Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மூன்று ஸ்பெஷல் எடிசன் டூ-வீலர்களை அறிமுகம் செய்த உலகின் பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனம்... ஏன் தெரியுமா?
உலகின் மிகவும் பழமையான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று மூன்று ஸ்பெஷல் எடிசன் இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்குகளின் திடீர் அறிமுகம் எதற்காக என்பதைக் கீழே காணலாம்.

உலகின் பழமை வாய்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் மோட்டோ குஸ்ஸி-யும் ஒன்று. இந்த நிறுவனமே தற்போது நூறாம் ஆண்டு கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றது. ஆமாங்க இந்த நிறுவனம் இவ்வுலகில் கால் தடம் பதித்து நடப்பாண்டுடன் நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்த வரலாற்று சிறப்புமிக்கு நிகழ்வை முன்னிட்டு புதிய ஸ்பெஷல் எடிசன் இருசக்கர வாகனங்களையும் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. தனது நூற்றாண்டு தினத்தை விழாவாக கொண்டாடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் தனது வாடிக்கையாளர்களையும் கவர வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு எடிசன் வாகனங்களை மோட்டோ குஸ்ஸி அறிமுகப்படுத்தியுள்ளது.

வி7, வி9 மற்றும் வி85 டிடி எனும் இருசக்கர வாகனங்களையே அது சிறப்பு பதிப்பு இருசக்கர வாகனங்களாக அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதனை இவ்வருடம் முழுவதும் விற்பனைச் செய்ய மோட்டோ குஸ்ஸி திட்டமிட்டிருக்கின்றது. பொதுவாக ஸ்பெஷல் எடிசன் வாகனங்கள் என்றால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைச் செய்வது வழக்கம்.

ஆனால், இந்த நிலையை மாற்றி இந்த ஆண்டு முழுவதும் ஸ்பெஷல் எடிசன் வாகனங்களை விற்க இருப்பதாக மோட்டோ குஸ்ஸி அறிவித்திருக்கின்றது. இந்த வாகனங்கள் வழக்கமாக விற்பனைக்குக் கிடைக்கும் மோட்டோ குஸ்ஸி வாகனங்களைப் போன்றில்லாமல் சில சிறப்பு கூறுகளைத் தாங்கியிருக்கும். நூற்றாண்டை நினைவுப்படுத்தும் வகையில் ஸ்பெஷல் ஸ்டிக்கர் மற்றும் நிறங்கள் ஆகியவற்றை இது பெற்றிருக்கின்றது.

இதுமட்டுமின்றி, சாடின் ஃபினிஸ்ட் ப்யூவல் டேங்க், தங்க முலாம் பூசப்பட்ட முன் பக்க மட்குவார்ட் போன்ற பல்வேறு ஸ்பெஷல் உடல் கூறுகளையும் இப்பைக்கில் பெற்றிருக்கின்றது. தற்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த பிரத்யேக அம்சங்கள் மோட்டோ குஸ்ஸியின் பழங்கால தயாரிப்புகளை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

குறிப்பாக, 350 பியல்பெரோ பைக்கைப் போன்று இது காட்சியளிக்கிறது. இது பல்வேறு சிறப்புகளையும், அவார்டுகளையும் நிறுவனத்திற்கு பெற்று தந்த இருசக்கர வாகனம் ஆகும். செப்டம்பர் 9 முதல் 12 வரையிலான தினங்களில் நூற்றாண்டைக் கொண்டாட மோட்டோ குஸ்ஸி திட்டமிட்டிருக்கின்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்க ஆயிரக் கணக்கான வாகன ஆர்வலர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மோட்டோ குஸ்ஸி நிறுவனம் 1921ம் ஆண்டிலேயே இந்த உலகில் கால் தடம் பதித்தது. இத்தாலியின் மண்டெல்லோ டெல் லாரியோ எனும் பகுதியையே தலைமையமாகக் கொண்டு தற்போதும் இந்நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

2004ம் ஆண்டு ஐரோப்பாவின் மிகப் பெரிய மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான பியாஜியோ குழுமத்தின் பங்குகளை இந்நிறுவனம் வாங்கியது. இதுபோன்ற பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க செயல்களை இந்நிறுவனம் பல ஆண்டுகளாக உலகில் மேற்கொண்டு வருகின்றது. எனவேதான் இந்நிறுவனத்தின் நூற்றாண்டு தின கொண்டாட்டத்தை எதிர்நோக்கி வாகன ஆர்வலர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.