சென்சார் பாதுகாப்பு வசதிகள் ஏற்கனவே டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM teases new motorcycle ahead of January 26 unveil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X