மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய இந்தியாவின் அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

பெங்களூரை சேர்ந்த மந்த்ரா ரேஸிங் நிறுவனம் பைக்குகளுக்கு அதிவேக திறனை வழங்கும் கருவிகள் மற்றும் ட்யூனிங் செய்வதில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், சிறப்பான ஆக்சிலரேஷனுடன் அதிவேகமாக செல்லும் வகையில் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் மாடலை மந்த்ரா ரேஸிங் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

 மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

இந்த பைக்கின் செயல்திறனை சோதிப்பதற்காக ஓடுபாதையில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் சிறப்பு அழைப்பின் பேரில் டிரைவ்ஸ்பார்க் தள குழுவும் பங்கேற்றது. அதிசெயல்திறன் மிக்க இந்த பைக் மாடலை ஹில் க்ளைம்ப் எனப்படும் மலையேற்ற பைக் பந்தயத்தில் சாம்பியனும், டிராக் பந்தய வீரருமான பாபா சடகோபன் மற்றும் தேசிய டிராக் பந்தயத்தில் நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஹேமந்த் முத்தப்பா ஆகியோர் பரிசோதனை நடத்தினர்.

மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில் மந்த்ரா ரேஸிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டேஜ் II ஸ்போர்ட் பேக்கேஜ் பொருத்தப்பட்டு இருந்தது. மேலும், அதிவேகத்தை பைக் எட்டுவது குறித்த தரவுகளை பெறுவதற்கான சாதனங்கள் மற்றும் வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. மேலும், ஜிபிஎஸ் அடிப்படையில் செயல்படும் பெர்ஃபார்மென்ஸ் மீட்டர்களான டிராகி, வேலென்ஸ் மற்றும் ஜி டெக் புரோ ஆகியவையும் பைக்கில் இருந்த வீடியோ கேமராவுடன் இணைக்கப்பட்டு இருந்தது. சோதனை ஓட்டத்தின் தரவுகளை சரிபார்த்து டிராகி அப்ளிகேஷனில் வெளியிடுவதற்கு இது வாய்ப்பை வழங்கியது.

மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

விசேஷ கருவிகள் பொருத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை சில முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் போதுமான தரவுகள் பெற்ற நிலையில், இந்தியாவின் அதிவேகமும், அதிவிரைவான செயல்திறனை அந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் பெற்றிருப்பது உறுதியானது.

இதன்படி, ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் 0 - 100 கிமீ வேகத்தை 5.53 வினாடிகளில் எட்டியதுடன் குவார்ட்டர் மைல் எனப்படும் வரையறுக்கப்பட்ட தூரத்தை 13.93 வினாடிகளில் எட்டி அசத்தியது. மேலும், ஜிபிஎஸ் கருவிகள் அடிப்படையில், இந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் மணிக்கு 174 கிமீ வேகத்தை தொட்டு அசத்தியதும் தெரிய வந்தது. மந்த்ரா ரேஸிங் நிறுவனத்தின் பல்வேறு சிறப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்களுடன் இந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் அதிவிரைவானதாகவும், வேகமானதாகவும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கிற்கு நான்குவிதமான பெர்ஃபார்மென்ஸ் பேக்கேஜுகளை மந்த்ரா ரேஸிங் உருவாக்கி இருக்கிறது. ஸ்டேஜ் I ஸ்ட்ரீட், ஸ்டேஜ் I ஸ்ட்ரீட் ப்ளஸ், ஸ்டேஜ் II ஸ்போர்ட் மற்றும் ஸ்டேஜ் II ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய பெயரில் இவை கிடைக்கின்றன. மேலும், ஐந்தாவது பெர்ஃபார்மென்ஸ் கிட்டை மந்த்ரா ரேஸிங் நிறவனம் உருவாக்கி வருகிறது.

மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

ஸ்டேஜ் I ஸ்ட்ரீட்

இந்த பெர்ஃபார்மென்ஸ் பேக்கேஜ் அடிப்படை செயல்திறனை வழங்கும் சாதனங்களை பெற்றுள்ளது. இந்த கிட்டில் டிபிஎம் பெர்ஃபார்மென்ஸ் ஏர் ஃபில்டர், எஞ்சின் பவரை குறிப்பிட்ட அளவில் வைப்பதற்கான எஞ்சின் இன்டேக்கில் பொருத்தப்படும் ரெஸ்ட்ரிக்டர் பிளேட் மற்றும் காற்று உட்செலுத்தும் திறன் அதிகரிப்பதற்கு ஏற்றவாறு ட்யூனிங் செய்யப்பட்ட இசியூ கட்டுப்பாட்டு சாதனம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. பைக்கில் வழங்கப்படும் அதே புகைப்போக்கி அமைப்பில் எந்த மாறுதல்களும் செய்ய வேண்டியதில்லை என்பதுடன், எஞ்சின் சுழல் வேகம் 7,400 ஆர்பிஎம் என்ற அளவிலேயே இருக்கும்.

இந்த பேக்கேஜில் எஞ்சின் பவர் 45.59 பிஎச்பி மற்றும் 56.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் இருக்கும். அதாவது, சாதாரண மாடலைவிட பவர் 0.4 பிஎச்பி வரையிலும், டார்க் திறன் 0.1 என்எம் வரையிலும் கூடுதலாக இருக்கும். அதேநேரத்தில், 4,000 முதல் 6,000 ஆர்பிஎம் இடையிலான எஞ்சின் சுழல் வேகத்தில் பவர் 2.2 பிஎச்பி பவரையும், 3.2 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். 0 - 100 கிமீ வேகத்தை 6.39 வினாடிகளில் எட்டிவிடும். சாதாரண மாடலைவிட 0.3 வினாடிகள் குறைவான வேகத்திலேயே 0 - 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். குவார்ட்டர் மைல் தூரத்தை 14.85 வினாடிகளில் எட்டிவிடும். சாதாரண பைக்கைவிட இது 0.26 வினாடிகள் குறைவு. ஸ்டேஜ் I ஸ்ட்ரீட் பேக்கேஜுக்கு ஜிஎஸ்டி வரி உள்பட ரூ.18,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

ஸ்டேஜ் I ஸ்ட்ரீட் ப்ளஸ்

முதல் பேக்கேஜைவிட சற்றே கூடுதலான செயல்திறனை வழங்கும். இந்த பேக்கேஜில் டிபிஎம் பெர்ஃபார்மென்ஸ் ஏர் ஃபில்டர், டி-ரெஸ்ட்ரிக்டர் பிளேட், ட்வின் ஸ்லிப் ஆன் AEW T-102 சைலென்சர், விசேஷ இசியூ ஆகியவை இடம்பெற்றுள்ளன. சாதாரண மாடலைப் போன்றே, இதன் எஞ்சின் சுழல் வேகம் 7,400 ஆர்பிஎம் ஆக இருக்கும்.

மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

இந்த பேக்கேஜில் எஞ்சின் அதிகபட்சமாக 46.49 பிஎச்பி பவரையும், 59 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சாதாரண மாடலைவிட 1.2 பிஎச்பி பவரையும், 2.3 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வெளிப்படுத்தும். இந்த பேக்கேஜில் 0 - 100 கிமீ வேகத்தை 6.13 வினாடிகளில் எட்டிவிடும். சாதாரண மாடலைவிட 0.56 வினாடிகள் குறைவான நேரத்தில் 0 - 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். குவார்ட்டர் மைல் தூரத்தை 14.66 வினாடிகளில் எட்டும். அதாவது, சாதாரண மாடலைவிட 0.45 வினாடிகள் குறைவான நேரத்தில் குவார்ட்டர் மைல் தூரத்தை எட்டிவிடும். இந்த பேக்கேஜிற்கு ஜிஎஸ்டி உள்பட ரூ.44,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

ஸ்டேஜ் II ஸ்போர்ட்

பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளுக்கு இது சிறந்ததாக இருக்கும். இதில், டிபிஎம் பெர்ஃபார்மென்ஸ் ஏர் ஃபில்டர், டீ-ரெஸ்ட்ரிக்டர் பிளேட், ஸ்பெஷலான 2 இன் 1 சைலென்சர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இரண்டு சைலென்சர்கள் இருந்தாலும், எஞ்சினின் செயல்திறனை முழுமையாக வெளிக்கொணர முடியாத நிலை உள்ளது.

இதனை கருத்தில்கொண்டு விசேஷ சைலென்சரை மந்த்ரா ரேஸிங் உருவாக்கி இருக்கிறது. மிகவும் கவனமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும், சிறந்த சைலென்சர் சப்தத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டுள்ளது.

மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

மேலும், இந்த ஸ்டேஜ் பேக்கேஜில் இசியூ மிகச் சிறப்பான ட்யூனிங் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலைவிட எஞ்சின் சுழல் வேகம் 200ஆர்பிஎம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜ் மூலமாக ராயல் என்ஃபீல்டு 650 பைக் மிகச் சிறப்பான செயல்திறனையும், ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்கும்.

இந்த பேக்கேஜை பொருத்தினால், அதிகபட்சமாக 50.42 பிஎச்பி பவரையும், 60.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சாதாரண மாடலைவிட 5.23 பிஎச்பி பவரையும், 3.5 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 5.53 வினாடிகளில் எட்டிவிடும். மேலும், சாதாரண மாடலைவிட 1.16 வினாடிகள் குறைவான நேரத்தில் 0 - 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். குவார்ட்டர் மைல் தூரத்தை 13.93 வினாடிகளில் எட்டிவிடும். இந்த பேக்கேஜிற்கு ஜிஎஸ்டி உள்பட ரூ.85,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

ஸ்டேஜ் II ஸ்போர்ட் ப்ளஸ்

இந்த பேக்கேஜில் அதிகபட்சமான செயல்திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டேஜ் II ஸ்போர்ட் பேக்கேஜில் இருக்கும் அதே சாதனங்கள்தான் வழங்கப்படுகின்றன. இந்த பேக்கேஜில் கூடுதலாக ஹை-லிஃப்ட் கேம்சாஃப்ட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஒரு முக்கிய உதிரிபாகத்தின் மூலமாக செயல்திறன் வியக்க வைக்கும் அளவில் அதிகரித்துள்ளது. இந்த உதிரிபாகத்தின் மூலமாக செயல்திறன் அதிகரிப்பதற்கு தக்கவாறு இசியூ சாதனத்திலும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

இந்த பேக்கேஜ் கொண்ட மாடலை நாங்கள் ஓட்டிப் பார்க்கவில்லை. இந்த நான்கு பேக்கேஜுகளும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம். இதுதவிர்த்து, ஐந்தாவதாக ஒரே பேக்கேஜையும் மந்த்ரா ரேஸிங் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஸ்டேஜ் III ரேஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

ஸ்டேஜ் III ரேஸ்

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில் அதிவேக சாதனையை படைக்கும் வகையில் இந்த பேக்கேஜ் உருவாக்கப்படுகிறது. டிபிஎம் பெர்ஃபார்மென்ஸ் ஏர் ஃபில்டர், டி-ரெஸ்ட்ரிக்டர் பிளேட், 2 இன் 1 சைலென்சர், ஹை லிஃப்ட் கேம்சாஃப்ட், அமெரிக்காவை சேர்ந்த எஸ்&எஸ் சைக்கிள்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் 865சிசி போர் கிட் ஆகியவை கொடுக்கப்படுகிறது. சாதாரண மாடலைவிட 217சிசி கூடுதல் போர் அளவை பெற்றிருப்பதால், அதிகபட்ச செயல்திறனை பெறும் வாய்ப்பை கொடுக்கும்.

மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

இதற்கு வழங்கப்படும் சாதனங்கள் மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படும் வகையில் விசேஷ இசியூ கொடுக்கப்படுகிறது. இந்த பேக்கேஜ் மூலமாக எஞ்சின் சுழல் வேகம் அதிகபட்சமாக 7,600 ஆர்பிஎம் ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜ் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

மந்த்ரா ரேஸிங் உருவாக்கிய அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்!

மந்த்ரா ரேஸிங் உருவாக்கி இருக்கும் அனைத்து பேக்கேஜுகளையும் டிரைவ்ஸ்பார்க் குழு சோதித்து பார்த்தது. ஒவ்வொரு பேக்கேஜிற்கும் இருக்கும் செயல்திறன் வேறுபாடுகளை எளிதாக உணர முடிந்தது. எடை குறைப்பு காரணமாக, இந்த பைக்குகள் மிகச் சிறப்பான கையாளுமை மற்றும் செயல்திறனை வழங்குகின்றன. இந்த பேக்கேஜுகளை வாங்க விரும்புவோர் [email protected] என்ற இ-மெயில் முகவரி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலமாக தொடர்பு கொண்டு வாங்கலாம். மேலும், மந்த்ரா ரேஸிங் வீடியோக்களை யூ-ட்யூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்.

இதுதொடர்பாக டிரைவ்ஸ்பார்க் குழுவிடம் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவு செய்யவும்.

Most Read Articles
English summary
India's Fastest Royal Enfield Interceptor 650 tuned by Mantra Racing records 174kph top speed and 13.91 seconds in drag race. The Royal Enfield Interceptor 650 top speed record, quarter mile time, 0-60kph, O-100kph runs are verified by Dragy. Read now to learn about Royal Enfield performance parts/modifications: air filter, ECU, exhaust, and other aftermarket parts by Mantra Racing.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X