பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

மோட்டார்சைக்கிளை ரைடு செய்ய எந்தவொரு ஆணுக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அதிலும் குறிப்பாக இளைஞர்களில் பெரும்பாலானோரிடம் விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள் ஒன்றை வாங்குவது கனவாக உள்ளது. சிலர் குறிப்பிட்ட பிராண்டின் மோட்டார்சைக்கிளை வாங்குவதையே இலட்சியமாக வைத்துள்ளனர்.

பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

உதாரணத்திற்கு, உறுமும் சத்தத்திற்காக ராயல் என்பீல்டிற்கு இருப்பது போல். அதேபோல் சிலருக்கு மோட்டார்சைக்கிள்களின் ஹெட்லைட்கள் மட்டுமே குறிப்பாக பிடித்திருக்கலாம். அத்தகையவர்களுக்காக, 500சிசி-க்குள் சிறப்பான வடிவமைப்பில் ஹெட்லைட்டை கொண்ட சில மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310

ஹெட்லைட்களை பற்றி பார்க்கும்போது, அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை முதலில் பார்க்கவில்லை என்றால் அதில் அர்த்தமே இல்லை. ஏனெனில் அந்த அளவிற்கு சிறப்பாக மாட்டின் கொம்பு வடிவில் இந்த அப்பாச்சி பைக் ஹெட்லைட்டை கொண்டுள்ளது. இதனால் வேகமாக செல்லும்போது ஆர்ஆர்310 பைக்கை முந்துவதற்கு நம் நாட்டில் எவர் ஓருவரும் சற்று பயப்படுவர்.

பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் தயாரித்த இந்த அப்பாச்சி பைக்கின் தோற்றத்தை பற்றி உங்களுக்கு கூறவே தேவையில்லை என்று தான் நினைக்கிறேன். பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே சவால்விடும் தோற்றத்தை கொண்டது. அதற்கு இதன் டெயில்லைட் தான் ஓர் சிறந்த உதாரணம்.

பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

கேடிஎம் ஆர்சி 125/ 200/ 390

தற்போதைய 125சிசி, 200சிசி மற்றும் 390சிசி கேடிஎம் ஆர்சி பைக்குகளின் பின்பக்க டெயில்லைட் ஒரே ஒரு கொம்பு போன்றதான வடிவில், எல்இடி விளக்குகளாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஸ்டைலிஷான டெயில்லைட்களுள் இத்தகைய டெயில்லைட்களும் அடங்குகின்றன.

பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

ஹோண்டா சிபி200எக்ஸ்

150-200சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் சமீபத்தில் ஹோண்டா பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பைக், சிபி200 எக்ஸ் ஆகும். இதனால் மற்ற பாகங்களை போன்று பின்பக்க டெயில்லைட்டையும் மாடர்னான தோற்றத்தில் பெற்றுள்ளது.

பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளாக கொண்டுவரப்பட்டுள்ள சிபி200 எக்ஸ்-இன் பின்பக்க X-வடிவ டெயில்லைட் பல தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவதை சொல்லியே ஆக வேண்டும். இது இதன் பருத்த பின் டயருக்கு மிகவும் எடுப்பாக உள்ளது.

பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன்/ விட்பிளேன் 250

ஹஸ்க்வர்னா பிராண்டை பற்றி சிலர் கேள்விப்படாமல் இருக்கலாம். ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பு தான் ஸ்வார்ட்பிளேன் 250 & விட்பிளேன் 250 பைக்குகள் மூலமாக இந்திய சந்தையில் இந்த மற்றொரு ஆஸ்திரிய நிறுவனம் நுழைந்திருந்தது.

பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

வடிவமைப்பில் ஹஸ்க்வர்னா பைக்குகள் மிகவும் ஸ்டைலிஷானவை. குறிப்பாக பின்பக்கத்தில் நறுக்கப்பட்டது போன்ற வடிவமைப்பினால் இவற்றில் டெயில்லைட் ஆனது பின்சக்கரத்திற்கு சரியாக மேலே, பின் இருக்கைக்கு அடியில் ப-வடிவில் வழங்கப்படுகிறது.

பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

பஜாஜ் பல்சர்

பல்சர் பைக்குகள் அனைத்திலும் டெயில்லைட் அருமையான டிசைனில் இருக்கும் என்பது ஊரறிந்த விஷயம். அதேநேரம் மிகவும் காஸ்ட்லீயான தோற்றத்தில் இல்லாமல், பைக்கின் மற்ற பாகங்களுக்கு ஏற்ப டெயில்லைட் பல்சர் பைக்குகளில் பொருத்தப்படுகின்றன. பஜாஜ் ஆட்டோவின் இந்த அணுகுமுறை பைக்கின் விலையை கட்டுப்படுத்துகிறது.

பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

பல்சர் பைக்குகள் அனைத்திலும் கிட்டத்த ஒரே மாதிரியாகவே டெயில்லைட் வழங்கப்படுகிறது. இதே டிசைனை சற்று திருத்தியமைத்து தான் கேடிஎம் நிறுவனம் அதன் ஆர்சி பைக்குகளுக்கு டெயில்லைட்டை வடிவமைக்கிறது. அதிகப்பட்சமாக பார்த்தால், இளைஞர்களின் ஃபேவரட் மோட்டார்சைக்கிளுள் ஒன்றாக விளங்கும் பல்சர் 220-இல் மிகவும் ஸ்டைலாக உள்ளது.

பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

ஹோண்டா எக்ஸ்-பிளேட்

விற்பனையில் அவ்வளவாக ஜொலிக்காவிட்டாலும், ஹோண்டா எக்ஸ்-பிளேடின் டெயில்லைட் டிசைனை நாம் நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும். அதற்கு முழு தகுதியும் இதன் தலைக்கீழான நங்கூர-வடிவ டெயில்லைட்டிற்கு உள்ளது. இருப்பினும் இதன் டெயில்லைட்டின் மீது சில புகார்களும் எழுகின்றன.

பின்பக்க டெயில்லைட்டில் மிரட்டும் டாப் பிராண்டின் பைக்குகள்!! 500சிசி-க்கு கீழ் உள்ளவைகளை பற்றிய ஓர் அலசல்!

அதாவது இந்த ஹோண்டா பைக்கின் டெயில்லைட் அமைப்பில் மத்தியில் உள்ள எல்இடி விளக்கு சில நேரங்களில் மற்ற வாகனங்களுக்கு தெளிவாக தெரிவது இல்லையாம். குறிப்பாக இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, சற்று தூரமாக பின்னால் வரும் வாகனத்தில் இருப்பவரால் இதன் டெயில்லைட்டை எளிதில் அடையாளம் முடிவதில்லையாம்.

Most Read Articles

English summary
Motorcycles with the Best Looking Taillights.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X