அதற்குள் 10 வருடங்கள் முடிய போகுதா!! இந்தியாவில் KTM பிராண்டின் புதிய மைல்கல்!

KTM நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்து 10 வருடங்கள் பூர்த்தியாக உள்ளன. இதனை கொண்டாடும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை பற்றி இந்த செய்தியில் இனி விரிவாக பார்ப்போம்.

அதற்குள் 10 வருடங்கள் முடிய போகுதா!! இந்தியாவில் KTM பிராண்டின் புதிய மைல்கல்!

ஐரோப்பிய, ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த KTM நிறுவனம் இந்தியாவில் Duke 200 மோட்டார்சைக்கிளின் மூலம் நுழைந்தது. அதன்பின் இத்தனை வருடங்களில் நம் நாட்டில் KTM பிராண்ட் அடைந்திருக்கும் வளர்ச்சி மிக பெரியது. நகரங்களை தாண்டி கிராமப்புறங்களிலும் கூட KTM பைக்குகள் வாங்கப்படுவதை பார்க்க முடிகிறது.

அதற்குள் 10 வருடங்கள் முடிய போகுதா!! இந்தியாவில் KTM பிராண்டின் புதிய மைல்கல்!

KTM Duke 200 மோட்டார்சைக்கிள் முதன்முதலாக 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகையில் பார்த்தோமேயானால், அடுத்த 2022ஆம் வருடத்தோடு 10 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவில் வணிகத்தை துவங்கி வெற்றிக்கரமாக 10 வருடங்கள் நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக சில சலுகைகளை KTM நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

அதற்குள் 10 வருடங்கள் முடிய போகுதா!! இந்தியாவில் KTM பிராண்டின் புதிய மைல்கல்!

இந்தியாவில் Naked Streetfighter, Sports bikes மற்றும் அட்வென்ச்சர் என மொத்தம் 11 விதமான மோட்டார்சைக்கிள்களை KTM விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் இலவச 3 வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை KTM வழங்கியுள்ளது.

அதற்குள் 10 வருடங்கள் முடிய போகுதா!! இந்தியாவில் KTM பிராண்டின் புதிய மைல்கல்!

அதாவது, எந்தவொரு KTM பைக்கை புதியதாக வாங்கும் வாடிக்கையாளரும் 3-வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை இலவசமாக பெறலாம். KTM & Husqvarna பைக்குகள் அனைத்திற்கும் இந்தியாவில் 2 வருட உத்தரவாதம் நிலையாக வழங்கப்படுகின்றன. அதாவது இவற்றிற்கான தொகை பைக்கின் விலையுடனே சேர்க்கப்பட்டு இருக்கும்.

அதற்குள் 10 வருடங்கள் முடிய போகுதா!! இந்தியாவில் KTM பிராண்டின் புதிய மைல்கல்!

2 வருடம் போதாது என நினைப்போர்க்காக கூடுதல் 3-வருட தேர்வையும் தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது. இதன் மூலம் பைக்கின் உத்தரவாத காலம் 5 ஆண்டுகளாக உயரும். அதாவது 5 வருடங்களுக்கு சில பராமரிப்பு சேவைகள் இலவசமாக கிடைக்கலாம். ஆனால் கூடுதல் 3 வருட உத்தரவாத காலத்தை பெற வேண்டுமென்றால், கூடுதலாக பணம் செலுத்த வேண்டியதாக இருந்தது.

அதற்குள் 10 வருடங்கள் முடிய போகுதா!! இந்தியாவில் KTM பிராண்டின் புதிய மைல்கல்!

இதுதான் தற்போது, KTM பிராண்டின் 10 வருட இந்திய விற்பனை பயணத்தின் கொண்டாட்டமாக, இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு வருட சாலை-ஓர உதவிகளும் இலவசமாம். இதன்மூலம் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது பஞ்சர் போன்ற எதிர்பாராத உதவிகளை இலவசமாக ஒரு வருடத்திற்கு KTM சர்வீஸ் மையங்களிடம் இருந்து பெறலாம்.

அதற்குள் 10 வருடங்கள் முடிய போகுதா!! இந்தியாவில் KTM பிராண்டின் புதிய மைல்கல்!

இவற்றுடன் இந்த 10 வருட நிறைவு கொண்டாட்டத்தின் மற்றொரு பகுதியாக KTM Pro-Experience-ஐ 50% தள்ளுபடி உடன் பெறலாம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட KTM Pro-Experience-இன் மூலமாக மூன்று பிரிவுகளில், KTM வல்லுநர்கள் மூலமாக வழி நடத்தப்படும் டூர்-ஐ, கேட்கப்படும் கட்டணத்தை செலுத்தி பெறலாம்.

அதற்குள் 10 வருடங்கள் முடிய போகுதா!! இந்தியாவில் KTM பிராண்டின் புதிய மைல்கல்!

இந்த கட்டணம் தான் இனி KTM பைக்குகளை வாங்கவுள்ள வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி உடன் கிடைக்கவுள்ளது. இந்த சுற்றுலாகளில் KTM பைக் உரிமையாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களுடன் கலந்து கொள்ள வேண்டும். KTM Adventure, KTM Pro-Riders, KTM Track என பைக்கின் உடலமைப்பை பொறுத்து உள்ள இந்த 3 பிரிவுகளிலும் சுற்றலாக்கள் நாள் கணக்கில் மேற்கொள்ளப்படுகின்றன.

அதற்குள் 10 வருடங்கள் முடிய போகுதா!! இந்தியாவில் KTM பிராண்டின் புதிய மைல்கல்!

கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதியில் இருந்து, Husquarna பைக்குகள் உள்பட KTM பைக்குகள் அனைத்திற்கும் வழங்கப்பட்டு வரும் இந்த சலுகைகள் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே கிடைக்கவுள்ளன. ஆனால் எந்த நாள் வரையில் என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்த சலுகைகளுடன், பைக்கின் விலையில் 95% கடன் போன்ற கவர்ச்சிகரமான நிதி தேர்வுகளையும் வாடிக்கையாளர்களுக்கு KTM நிறுவனம் வழங்கி வருகிறது.

அதற்குள் 10 வருடங்கள் முடிய போகுதா!! இந்தியாவில் KTM பிராண்டின் புதிய மைல்கல்!

இதுகுறித்து Bajaj Auto நிறுவனத்தின் தலைவர் சுமீத் நராங் பேசுகையில், கேடிஎம் இந்தியாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும். இந்த காலக்கட்டத்தில் நாங்கள் ட்யூக், ஆர்சி, அட்வென்ச்சர் என எங்களது மோட்டார்சைக்கிள் வரிசையை விரிவுப்படுத்தியுள்ளோம். மேலும், இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 500 ஷோரூம்கள் மற்றும் பட்டறைகளுக்கு எங்களது நெட்வொர்க்கை பெரிதாக்கியுள்ளோம்.

அதற்குள் 10 வருடங்கள் முடிய போகுதா!! இந்தியாவில் KTM பிராண்டின் புதிய மைல்கல்!

2020ஆம் ஆண்டில் நாங்கள் எங்களது சுவீடன் பிராண்டை (Husqvarna) அறிமுகப்படுத்தினோம். அதனை தொடர்ந்து கேடிஎம் பைக் உரிமையாளர்களுக்காக ஒரு அதிநவீன, சிறந்த க்ளாஸ் KTM Pro-Experience திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்த மைல்கல்களே எங்களுக்கு உற்சாகத்துடன் முன்னேற வைக்கின்றன. எங்களது கொண்டாட்டத்தை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுக்கிறோம் என்றார்.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM, World’s #1 premium motorcycle brand celebrates 10 successful years in India. Over the past decade, KTM has consistently built aspiration amongst the performance seeking young biking enthusiasts with motorcycles that are at the heart of it – “Ready to Race”. This philosophy has enabled KTM to build & grow the premium motorcycling segment by staying ahead of the curve in terms of performance, technology, design, features, and experience.
Story first published: Friday, August 27, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X