வாகன உற்பத்தியில் களமிறங்கிய லெனோவோ... செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனம்...

செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனத்தை லெனோவோ வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாகன உற்பத்தியில் களமிறங்கிய லெனோவோ... செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனம்...

மின்வாகன பயன்பாட்டை நோக்கி இந்த உலகமே மிக வேகமாக நகர தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக, உலக நாடுகள் முன்னெடுத்து வரும் மின் வாகன ஊக்குவிப்பு நடவடிக்கை, விரைவில் பெட்ரோல்-டீசல் வாகனங்களின் இயக்கமே இல்லாத உலகத்தைக் கொண்டு வரும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வாகன உற்பத்தியில் களமிறங்கிய லெனோவோ... செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனம்...

இந்த நிலையை உணர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கவனத்தை மின் வாகன தயாரிப்பின் பக்கம் திருப்பியிருக்கின்றன. மின்வாகனங்கள் மட்டுமின்றி சில வேற்று தொழில் செய்து வந்த நிறுவனங்களும்கூட இப்பணியில் களமிறங்க தொடங்கியிருக்கின்றன.

வாகன உற்பத்தியில் களமிறங்கிய லெனோவோ... செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனம்...

இதற்கு மிக சிறந்த எடுத்துக் காட்டு ஓலா நிறுவனம். பிரபல கால் டாக்சி நிறுவனமான இது மிக விரைவில் உலக நாடுகள் பலவற்றில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இது மின்வாகனத்தை களமிறக்க திட்டமிட்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாகன உற்பத்தியில் களமிறங்கிய லெனோவோ... செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனம்...

ஓலா கால் டாக்சி நிறுவனத்தைப் போல இன்னும் சில நிறுவனங்கள் மின் வாகனங்களைக் களமிறக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றது. அந்தவகையில், பிரபல லெனோவோ நிறுவனம் தற்போது மின்வாகன தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றது. இது தற்போது ஓர் ஸ்கேட்டர் ரக இருசக்கர ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாகன உற்பத்தியில் களமிறங்கிய லெனோவோ... செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனம்...

செல்போன் மற்றும் லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களைத் தயாரித்து வரும் லெனோவோ உற்பத்தி செய்த முதல் மின்சார வாகனம் இதுவே ஆகும். எம்2 எனும் பெயரிலேயே இவ்வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்மாதிரி மாடலிலேயே இவ்வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் விற்பனைக்கான உற்பத்திக்கு இவ்வாகனம் உயர்த்தப்படவில்லை.

வாகன உற்பத்தியில் களமிறங்கிய லெனோவோ... செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனம்...

விரைவில் இதற்கான நடவடிக்கையிலும் நிறுவனம் களமிறங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஸ்கேட்டர் ரக ஸ்கூட்டர் 1,115மிமீ நீளம் x 515மிமீ அகலம் x 1,115 உயரம் எனும் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. டிராஃபிக் நிறைந்த சாலைகளில் கூட மிக சுலபமான இயக்கத்தை வழங்கும் நோக்கில் இந்த அளவு வடிவமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

வாகன உற்பத்தியில் களமிறங்கிய லெனோவோ... செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனம்...

இதனை மடித்து வைத்துக் கொள்ளும் வசதியையும் லெனோவோ வழங்கியிருக்கின்றது. ஆகையால், இயக்கப்படாத நிலையில் இதை கையாள்வது மிக சுலபம். குறிப்பாக, கார் போன்ற பிற வாகனங்களில் அதிக இடத்தைப் பிடிக்காமல் ஒரு ஓராமாக வைக்க இந்த அம்சம் உதவும். இது, சுமார் 120 கிலோ வரை தாங்கும் திறன் கொண்டது.

வாகன உற்பத்தியில் களமிறங்கிய லெனோவோ... செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனம்...

ஆகையால், சற்று பருமான உடல் கொண்டவர்களாலும் இதனை பயன்படுத்த முடியும். எம்2 ஸ்கூட்டரின் ஹேண்டில் பாரில் சிறிய திரை கொடுக்கப்பட்டுள்ளது. ரைடருக்கு தேவையான தகவல்களை வழங்கும் வகையில் இத்திரை கொடுக்கப்பட்டுள்ளது.

வாகன உற்பத்தியில் களமிறங்கிய லெனோவோ... செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனம்...

சார்ஜிங் அளவு, இன்னும் எத்தனை கிமீ பயணிக்க முடியும் மற்றும் எவ்வளவு வேகத்தில் பயணிக்கின்றோம் என்பது போன்ற பல்வேறு தகவல்களை இது வழங்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும். ஒரு முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 30 கிமீ தூரம் பயணிக்க முடியும்.

வாகன உற்பத்தியில் களமிறங்கிய லெனோவோ... செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனம்...

வரும் மார்ச் 27ம் தேதி முதல் இந்த ஸ்கேட்டர் ரக ஸ்கூட்டரை பிலிப்பைன்ஸ் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது லெனோவோ. அந்நாட்டு மதிப்பில் 19,995 என்ற ஆரம்ப விலையிலேயே இது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்திய மதிப்பில் இது ரூ. 30 ஆயிரம் ஆகும்.

வாகன உற்பத்தியில் களமிறங்கிய லெனோவோ... செல்போனை போல மிக குறைந்த விலையில் மின்சார வாகனம்...

அதேசமயம், இதன் அறிமுகமாக 16,995 என்ற பிலிப்பைன்ஸ் மதிப்பில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதற்கான புக்கிங் வருகின்ற மார்ச் 18ம் தேதி தொடங்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக லெனோவோ அறிவித்திருக்கின்றது. இந்த வாகனத்தை இந்தியா கொண்டு வருவதற்கான எந்த எண்ணமும் இந்த நிறுவனத்திடம் இல்லை என்பதை நம்மால் தெளிவாக உணர முடிகின்றது.

Most Read Articles
English summary
Lenovo Launched M2 Electric Kick Scooter In Philippines: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Friday, March 19, 2021, 19:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X