தவம் இருந்து வாங்கிய ஓலா மின்சார ஸ்கூட்டர்... சொட்டையும், வெடிப்புமா வந்திருக்கு! குவியும் தொடர் புகார்கள்!

வெடிப்பு, சொட்டை என பல்வேறு பாதிப்புகளுடன் ஓலா மின்சார ஸ்கூட்டர் பலருக்கு டெலிவரி கொடுக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழும்ப ஆரம்பித்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தவம் இருந்து வாங்கிய ஓலா மின்சார ஸ்கூட்டர்... சொட்டையும், வெடிப்புமா வந்திருக்கு! குவியும் தொடர் புகார்கள்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா மின்சார ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் மிக சமீபத்தில் தொடங்கின. டிசம்பர் 15ம் தேதியில் இருந்து டெலிவரி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புக்கிங் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு கட்டமாக இ-ஸ்கூட்டர்கள் டெலிவரி கொடுத்து வருகின்றது, ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிர்வாகம்.

தவம் இருந்து வாங்கிய ஓலா மின்சார ஸ்கூட்டர்... சொட்டையும், வெடிப்புமா வந்திருக்கு! குவியும் தொடர் புகார்கள்!

அந்தவகையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பெற்றவர்களில் சிலர் தங்களுக்கு பாதிக்கப்பட்ட வாகனத்தை ஓலா நிறுவனம் டெலிவரி செய்திருப்பதாக புகார் கொடுக்க தொடங்கியிருக்கின்றனர். சொட்டை, வெடிப்பு, சரியாக பேனல்கள்பொருத்தப்படாத நிலை, சார்ஜ் செய்வதில் குறைபாடு மற்றும் குறைவான ரேஞ்ஜ் என பல்வேறு பாதிப்புகளை அதன் வாடிக்கையாளர்கள் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

தவம் இருந்து வாங்கிய ஓலா மின்சார ஸ்கூட்டர்... சொட்டையும், வெடிப்புமா வந்திருக்கு! குவியும் தொடர் புகார்கள்!

இதுபோன்று, தாங்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை ஒரு சிலர் சமூக வலைதளங்கள் வாயிலாக ஓலா எலெக்ட்ரிக் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி இருக்கின்றனர். அந்தவகையில், டுவிட்டரின் வாயிலாக ஓர் இளைஞர், "ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது டெலிவரி பெற்றேன். வெடிப்புகள் மற்றும் சொட்டையுடன் காணப்பட்ட ஸ்கூட்டரே எனக்கு கொடுக்கப்பட்டது.

தவம் இருந்து வாங்கிய ஓலா மின்சார ஸ்கூட்டர்... சொட்டையும், வெடிப்புமா வந்திருக்கு! குவியும் தொடர் புகார்கள்!

இதுகுறித்து மேனேஜரிடத்தில் புகார் தெரிவித்தபோது டெலிவரி கொடுக்கப்படும்போது சரி செய்யப்பட்டு வழங்கப்படும் என்றார். நான் புதிய தயாரிப்பிற்கே பணம் கட்டினேன், புதுப்பிக்கப்பட்ட (மறு சீரமைப்பு செய்யப்பட்ட) வாகனத்திற்கு அல்ல" என அந்த இளைஞர் மிக காட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

தவம் இருந்து வாங்கிய ஓலா மின்சார ஸ்கூட்டர்... சொட்டையும், வெடிப்புமா வந்திருக்கு! குவியும் தொடர் புகார்கள்!

இதுபோன்று வெவ்வேறு புகார்கள் ஓலா மின்சார ஸ்கூட்டர் குறித்து தற்போது எழும்ப தொடங்கியிருக்கின்றன. ஒரு சிலர் தாங்கள் டெஸ்ட் ரைடு செய்த ஓலா ஸ்கூட்டரைக் காட்டிலும் தங்களுக்கு கிடைத்திருக்கும் இ-ஸ்கூட்டர் குறைவான ரேஞ்ஜை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

தவம் இருந்து வாங்கிய ஓலா மின்சார ஸ்கூட்டர்... சொட்டையும், வெடிப்புமா வந்திருக்கு! குவியும் தொடர் புகார்கள்!

மற்றொருவர் தனக்கு கிடைத்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 24 மணி நேரத்திலேயே ரெக்கவரி வேன் வாயிலாக வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். இவ்வாறு, தொடர் புகார்கள் ஓலா மின்சார ஸ்கூட்டர் குறித்து எழும்பிய வண்ணம் இருக்கின்றது.

தவம் இருந்து வாங்கிய ஓலா மின்சார ஸ்கூட்டர்... சொட்டையும், வெடிப்புமா வந்திருக்கு! குவியும் தொடர் புகார்கள்!

இந்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவ தொடங்கியிருக்கின்றது. மேலும், இந்த தகவல் ஓலா மின்சார ஸ்கூட்டரை புக் செய்துவிட்டு அதன் டெலிவரிக்காக காத்திருப்போர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில், சமூக வலை தளத்தில் ஒருவரின் புகாருக்கு பதிலளித்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பவிஷ், உடனடியாக ரீபிளேஸ் செய்ய நடவடிக்க எடுப்பதாக தெரிவித்தார்.

தவம் இருந்து வாங்கிய ஓலா மின்சார ஸ்கூட்டர்... சொட்டையும், வெடிப்புமா வந்திருக்கு! குவியும் தொடர் புகார்கள்!

இந்த தகவல் சற்றே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பல மாத காத்திருப்பு பின்னர் இப்போதே டெலிவரி கொடுக்கப்பட்டு வருகின்றது. நிறுவனம், ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) ஆகிய இரு விதமான தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

தவம் இருந்து வாங்கிய ஓலா மின்சார ஸ்கூட்டர்... சொட்டையும், வெடிப்புமா வந்திருக்கு! குவியும் தொடர் புகார்கள்!

எஸ்1 தேர்வின் விலை ரூ. 99,999க்கும், எஸ்1 ப்ரோ தேர்விற்கு ரூ. 1,29,999 நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஃபேம் 2 திட்டத்தின்கீழ் கிடைக்கக் கூடிய எக்ஸ்-ஷோரூம் விலை மதிப்பு இதுவாகும். ஓலா எஸ்1 மணிக்கு 90 கிமீ வேகம் மற்றும் 121 கிமீ ரேஞ்ஜ் ஆகிய திறன்களுடன், எஸ்1 ப்ரோ மணிக்கு 115 கிமீ வேகம் மற்றும் 181 கிமீ ரேஞ்ஜ் ஆகிய திறன்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

Most Read Articles

English summary
Many customers begin complaining about ola electric scooter
Story first published: Tuesday, December 28, 2021, 18:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X