ஒரே நேரத்தில் 3 மின்சார வாகனங்களை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!!

எர்த் எனர்ஜி நிறுவனம் அதன் மூன்று புதுமுக மின்சார வாகனங்களை இந்திய வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் 3 மின்சார வாகனங்களை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் எர்த் எனர்ஜி. இந்நிறுவனமே, தனது மூன்று புதுமுக மின்சார வாகனங்களை தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. கிளைட் (GLYDE), எவோல்வே இசட் (Evolve Z), எவோல்வே ஆர் (Evolve R) எனும் மூன்று மின்சார இருசக்கர வாகனங்களை அது அறிமுகம் செய்திருக்கின்றது.

ஒரே நேரத்தில் 3 மின்சார வாகனங்களை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இதில், கிளைட் மாடல் மின்சார இருசக்கர வாகனத்திற்கு ரூ. 92 ஆயிரம் என்ற விலையையும், எவோல்வே இசட் மாடலுக்கு ரூ. 1.3 லட்சம் என்ற விலையையும், எவோல்வே ஆர் மாடலுக்கு ரூ. 1.42 லட்சம் என்ற விலையையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இவையனைத்தும் 96 சதவீதம் உள்ளூர் தயாரிப்புகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரே நேரத்தில் 3 மின்சார வாகனங்களை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!!

பெரும்பாலும் உள்ளூர் பாகங்கள் பயன்படுத்தி இருக்கின்ற காரணத்தால் மத்திய அரசின் மானியம் திட்டம் இந்த வாகனங்களுக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்த மின்சார இருசக்கர வாகனங்கள் ஓர் முழுமையான சார்ஜில் 110 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறனுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ஒரே நேரத்தில் 3 மின்சார வாகனங்களை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இதுமட்டுமின்றி செல்போன் செயலி மூலம் கட்டுப்படுத்தக் கூடிய வசதி, செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை மின்சார இருசக்கர வாகனத்தில் இடம் பெற்றிருக்கும் திரையிலேயே கண்டறியும் வசதி என எக்கசக்க தொழில்நுட்ப வசதிகள் இந்த மின்சார வாகனத்தில் அறிமுகம் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒரே நேரத்தில் 3 மின்சார வாகனங்களை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!!

எனவேதான், இந்த புதிய வாகனங்கள் மின் வாகன ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. தொடர்ந்து, மின்சார இருசக்கர வாகனங்களில் நேவிகேஷன் வசதி, முன்னதாக பயணித்த பயணங்களின் வரலாறு, நேரலையாக இருக்கும் இருப்பிடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி என கூடுதல் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வசதிகள் இந்த மின் வாகனங்களில் இடம் பெற்றிருக்கின்றன.

ஒரே நேரத்தில் 3 மின்சார வாகனங்களை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இவற்றின் அறிமுகம் குறித்து எர்த் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ருஷி எஸ் கூறியதாவது, "சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வு, பெட்ரோல் விலை அதிகரித்தல் மற்றும் கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகள் போன்றவற்றில் இருந்து தீர்வு இந்த மின்சார வாகனங்கள் உதவும். மின்சார வாகனங்களின் நுகர்வு முன்பை விட இப்போது அதிகரித்திருப்பதை நாங்கள் உணர்கின்றோம். இந்நிலை எங்களின் மின் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என நாங்கள்" என்றார்.

ஒரே நேரத்தில் 3 மின்சார வாகனங்களை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!!

எர்ஜ் எனர்ஜி நிறுவனத்தின் உற்பத்தி ஆலையும் மும்பையிலேயே செயல்பட்டு வருகின்றது. ஆண்டு ஒன்றிற்கு 12 ஆயிரம் யூனிட்டுகள் தயாரிப்பு என்ற விகிதத்தில் அது செயல்பட்டு வருகின்றது. இதனை விரைவில் 65 ஆயிரம் யூனிட்டுகளாக உயர்த்த இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

ஒரே நேரத்தில் 3 மின்சார வாகனங்களை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!!

அதாவது, நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும்போது ஆண்டிற்கு 65,000 ஆயிரம் யூனிட்டுகள் என உற்பத்தி திறனை அதிகிரிக்க இருப்பதாக எர்ஜ் எனர்ஜி தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்திற்கு ஏழு விற்பனையாளர்கள் மையங்களே செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் மும்பையில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Mumbai Based Earth Energy Launches 3 Electric Two Wheeler In India. Read In Tamil.
Story first published: Wednesday, February 3, 2021, 19:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X