2021 எஃப்3 ரோஸ்ஸோ பைக்கை வெளியிட்டது எம்வி அகுஸ்டா!! அப்டேட் செய்யப்பட்ட என்ஜின் & எலக்ட்ரானிக்ஸ்...

2021 எம்வி அகுஸ்டா எஃப்3 ரோஸ்ஸோ மோட்டார்சைக்கிளை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அழகான, அதேநேரம் செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிள்கள் என்று பார்த்தோமேயானால், அதில் எம்வி அகுஸ்டா பைக் நிச்சயம் ஒன்றாக இருக்கும். குறிப்பாக பந்தயங்களில் அகுஸ்டா பைக்கை பலர் விரும்புவதற்கு காரணமும் இதுதான்.

இந்த நிலையில் இந்த இத்தாலியன் சூப்பர்பைக் நிறுவனம் 2021ஆம் ஆண்டிற்காக அதன் எஃப்3 ரோஸ்ஸோ மோட்டார்சைக்கிளை யூரோ-5க்கு இணக்கமானதாக அப்டேட் செய்துள்ளது. அத்துடன் இந்த சூப்பர் பைக் புதிய எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகளையும் பெற்றுள்ளது.

இவற்றின் மூலமாக பைக்கின் ட்ரைவிங் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது. அதேபோல் 2021 எஃப்3 ரோஸ்ஸோ பைக்கின் தோற்றத்திலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. எஃப்3 மாடலின் தோற்றம், எம்வி அகுஸ்டாவின் அழகான மோட்டார்சைக்கிள்களுள் முதன்மையானதாக விளங்கும் எஃப்4-இல் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் எஃப்3 ரோஸ்ஸோவில் சிங்கிள்-பேட் ஹெட்லைட், முழுவதும் பேனல்களால் மறைக்கப்பட்ட டிசைன், ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்களுடன் முன்பக்க ஹெட்லைட் டூமில் பொருத்தப்பட்ட பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் மற்றும் பிளவுப்பட்ட வடிவிலான இருக்கைகள் உள்ளிட்டவை 2021ஆம் ஆண்டிற்காகவும் தொடரப்பட்டுள்ளன.

எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பு சிறிது திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, எக்ஸாஸ்ட் குழாய் பகுதியில் முன்பு வழங்கப்பட்டு வந்த சில்வர் நிற வெப்ப கவசம் தற்போது கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக அகோஸ்டினி சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் 2021 எஃப்3 ரோஸ்ஸோ பைக்கில் புதிய 5.5 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை வழங்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்ட இந்த திரையினை மை ரைடு அப்ளிகேஷன் மூலம் ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைத்து கொள்ளலாம். மேலும் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷனையும் வழங்கும் இந்த திரை, ஓட்டுனர் தனது பயண விபரத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடவும் உதவும் வகையில் உள்ளது.

ஏற்கனவே கூறியதுதான், புதிய எம்.ஐ.யு ப்ளாட்ஃபாரத்துடன் அப்டேட் செய்யப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் தொழ்குப்புகளை 2021 எம்வி அகுஸ்டா எஃப்3 ரோஸ்ஸோ பைக் பெற்றுள்ளது. இந்த வகையில் காண்டினெண்டல் மூலமாக தயாரிக்கப்பட்ட கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் மிகவும் உணர்வுதிறன்மிக்க ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் இந்த சூப்பர் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்கமாக பைக் தூக்குவதை கட்டுப்படுத்தும் வீலிங் கண்ட்ரோலும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. 2021 எஃப்3 ரோஸ்ஸோ மாடலிலும் வழக்கமான 789சிசி, இன்லைன் 3-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் முன்பே கூறியதுபோல் இந்த என்ஜின் அமைப்பிலும் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது, சிலிண்டர் சுவர்களில் டைமண்ட்-போன்ற கார்பன் கோட்டிங் மற்றும் ரீடிசைனிலான வால்வு நேரங்கள் உள்ளிட்டவை என்ஜின் அமைப்பில் உட்புற உராய்வை குறைக்க உதவும்.

அதேபோல் புதியதாக வழங்கப்பட்டுள்ள இன்ஜெக்டர்கள், கூடுதலாக எரிபொருள் செலுத்துதல் அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறது எம்வி அகுஸ்டா நிறுவனம். 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 13,000 ஆர்பிஎம்-இல் 145 பிஎச்பி மற்றும் 10,100 ஆர்பிஎம்-இல் 88 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

Most Read Articles
English summary
MV Augusta unveiled 2021 F3 Rosso motorcycle.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X