இதுக்கு முன்னாடி இவ்ளே தெளிவா பாத்திருக்க வாய்ப்பே இல்ல! RoyalEnfield வெளியிட்ட வீடியோவில் காட்சி தந்த Hunter!

ராயல் என்பீல்டு (Royal Enfield) வெளியிட்ட ஓர் வீடியோவில் இன்னும் சில மாதங்களில் அறிமுகமாக இருக்கும் ஹண்டர் 350 (Hunter 350) அதன் தரிசனத்தை வழங்கியிருக்கின்றது. வீடியோ மற்றும் பைக் குறித்த முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இதுக்கு முன்னாடி இவ்ளே தெளிவா பாத்திருக்க வாய்ப்பே இல்ல... Royal Enfield வெளியிட்ட வீடியோவில் காட்சி தந்த Hunter 350!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய இருசக்கர வாகனங்களின் பட்டியலில் பல புதுமுக மோட்டார்சைக்கிள்கள் அடங்கியிருக்கின்றன. அதில், ஒன்றே நிறுவனத்தின் ஹண்டர் 350 (Hunter 350) மோட்டார்சைக்கிள் மாடல். இது ஓர் 350 சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனம் ஆகும். மிக விரைவில் இந்த இருசக்கர வாகனத்தை ராயல் என்பீல்டு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதுக்கு முன்னாடி இவ்ளே தெளிவா பாத்திருக்க வாய்ப்பே இல்ல... Royal Enfield வெளியிட்ட வீடியோவில் காட்சி தந்த Hunter 350!

வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் இந்த இருசக்கர வாகனம் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிப்ரவரி மாதத்தில் நிறுவனம் ஸ்க்ரேம் 411 எனும் புதுமுக மாடலை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஆண்டின் மைய ப குதியில் புதிய ஹண்டர் 350 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுக்கு முன்னாடி இவ்ளே தெளிவா பாத்திருக்க வாய்ப்பே இல்ல... Royal Enfield வெளியிட்ட வீடியோவில் காட்சி தந்த Hunter 350!

Image Courtesy: Grasholt Vlogs

இந்த மாதிரியான சூழ்நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஹண்டர் 350 பைக் இடம் பெற்றிருக்கின்றது. ஏற்கனவே முழுமையான மறைப்புகளுடன் இந்த இருசக்கர வாகனம் அதன் தரிசனைத்தை வழங்கி வந்தநிலையில் தற்போது அதன் பின் பக்கம் மிகவும் தெளிவாகவும், முழுமையாகவும் காட்சி தந்திருக்கின்றது. ராயல் என்பீல்டு வெளியிட்டிருக்கும் ஓர் வீடியோவிலேயே அது காட்சியளித்திருக்கின்றது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

வீடியோவில், 1.23 தொடங்கி 1.31 வரையிலான கால அளவில் பைக் இடம் பெற்றிருக்கின்றது. பைக்கின் ஒற்றை துண்டு இருக்கை அமைப்பு மற்றும் பின் பகுதி தோற்றத்தை வைத்தே அது விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹண்டர் 350 என்பதனை வாகன உலக வல்லநுர்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். இத்துடன், முன்னதாக காட்சியளித்த ஹண்டர் 350 முன் மாதிரி மாடலுடனும் இது ஒத்துப்போகின்றது.

இதுக்கு முன்னாடி இவ்ளே தெளிவா பாத்திருக்க வாய்ப்பே இல்ல... Royal Enfield வெளியிட்ட வீடியோவில் காட்சி தந்த Hunter 350!

நிறுவனம் தற்போது ஹிமாலயன் பைக்கைக் கொண்டு அடர் பனி நிறைந்த பகுதியான தென் துருவத்திற்கு (சவுத் போல்) பயணிக்கத் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்து வெளியிடப்பட்ட வீடியோவிலேயே ஹண்டர் 350 இடம் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுக்கு முன்னாடி இவ்ளே தெளிவா பாத்திருக்க வாய்ப்பே இல்ல... Royal Enfield வெளியிட்ட வீடியோவில் காட்சி தந்த Hunter 350!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 பைக் மாடலைத் தழுவியே புதிய ஹண்டர் 350 உருவாக்கப்பட்டு வருகின்றது. மீட்டியோர் 350 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கைத் தழுவி ஹண்டர் 350 உருவாகி வருவதனால், அப்பைக்கில் இடம் பெற்றிருக்கும் 349 சிசி எஞ்ஜினே ஹண்டரிலும் இடம் பெற இருக்கின்றது.

இதுக்கு முன்னாடி இவ்ளே தெளிவா பாத்திருக்க வாய்ப்பே இல்ல... Royal Enfield வெளியிட்ட வீடியோவில் காட்சி தந்த Hunter 350!

இந்த எஞ்ஜின் உடனே கடந்த காலங்களில் மறைப்புடன் காணப்பட்ட ஹண்டர் 350 அதன் தரிசனத்தை வழங்கியது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 22 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதில் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட இருக்கின்றது. அடுத்த ஆண்டு சற்றே மலிவான விலைக் கொண்ட மோட்டார்சைக்கிளாக ஹண்டர் 350 சந்தையை அலங்கரிக்க இருக்கின்றது.

இதுக்கு முன்னாடி இவ்ளே தெளிவா பாத்திருக்க வாய்ப்பே இல்ல... Royal Enfield வெளியிட்ட வீடியோவில் காட்சி தந்த Hunter 350!

இருசக்கர வாகனத்தின் அறிமுகத்திற்கு இன்னும் பல நாட்கள் இருக்கின்றன. ஆகையால், இன்னும் பல தகவல்கள் பைக் குறித்து வெளியாகத வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, ஹண்டர் 350 இல் இடம் பெற இருக்கும் நவீன கால அம்சங்கள் மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய தகவல்கள் வெளிவர வண்ணம் இருக்கின்றன. அதேநேரத்தில், ட்ரிப்பர் நேவிகேஷன், டிஜிட்டல் திரை உடன் கூடிய பெரிய அளவிலான அனலாக் வேகமானி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப அம்சங்கள் இப்பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆகையால், இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் இந்த பைக்கின் வருகை மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு: 3இல் இருந்து 8வது ஸ்லைடர் வரை கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Meteor 350 based hunter 350 teased in royal enfield official video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X