ஜானி பிராவோ கார்டூன் ஸ்டிக்கருடன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்!! ஹைதராபாத்தை சேர்ந்தது!

இந்தியாவில் பைக் கஸ்டமைசேஷன் என்றாலே, பெரும்பாலும் அது ராயல் என்பீல்டு பைக்காக தான் இருக்கும். இதற்கு உதாரணங்களை பல முறை நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம்.

ஜானி பிராவோ கார்டூன் ஸ்டிக்கருடன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்!! ஹைதராபாத்தை சேர்ந்தது!

ஏனெனில் சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளை மாடிஃபை செய்வது எளிமையானதாக உள்ளது. இதனாலேயே ராயல் என்பீல்டு பைக்கை வாங்கும் பெரும்பான்மையான உரிமையாளர்கள் பைக்கை மாடிஃபை செய்த பின்பே உபயோகிக்க துவங்குகின்றனர்.

ஜானி பிராவோ கார்டூன் ஸ்டிக்கருடன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்!! ஹைதராபாத்தை சேர்ந்தது!

இந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த எமோர் கஸ்டம்ஸ் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனத்தின் மூலமாக மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 பைக்கை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

Image Courtesy: Eimor Customs

ஜானி பிராவோ கார்டூன் ஸ்டிக்கருடன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்!! ஹைதராபாத்தை சேர்ந்தது!

இந்த கஸ்டமைஸ்ட் தண்டர்பேர்டு பைக்கிற்கு ‘ஜே பீ' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 90களில் வரவேற்பை பெற்ற பிரபலமான ஜானி பிராவோ கார்டூன் நிகழ்ச்சியில் இருந்து இந்த பெயரை வைத்துள்ளதாக இந்த பைக்கின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஜானி பிராவோ கார்டூன் ஸ்டிக்கருடன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்!! ஹைதராபாத்தை சேர்ந்தது!

ஜே பீ என்கிற ஸ்டிக்கரை ஓட்டுனர் இருக்கைக்கு கீழேயும் மற்றும் ஹெல்மெட்டிலும், ஜானி பிராவோ கார்டூன் நிகழ்ச்சியில் வரும் ஹீரோ கதாபாத்திரத்தை பைக்கின் பெட்ரோல் டேங்கிலும் பார்க்கலாம். இதற்கு முன்னர் பல கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்குகளை பார்த்துள்ளோம், ஆனால் அவை அனைத்தை காட்டிலும் இந்த தண்டர்பேர்டு பைக்கின் பெட்ரோல் டேங்க் இந்த பிரத்யேக ஸ்டிக்கர் உடன் அருமையாக உள்ளது.

ஜானி பிராவோ கார்டூன் ஸ்டிக்கருடன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்!! ஹைதராபாத்தை சேர்ந்தது!

அதேபோல் ராயல் என்பீல்டு லோகோவும் ஸ்டைலிஷான எழுத்துகளில் நம்மை வசீகரிக்கிறது. நீலம்- இளம் க்ரே என இரு விதமான நிறங்களில் இந்த கஸ்டம் தண்டர்பேர்டு 350 பைக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்கள் சில பாகங்களில் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளன.

ஜானி பிராவோ கார்டூன் ஸ்டிக்கருடன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்!! ஹைதராபாத்தை சேர்ந்தது!

மற்றப்படி பைக்கின் பெரும்பாலான பாகங்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. இந்த கஸ்டமைசேஷன் பைக்கின் முன்பக்கத்த்கில் எல்இடி ஹெட்லேம்ப்பையும், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க புதிய சிங்கிள்-பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலும் வழங்கப்பட்டுள்ளன.

ஜானி பிராவோ கார்டூன் ஸ்டிக்கருடன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்!! ஹைதராபாத்தை சேர்ந்தது!

ராயல் என்பீல்டு நிறுவனம் வழக்கமாக பொருத்தும் முன் ஃபோர்க்குகள் நீக்கப்பட்டு, அவற்றிற்கு மாற்றாக புதிய யுஎஸ்டி ஃபோர்க்குகள் சஸ்பென்ஷனிற்காக பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு ஏற்ப முன்பக்கத்தில் கஸ்டம் ஃபெண்டர் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

ஜானி பிராவோ கார்டூன் ஸ்டிக்கருடன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்!! ஹைதராபாத்தை சேர்ந்தது!

இவற்றுடன் புதிய இருக்கைகளை இந்த தண்டர்பேர்டு பைக் பெற்றுள்ளது. இதில் பின் இருக்கையை தேவை என்றால் நீக்கி கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு ஏற்ப பின் இருக்கை பயணி சாய்ந்து கொள்ளும் வகையில் புதிய முதுகு தலையணை சேர்க்கப்பட்டுள்ளது.

ஜானி பிராவோ கார்டூன் ஸ்டிக்கருடன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்!! ஹைதராபாத்தை சேர்ந்தது!

அதேபோல் பின் ஃபெண்டரும் கஸ்டம் யூனிட்டாக இருக்க, பின்பக்கத்தில் புதிய டெயில்லைட், டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் கூடுதல் எல்இடி ப்ரேக் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்க டெயில்லைட் STOP' முத்திரையில் மூடியை கொண்டுள்ளது.

ஜானி பிராவோ கார்டூன் ஸ்டிக்கருடன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்!! ஹைதராபாத்தை சேர்ந்தது!

இவற்றுடன் தோற்றத்தை மெருக்கேற்றும் முயற்சியாக சைடு பேனல்கள் மற்றும் கஸ்டம் சைடு பெட்டகங்களை கொண்டுள்ள இந்த தண்டர்பேர்டு 350 பைக்கில் புதிய காற்று வடிக்கட்டியையும் பார்க்க முடிகிறது. இவை மட்டுமின்றி துப்பாக்கி ஸ்டைலில் எக்ஸாஸ்ட் குழாய், சற்று முன்னோக்கி பொருத்தப்பட்ட ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி என இந்த பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மாடிஃபிகேஷன் மாற்றங்கள் ஏராளம்.

Most Read Articles

English summary
Check Out This Johnny Bravo-Themed Custom Royal Enfield Thunderbird.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X